தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, December 25, 2019

அனைவருக்கும் உள்ளம் நிறைந்த கிறிஸ்துமஸ் 
திருநாள் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
உங்கள் K. கிள்ளிவளவன்.

Tuesday, November 12, 2019

=======================================
விருப்ப ஓய்வு மற்றும் ஜபல்பூர் மத்திய
செயற்குழு விளக்கக் கூட்டம்.
========================================
16-11-19  ஒரே நாள்  
இரு இடங்களில் விளக்கக் கூட்டம் 
=========================================
முற்பகல் 12 மணி முதல் மதியம் 1:30 மணி வரை
தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பகத்தில் 
நமது மாநிலச் செயலர் 
தோழர். K. நடராஜன் MA அவர்கள் 
உரையாற்றுகிறார். 
==============================================================
மாலை 4 மணிக்கு மன்னை
தொலைபேசியகத்தில் 
மாபெரும் சிறப்புக் கூட்டம் 
===========================
மேனாள் மாநிலச் செயலர் 
தோழர். ஆர். பட்டாபிராமன் அவர்களுடன் 
இந்நாள் மாநிலச் செயலர் 
தோழர். K. நடராஜன் அவர்களும் 
விளக்கவுரையாற்றுகிறார்கள்.
======================
வருக! பயன் பெறுக!
======================
கேள்விகளை தயார் செய்து 
தெளிவுபடக் கேளுங்கள்!
பதிலை உள்வாங்கி
 பல்வகையில் சிறந்திடுங்கள்!
======================================
கா. கிள்ளிவளவன், மாவட்டச் செயலர். 
========================================

Thursday, October 31, 2019

தோழர். குருதாஸ்தாஸ்குப்தா மறைந்தார்.
31-10-2019



AITUC தொழிற்சங்கத்தின் துவக்க காலத் தலைவர், நாடாளுமன்றத்தில் சிங்கமென கர்ஜித்த தோழர்.  குருதாஸ்தாஸ்குப்தா அவர்கள், 83வது வயதில், கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று அதிகாலை 6 மணிக்கு காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கின்றோம். 

மறைந்த அம் மாபெரும் தலைவருக்காக கிளைகள்தோறும் கொடியினை அரைக்கம்பத்தில் 3 நாட்கள் பறக்கவிட்டு அஞ்சலி செலுத்த வேண்டுகிறேன். 

AITUC நூற்றாண்டு இன்று துவங்கும் இந்நாளில்  அதைத் துவக்கி வைத்து  நம்மிடம் விட்டுச் செல்கிறார். தொழிலாளி வர்க்கத்தின் மிகப் பெரும் கேடயமாக விளங்கிய AITUC பேரியக்கத்தை மேலும் வலுவாக்கி வெகுஜன அரங்கில் பளிச்சிட வைப்போம்! தோழர் குப்தாவின் தியாகத்தை நினைவு கூர்வோம்.

தோழரின் மறைவை நெஞ்சில் நிறுத்தி தஞ்சை மாவட்ட NFTE பேரியக்கம் கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.

இவண்,
கா. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர்.

Wednesday, October 16, 2019

AUAB 
ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்

இடம்: மேரிஸ் கார்னர் இணைப்பகம் தஞ்சாவூர். 
நாள்: 18-10-19 காலை 9 மணி முதல் 


உண்ணாவிரதத்தில் அனைத்து சங்கத்தின் (AUAB ) முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்பார்கள். மேலும் பங்கேற்க விரும்புபவர்கள் அலுவலகத்திற்கு CL கொடுத்து விட்டு பங்கேற்க வேண்டுகிறோம். 

குறைந்தபட்சம் கிளைக்கு 4 பேர் என்ற அளவில் மாலை 3 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டுகிறேன்.

வாழ்த்துக்களுடன்,
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர், NFTE, தஞ்சை.

Wednesday, October 9, 2019


 

வெற்றி விழா 
திருவாரூர் கிளை ஆண்டு விழா மற்றும் 
பணி நிறைவு பாராட்டு விழா.

Sunday, September 22, 2019

மண்ணுக்கேற்ற மாண்பு! 
மரபுகளை உடைத்தெறியா மாட்சிமை!

தஞ்சையில் NFTE தடம் பதித்த வரலாறு 

     நாம் ஏற்கனவே கூறியவாறு தமிழகத்திலும், தஞ்சையிலும்  முதலிடம்  என்பதும், சென்ற தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் சதவீதத்தில் வென்றிருக்கிறோம் என்பதும் உண்மையாயிருக்கிறது. 

7 வது உறுப்பினர் சரிபார்ப்பு.              8 வது உறுப்பினர் சரிபார்ப்பு.

சங்கம்     வாக்குகள்        %                   சங்கம்     வாக்குகள்        %   
NFTE            441           67.53                  NFTE            311           78.14
BSNLEU       131           20.06                  BSNLEU          60           15.08

சென்ற முறை EU வை விட 310             இந்த  முறை 251 வாக்குகள்
வாக்குகள் கூடுதலாகப் பெற்றோம்.     கூடுதலாகப் பெற்றோம்.

சென்ற தேர்தலை விட NFTE                 சென்ற தேர்தலை விட BSNLEU  
இம்முறை 10.61 % கூடுதல்                  இம்முறை 4.98 % குறைவாக
வாக்குகள் பெற்றுள்ளது.                       வாக்குகள் பெற்றுள்ளது.

      இந்த முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணம் EU மத்திய சங்கத்தின் மீதான நம்பிக்கைக் குறைவு மற்றும் செயல்பாடின்மைதான்.  
     என் மீது சக தோழர்கள் வைத்துள்ள நம்பிக்கை.  நான் சென்ற விடமெல்லாம் என்னோடு சுற்றிச் சுற்றி வந்தார்கள், சொந்தக் காசில்.

    தஞ்சையில் தலைவர்களை வைத்து கூட்டம் போட்டு விட்டோம். எனவே, மாவட்டத்தின் மைய நகரமான மன்னையில் பட்டாபியை வைத்து ஒரு கூட்டம் போடலாம் என்று நினைத்தபோது அந்தப் பணியை மன்னை கிளை ஏற்றுக் கொண்டது. அந்தப் பணிக்கு 5000 ரூபாய் நன்கொடையளித்து உதவிய தோழியர். லைலாபானு அவர்களை இந்த நேரத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன்.   (150 தோழர்கள் குழுமிய சிறப்பான  கூட்டம்  அது.)

     அடுத்து சம்பளம் பெறாத நிலையில் தேர்தலை  திருவிழா போல தோழர்கள் 2000, 1000, 500  என்று நிதியளித்து கொண்டாடினார்கள்.  அதெல்லாம் எம்மை நெகிழச் செய்த சம்பவங்கள்.  அதோடு 
வாட்சப்பையும், பேஸ்புக்கையும் நல்ல தகவல்களோடு தினம் நிறைத்தார்கள் நம் தோழர்கள். 

      வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு உங்கள் நம்பிக்கைக்குரியவனாக தொடர்ந்து செயல்படுவேன் என்றும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்!  

அன்புடன், 
கா. கிள்ளிவளவன், தஞ்சை. 
22-09-19.                                                                                                               



       

                                                     

Friday, September 20, 2019

மாவட்டச் செயலர்கள் கூட்டம்

 தமிழ் மாநிலச் சங்கம் 
மாவட்டச் செயலர்கள் கூட்டம்
----------------------------------------
 26/09/2019 - வியாழன் - காலை 09 மணி 
CTO வளாகம் -  N F T E சங்க அலுவலகம் - தஞ்சை 
-------------------------------------------------------------------------------
தலைமை 
     தோழர். .காமராஜ் - மாநிலத் தலைவர்

வரவேற்புரை  
 தோழர். K.கிள்ளிவளவன் - தஞ்சை மாவட்டச் செயலர்
தோழியர். A.லைலாபானு  - மகளிர் ஒருங்கிணைப்புக் குழு

முன்னிலை  
தோழர். T. பன்னீர்செல்வம் -  மாவட்டத் தலைவர், தஞ்சை  
தோழர். A. சேகர் -  மாவட்டப் பொருளர், தஞ்சை 

அறிமுக உரை
 தோழர். கி.நடராஜன் - மாநிலச் செயலர்

ஆய்படு பொருள்
  • வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் முடிவுகள் பரிசீலனை
  • தேர்தல் வெற்றி விழா 
  •  அடுத்த மாநில செயற்குழு
  • BSNL புத்தாக்கம் – நமது அணுகுமுறை
  • BSNL நிதி நிலை - வெள்ளை அறிக்கை கோருதல் 
  • புதிய கருவிகள் தொழில் நுட்பத்தேவை குறித்த  நிர்வாக திட்டம் குறித்து அறிக்கை கோருதல்.
  • ஊதியம்  வழங்க முன்னுரிமை கோருதல்
  • 2019 BSNL பொதுத்துறையாக  மாற்றம் பெற்ற 20 ஆண்டுகள்
  • அமைப்பு நிலை 
  • தலமட்டப்  பிரச்சனைகள்
  • இதர தலைவர் அனுமதியுடன்

நிதி நிலை 
தோழர். L. சுப்பராயன்  - மாநிலப் பொருளர்

நன்றியுரை 
தோழர். G.S. முரளிதரன் -  மாநில உதவிச் செயலர்

தோழர்களே... வருக...

Wednesday, September 18, 2019


NFTE BSNL  தமிழ் மாநிலம்
**********************
மாவட்டச் செயலர்கள் கூட்டம் 

26-09-19 காலை 9:00 மணி.
NFTE சங்க அலுவலகம், தஞ்சை.
 CTO வளாகம்,  ரயிலடி அருகில்.

தலைமை:
தோழர். ப. காமராஜ் அவர்கள்,
தமிழ் மாநிலத் தலைவர்.

விளக்கவுரை:
தோழர். கே. நடராஜன் அவர்கள்,
தமிழ் மாநிலச் செயலர்.

மற்றும் தலைவர்கள், தோழர்கள்.

அனைவரும் வருக!

தோழமையுடன்,
கா. கிள்ளிவளவன், 
தஞ்சை மாவட்டச் செயலர்.

Wednesday, September 11, 2019

Thursday, September 5, 2019


அதிர்ச்சி! ஆச்சரியம்!! 
நம்மைத் தேடி நித்தம் ஒரு செய்தி கலவையாக!
உவகையோடு வாருங்கள்! உண்மையை உணர்த்துவார் நம் 
தஞ்சை மண்ணின் தன்னேரில்லாத் தலைவன்!
படிப்பாளி பட்டாபியைக் காண 
மன்னையில் குவிந்திடுவோம்
   மடை திறந்த வெள்ளமாய்! 
வருக! வருகவென  
அன்போடு அழைக்கிறேன் - கிள்ளி.


Saturday, August 24, 2019

இறுதி வாக்காளர் பட்டியல் 

16/09/2019 அன்று நடைபெறவுள்ள 
8வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலுக்கான 
தமிழக வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்  - 401
மாவட்ட வாரியாக வாக்காளர் எண்ணிக்கை

CGM அலுவலகம்  - 265
கோவை  - 787
தருமபுரி  - 227
கும்பகோணம்  - 282
குன்னூர்   - 146
தஞ்சாவூர்  - 401
நெல்லை  - 432
கடலூர்  - 492
ஈரோடு  - 477
மதுரை  - 839
பாண்டி  - 169
திருச்சி  - 723
விருதுநகர்  - 261
காரைக்குடி   - 279
நாகர்கோவில்  - 253
சேலம்  - 743
தூத்துக்குடி  - 232
வேலூர்  - 674


தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 839 வாக்காளர்களும்...
 குறைந்தபட்சமாக குன்னூரில் 146 வாக்காளர்களும் உள்ளனர். 
மொத்த வாக்காளர்கள்... 7682

Wednesday, August 14, 2019




அனைவருக்கும் 
இனிய சுதந்திர தின 
நல்வாழ்த்துக்கள்!


Thursday, July 25, 2019

மன்னார்குடி  கிளைச் செயலர் 
தோழர் K. பன்னீர்செல்வம் அவர்களின் 
பணி நிறைவு பாராட்டு விழா!

அம்மாப்பேட்டை தோழர். R. வீராசாமி JE 
அவர்களின் மகள் திருமண விழா 
==================================
அனைவரும் வருக!



Wednesday, July 24, 2019

Last date 
for filing Income Tax Returns 
extended to 31.8.2019

மன்னை - கூத்தாநல்லூர் கிளைகள் 
இணைந்து நடத்தும் 
தஞ்சை மாவட்டச் செயற்குழு - 27-07-19
==============================





BSNL நிலை பற்றி 
CGM அலுவலக மாவட்டச் சங்க சிறப்புக்  கூட்டத்தில் 
தோழர் பட்டாபி அவர்களின் உரை
=========================================================
BSNL நிறுவனம் நட்டத்தில் இயங்கி வருகின்ற நிலையில் மூடபடலாம் என பல்வேறு செய்திகள் உலா வருகின்றன. நான் முதலில் உறுதியாக, அறுதியிட்டு கூறுகிறேன். BSNL  நிறுவனத்தை யாரும் எளிதாக மூடிவிட முடியாது.  ஒரு நிறுவனம் துவக்கிட விதிகள் உள்ளன.  அது போல மூடிவிட அதை விட கடுமையான விதிகள் உள்ளன.  அதன் நடைமுறைகள், விதிகள் நடைமுறைப்படுத்த பல காலம் பிடிக்கும். எனவே BSNL நிறுவனம் மூடிவிடும் என்ற அபாயம் இல்லை. புனரமைப்பு மறுகட்டமைப்பு மட்டுமே இன்றைய தேவையாகும் பரீசீலனையில் இருக்கிறது.  அதுவே அரசின் / நிர்வாகத்தின் நிலையாக உள்ளது. புனரமைப்பு சன்மானம் அல்ல.

BRPSE 2015ல் நோய் துவக்க நிலை தொற்றிய நிறுவனம் என எச்சரிக்கை செய்தது.  BRPSE ஒழிக்கப்பட்ட பின் அமைச்சகமே இந்த பணியை செய்து வந்தது . 2016ல் DPE பொதுத் துறைகள் மூடிவிட வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது. 2017 ல் BSNL துவக்க நிலை நலிவடைந்த நிறுவனம் என வகைப்படுத்தப்பட்டது. 2018 பொதுத் துறை சர்வேயின்படி BSNL, AIR INDIA, MTNL மூன்றும் மொத்த பொதுதுறைகளின் நட்டத்தில் 55% ஆக இருந்தது. ரூ1000 கோடிக்கு மேல் நட்டம் அடைந்த பொதுத்துறை நிறுவனங்கள் 8 மட்டுமே. அதில் BSNL மட்டுமே நட்டத்தில் முதன்மையாக உள்ளது. ஏர் இந்தியா அனுபவம் நமக்கு முன் உள்ளது. 2013 அமைச்சரவை முடிவு செய்து 10 ஆண்டுக்கு ரூ30,000,கோடி CAPITAL INFUSION வழங்கியது.  9 ஆண்டுகளில் 27000 கோடி வழங்கியபின்னும் நட்டம் மாறவில்லை.TRP/FRP என புனரமைப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. சொத்துக்களை விற்று ரூ5000 கோடி திரட்ட திட்டமிடப்பட்டது. அதற்காக சிறப்பு நிறுவனம் அமைக்கப்பட்டது.  ரூ 534 கோடி மட்டுமே விற்பனையில் திரட்ட முடிந்தது.ரூ 330 கோடி வாடகை பெறப்பட்டுள்ளது. IIM A அறிக்கை இது வரை பொதுவெளியில் வரவேயில்லை. அது 8 அம்சங்களில் பரிந்துரை செய்துள்ளது. 58 வயது கட்டாய ஓய்வு, விருப்ப ஓய்வு, டவர் கம்பெனி செயல்பாடு, OFC தனி டிவிஷன், உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் போர்டை கண்காணிக்க வெளிக்குழு கன்சல்டன்ட் நியமிக்க பரிந்துரைத்துள்ளது. MTNL க்கு டிலாய்டி பரிந்துரை உள்ளது. ஊதிய மாற்றம் அமுலாக்கிய பின் விருப்ப ஓய்வு திட்டம் வந்தால் சரியாக இருக்கும் எனக்  கூட பேசப்பட்டுள்ளது.
பொதுத்துறையில் 55 ஓய்வு வயது 34 வருடங்கள் கழித்து 58 ஆக்கப்பட்டது. 1996ல்மத்திய அரசு துறைகளில் 60 வயது ஆக்கப்பட்டது. பொதுத்துறையில் 60 வயது 1998ல் மாற்றம் செய்யப்பட்டது.  NTC நிறுவன ஊதிய போர்டு ஓய்வு வயதை குறைத்தது. பின்னர் 2000ல் நலிவடைந்த நிறுவனங்கள் அமைச்சக ஒப்புதல் பெற்று ஓய்வு வயதை குறைக்கலாம் என உத்திரவு வெளியிடப்பட்டது. பின்னர் 2005ல் இந்த உத்திரவு மாற்றம் பெற்று அமைச்சரவைக்கு பொறுப்பு மாற்றப்பட்டது. 
1996ல் 5 வது ஊதிய மாற்றத்திற்கு பின்னர் மத்திய அரசு FR 56 A வில் திருத்தம் செய்து ஓய்வு வயது 60 ஆக உயர்த்தியது.. மத்திய அரசு ஊழியராக இருந்து 2000க்கு பின் அரசு ஊழியரான நமக்கு DPE 2005 வழிகாட்டல்படி 58 வயது குறைப்பு உத்திரவு பொருந்துமா என்பது குறித்து எந்த விதியும் இல்லை. ஓய்வு வயது குறைப்பு (ROLL BACK) செய்ய விதி ஏதுமில்லை. அரசு எந்த வழிகாட்டுதல் இன்றி தன்னிச்சையாக செய்துவிட முடியாது. அப்படி செய்ய அரசு செய்ய துணிந்தால் சங்கம் போராடித்தான் மாற்றம் செய்யவேண்டும். VRS தனிநபர் விருப்பம். சங்கம் VRS கோர முடியாது. VRS பிந்தைய பிரச்சனை மிக கடுமையானது.
விருப்ப ஓய்வு திட்டத்தில் குஜராத் மாடல் 35/25 நாள். நலிவடைந்த மூடும் நிலையில் உள்ள நிறுவனம் என்றால் 45 நாள் தரலாம் என்றும் கூறப்படுகிறது.  அது VSS திட்டம் 3 மாத அறிவிப்பு கொடுத்து நீக்கப்படுவார்க்ள். 25% ஓய்வுதியத்தை விட கூடுதலாக வழங்கப்படும் என்பதை திட்ட கணக்கீடுகள் பார்த்தபின்னரே கூறமுடியும்.2018 DPE வழிகாட்டுதல் விருப்ப ஓய்வு பெற்று இன்சண்டிவ் பெற்றவர்களுக்கு ஊதிய மாற்ற நிலுவை கிடையாது என கூறுகிறது. முந்தைய உத்திரவுகள் நிலுவை வழங்கலாம் என கூறுகிறது. எது அமுலாகும் என பின்னர்தான் தெரியும். புனரமைப்பில் ஊழியர் செலவு குறைப்பு பிரதானமாக உள்ளது. விருப்ப ஓய்வு திட்டத்திற்கு ரூ 6000 கோடி தேவை. அரசு உத்திரவாதத்துடன் பாண்ட் வெளியிட்டு பின்னர் நிதி பெற்று வழங்க பரிசீலிக்கப்படுகிறது.  இதை அரசு ஏற்றுள்ளதாக தகவல். இதற்காக அரசு கடன் திட்டம் ஏதும் பரிசீலிக்கப்படவில்லை. 
29/10/2015 DPE வழிகாட்டுதல்படி வர்த்தக / நிதி, இயக்கம் என திட்டம் அமைச்சரவை வகுக்கவேண்டும்.மேலும் கடன் சீரமைப்பு, CAPEX / OPEX ஓய்வுதிய கொடை ஆகியவற்றை சிறப்பு நிறுவனம் சொத்தை விற்பதன் மூலம் செயல்படுத்த திட்டமிடப்படுகிறது.
4ஜி பெற ரூ 14000 கோடி மற்றும் 4 ஜி டவர் நிர்மாணிக்க செலவு 5 ஜி மாற்ற செலவு என நிதி வேண்டும்.
2018ல் 4ஜி சிம் 35 கோடி மூன்று நிறுவனங்களிலும் சேவை தரப்பட்டுள்ளது. வரும் 2024ல் 56 கோடி வாடிக்கையாளர்களில் BSNL லின் 3.5 கோடி வாடிக்கையாளர்க்கு ரூ25000 கோடி செலவு தேவையா என விவாதிக்கப்படுகிறது. 4ஜி யில் 85% டேட்டா, 13% 2ஜி டேட்டா, 2 ஜி டேட்டா 2% என சேவை உள்ளது.
ஓய்வூதிய மாற்றம் அடுத்த முக்கியமான பிரச்சனை. ஓய்வூதிய மாற்றத்தை ஊதிய மாற்றதுடன் இணைக்காமல் பிரிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஆனால் DOT மற்றும் அமைச்சகம் ஏற்கவில்லை.  ஓய்வூதிய மாற்றம் ஊதிய மாற்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
BWA அலைகற்றை பணம் காலதாமதாக வழங்கபட்டதால் ரூ3500 கோடி DOT, BSNL ல்க்கு வழங்க கோரி வருகிறது.
அமைச்சர் ரூ1000 கோடியை அவசர நிதியாக BSNL க்கு கோரி உள்ளார்.     IIM A பரிந்துரையில் 2019-20 மொத்த செலவு திட்ட மதிப்பில் வங்கிக்  கடன் 50 % பெற்றிட LOC அரசு வழங்கிட வேண்டும். இதை நாமும் கோர வேண்டும். 
மேலும் பல தோழர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து சிறப்பான உரையாக நிறைவுற்றது.

Tuesday, July 23, 2019


வா ழ் த் தி ம கி ழ் கி றோ ம் .

விஜயவாடா நகரில் நடைபெற்ற 
AIBSNLEA அதிகாரிகள் சங்க அகில இந்திய மாநாட்டில் 
AIBSNLEA  பொதுச்செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 
அருமைத் தோழர்  
S. சிவக்குமார் 
அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகின்றோம்.

 அயராத உழைப்பும்,
ஆற்றல் மிக்க ஆளுமையும்,
இனிய தோழமையுணர்வும் கொண்ட
அன்புத்தோழர் சிவக்குமார் அவர்களின் தலைமையில் 
AIBSNLEA  வெற்றி நடைபோட வாழ்த்துகின்றோம்.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR