தினம் ஒரு கருத்து
வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.
Wednesday, July 6, 2011
Monday, July 4, 2011
சேவைச் செய்திகள்
BSNL -ன் BROAD BAND சேவையில்
உங்களுக்கு புதிதாக ஒரு சலுகை.
உங்களுக்கு புதிதாக ஒரு சலுகை.
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள BB பிளானின்படி செலுத்த வேண்டிய மாத வாடகைத் தொகையை முன்னதாகவே செலுத்தினால் கீழ்க்கண்டவாறு பலனைப் பெறலாம்.
1. 10 மாதத் தொகையை கட்டினால் 1 ஆண்டு கால சேவை.
2. 18 மாதத் தொகையை கட்டினால் 2 ஆண்டு கால சேவை.
3. 2 ஆண்டுக்கான தொகையை கட்டினால் 3 ஆண்டு கால சேவை. அதோடு, கூடுதலாக ரூபாய் 1450 மதிப்புள்ள மொபைல் சிம்மில் வேலை செய்யும் வீட்டு போன் ( Fixed Wirless Phone ) இலவசமாக வழங்கப்படுகிறது.
PLAN CHANGE க்கு இது ஒரு தடை அல்ல.
அதோடு லேண்ட் லைன் வைத்திருப்பவர்கள் உங்கள் மொபைல் எண்ணை உடன் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பதிவு செய்யுங்கள். இதன் மூலம் உங்களின் கட்டண தொகை அறிவிப்பும், கட்டிய பின் கட்டி விட்டீர்கள் என்ற அறிவிப்பும் SMS மூலம் அனுப்பி வைக்கப்படும்.
வாடிக்கையாளர் சேவை மையம், BSNL, பட்டுக்கோட்டை.
சொசைட்டி செய்திகள்
சொசைட்டி செய்திகள்
(சாதாரணக் கடன் உச்சவரம்பு உயர்வு தொடர்பாக
சொசைட்டி தலைவர் திரு. வீரராகவன் அவர்களின்
30 - 06 - 11 -ம் தேதிய சுற்றறிக்கையிலிருந்து.)
1. 01-07-2011 முதல் சாதாரணக் கடன் தொகை ரூபாய் 3,50,000 ஆக உயர்த்தப்படுகிறது. இக் கடன் 90 மாதத் தவணைகளில் பிடித்தம் செய்யப்படும்.
2. பணிக் காலம் குறைவாக உள்ள அங்கத்தினர்களுக்கு அதிகப் பட்சக் கடன் வழங்கிட இயலாது.
3. கடன் பெறுபவர்கள் மாதத் தவணை தொகைகளில் நிலுவையின்றி பார்த்துக் கொள்ள வேண்டப்படுகிறார்கள். அனைவரும் எளிதாய் கடன் பெற இது உதவும்.
தோழமையுடன்,
எஸ். சிவசிதம்பரம்,
RGB, பட்டுக்கோட்டை.
Wednesday, June 15, 2011
சொசைட்டி செய்திகள்
சொசைட்டி செய்திகள்
கடந்த 14-06-11 அன்று RGB கூட்டம் சென்னை செங்குன்றத்தில் நடைபெற்றது.
சென்னை தொலைபேசியில் 55 (66) , தமிழ் மாநிலத்தில் 129 (143) என மொத்தம் 184 (209) RGB க்கள் பங்கேற்றனர்.
அனைத்து RGB க்களையும் வெள்ளானுர் கிராமத்தில் ஊழியர்களுக்காக வாங்கிப் போடப்பட்டிருந்த 95 ஏக்கர் நிலத்தை பார்வையிடச் செய்தனர். நிலப் பகுதி முழுமையும் நேர்த்தியாக முள் கம்பி வேலி போடப்பட்டு, முகப்பில் பாதுகாவல் அறையுடன் நுழைவாயில் வளைவும் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிக்க பாதுகாவலரும் போட்டிருக்கிறார்கள்.
பின்னர் நடைபெற்ற பிரதிநிதித்துவ மகா சபைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
1 . நிலம் முழுமையும் கண்டிப்பாக சொசைட்டி உறுப்பினர்களுக்கே வழங்கப்படும் என்று தலைவர் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
2 . இடைக்காலமாக சாதாரணக் கடன் ரூபாய் 25000 உயர்த்தி தரப்படுகிறது. இது 15-06 -11 முதலே அமுலுக்கு வருகிறது. 1 அல்லது 2 மாதத்திற்கு முன்னர் கடன் பெற்றவர்களும் உடன் இக் கடனைப் பெறலாம்.
3. ஜூலை மாதத்தில் சாதாரணக் கடன் 3 .25 லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயர்த்திட பெருமுயற்சி எடுக்கப்படும். அது கிடைக்கும் பட்சத்தில் குடும்ப நல நிதி தொகை ரூபாய் 400 -ரிலிருந்து 600 ஆக மாற்றப்படும். அத்துடன் இன்சூரன்ஸ் தொகை 2 லட்சம் என்பது 3 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
4 . வட்டி விகிதம் உயர்த்தப்பட மாட்டாது.
அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம்,
RGB
பட்டுக்கோட்டை.
Tuesday, June 7, 2011
தோழர் ஜெகன் நினைவு நாள்
ஜூன் - 7
இன்று தோழர் ஜெகன் நினைவு நாள்.
அவரது உழைப்பை,
செயல்பாட்டை,
தன்னலமில்லா செயல்திறனை
உள்வாங்குவோம்.
அவரது தியாகம் நமக்கு,
நமது துறைக்கு,
உழைப்போருக்கு ஆதர்சமாக
இருந்து வழிகாட்டும்.
மாவட்டச் சங்கம்,தஞ்சாவூர்.
Sunday, May 29, 2011
Thursday, May 26, 2011
சென்னை கூட்டுறவு சொசைட்டி செய்திகள்
1. Thrift fund க்கு வட்டி 1 % உயர்த்தப்பட்டுள்ளது.
2. 23 - 5 - 2011 முதல் நகைக் கடன் பெறும் தொகை கிராமுக்கு
ரூபாய் 1300 -ரிலிருந்து 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எஸ். சிவசிதம்பரம், RGB
பட்டுக்கோட்டை.
Friday, May 6, 2011
ஜெகன் இல்லம்
தமிழ் மாநிலச் சங்கக் கட்டிட
திறப்பு விழா!
தமிழக தொலைபேசி ஊழியர்களின் கனவு இல்லம், நமது சொந்தக் கட்டிடம் வருகிற மே ஒன்பதாம் தேதி திறக்கப்படவிருக்கிறது. ஜெகன் இல்லாத இது மாதிரியான பெரிய நிகழ்வுகளை நம்மால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. காலம் நம்மை தண்டித்துவிட்டது. எப்பேர்ப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம்! வருகிற ஒன்பதாம் தேதி சிலையாக தரிசிக்கப் போகிறோம். நமது இயக்கத்தின் இருபெரும் ஜாம்பவான்கள் குப்தாவும், ஞானையாவும் விழாவினைச் சிறப்பிக்கிறார்கள். இப் புதுமனைப் புகு விழாவிலே ஏராளமான தோழர்கள், தலைவர்கள் திரள்கிறார்கள். பொதுச் செயலர் சந்தேச்வர் சிங்கும், சகோதரச் சங்கத் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
குடந்தையிலிருந்து தலைவர் ஜெயபால் தலைமையில் தொண்டால் பொழுதளந்த தூய தலைவனின் சிலையை இன்று மாலை அழைத்து வருகிறார்கள்.
திரளாய் வாருங்கள் தோழர்களே! நமது நம்பிக்கை நட்சத்திரமாம் NFTE யின் தமிழ் மாநிலச் சங்க இல்லத்தில் ஒன்றாய்ச் சந்தித்து மகிழ்வோம்!
நம்மால் நிதி கொடுக்கப்பட்டிருக்கலாம்! உருவாக்கப் பணியில் ஈடுபட்டிருக்க முடியுமா! அந்தக் களப் பணியில் ஈடுபட்ட போராளிகளை நேரில் சந்திப்போம்! வாயார வாழ்த்துவோம்! வாழ்த்துப் பெறுவோம்.
குடந்தையிலிருந்து தலைவர் ஜெயபால் தலைமையில் தொண்டால் பொழுதளந்த தூய தலைவனின் சிலையை இன்று மாலை அழைத்து வருகிறார்கள்.
திரளாய் வாருங்கள் தோழர்களே! நமது நம்பிக்கை நட்சத்திரமாம் NFTE யின் தமிழ் மாநிலச் சங்க இல்லத்தில் ஒன்றாய்ச் சந்தித்து மகிழ்வோம்!
நம்மால் நிதி கொடுக்கப்பட்டிருக்கலாம்! உருவாக்கப் பணியில் ஈடுபட்டிருக்க முடியுமா! அந்தக் களப் பணியில் ஈடுபட்ட போராளிகளை நேரில் சந்திப்போம்! வாயார வாழ்த்துவோம்! வாழ்த்துப் பெறுவோம்.
அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை. Tuesday, May 3, 2011
புதிய CMD பதவியேற்பு
திரு. R.K. உபாத்யாயா அவர்கள்
நமது புதிய CMD ஆக 30-04-2011 முதல் பதவியேற்றிருக்கிறார். TCIL லிலிருந்து வந்திருக்கும் அவரை வாழ்த்தி வரவேற்கிறோம். நெருக்கடியான நேரத்தில் பணியேற்றிருக்கும் அவரால் BSNL தழைக்கும் என்று நம்புவோம். நேர்மையான, எந்தவொரு மாற்றத்திற்கும் அவருக்கு உறுதுணையாவோம்.
Sunday, May 1, 2011
126-வது மே தின வாழ்த்துக்கள்
தங்கள் உதிரத்தை வேர்வையாகச் சிந்தி உழைத்து மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள் 8 மணிநேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது!
எல்லோரும் நினைப்பதுபோல மே தினம் என்பது முதன் முதலில் பொதுவுடமை புரட்சி நடந்த சோவியத் ரஷ்யாவிலோ அல்லது அதன் பிறகு பொதுவுடமை நாடான சீனாவிலோ பிறக்கவில்லை. மாறாக பொதுவுடமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டிவரும் அமெரிக்காவில்தான் முதன் முதலில் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டது.
இன்றிலிருந்து 125 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் அந்த உரிமை கோரிக்கை போராட்ட வடிவத்தைப் பெற்றது.
ஒவ்வொரு நாளும் 10 மணிநேரம் 12 மணிநேரம் 14 மணிநேரம் என்று உழைப்பாளர்களும் பணியாளர்களும் நேர வரையறையற்று வேலை வாங்கப்பட்டு வந்த அந்த நாளில் 8 மணிநேரம் மட்டுமே பணியாற்றுவோம் என்றும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும கோரியும் தொழிலாளர்கள் முதன் முதலாக 1880ஆம் ஆண்டு குரல் கொடுத்தனர்.
அந்த உரிமை கோரிக்கை அடுத்த 4 ஆண்டுகளில் மிகப்பெரிய தொழிலாளர் ஒற்றுமைக்கு வழிவகுத்தது. 1884ஆம் ஆண்டு தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெடரேஷன் ஆஃப் ஆர்கனைஸ்ட் டிரேடர்ஸ் அண்ட் லேபர் யூனியன்ஸ்) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
அடுத்த 2 ஆண்டுகளில் அதாவது 1886ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி முதல் அனைத்து தொழிலாளர்களும் நாள் ஒன்றிற்கு 8 மணிநேரம் மட்டுமே பணியாற்றுவோம் என்று கூறி அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தது.
ஆனால் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
1886ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிகாகோ நகரில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட மே தின இயக்கம் தொடங்கியது.
தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடைக்க சிகாகோ கமர்ஷியல் கிளப் எனும் முதலாளிகள் சங்கம் 2 ஆயிரம் டாலர்கள் செலவு செய்து இயந்திரத் துப்பாக்கிகளைப் பெற்று இலினாய்ஸ் தேசியப் படையினருக்கு வழங்கி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை ஒடுக்குமாறு கேட்டுக் கொண்டது.
உரிமைகள் நிலைநாட்ட உறுதிபூண்ட அந்தத் தொழிலாளர் இயக்கம் சிகாகோவில் உள்ள பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டிருந்த மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கவர்ந்தது.
ஆனால் தொழிலாளர்களின் இயக்கத்தை உடைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட சிகாகோ கமர்ஷியல் கிளப் உறுப்பினர்களின் தூண்டுதலின் காரணமாக இலினாய்ஸ் தேசியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டிக்க அனார்க்கிஸ்ட் எனும் தொழிலாளர் அமைப்பு மே 4ஆம் தேதி ஹே மார்க்கெட் ஸ்கொயர் எனுமிடத்தில் ஒரு கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது.
அந்தக் கண்டனக் கூட்டத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கூடினர். கூட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 180 பேர் கொண்ட இலினாய்ஸ் தேசியப் படையினர் தொழிலாளர்களை கலைந்து செல்லுமாறு கட்டளையிட்டனர்.
மேடையில் பேசிக் கொண்டிருந்தவர்கள் கீழே இறங்கியபோது திடீரென்று தேசியப் படையினர் மீது குண்டு ஒன்று வீசப்பட்டது. அதில் ஒருவர் கொல்லப்பட்டார். 70 பேர் காயமடைந்தனர். கோபமுற்ற தேசியப் படையினர் தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். பலர் காயமுற்றனர்.
தேசியப் படையினர் மீது குண்டு வீசியது யார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அதை காரணமாக்கி தொழிலாளர் இயக்கத்தின் மீது அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. இயக்கத்தை ஏற்பாடு செய்து வந்த தலைவர்களின் இல்லங்கள் சோதனை என்ற பெயரில் சிதைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு எந்தக் காரணமும் கூறப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொழிலாளர் இயக்கத்தை முன் நின்று நடத்திய அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கொலை சதித் திட்டம் தீட்டியதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 8 பேரையும் குற்றவாளிகள் என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் அனைவரும் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட வேண்டும் என்றும் தண்டனை விதிக்கப்பட்டது.
1887ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஆல்பர்ட் பார்ஸன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், அடாஃல்ப் ஃபிஷ்ஷர், ஜார்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். லூயிஸ் லிங்க் என்பவர் சிறைச் சாலையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற மூவரும் 1893ஆம் ஆண்டு மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமை கோரிக்கையும் இயக்கமும் வலிமை பெற்றது. 8 மணிநேரம் கொண்ட உழைக்கும் தினமும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும் கிடைத்தது. உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் உரிமைகள் நிறைவேற, மானுடத்தை உயர்த்த அரும்பாடுபட்ட அந்த உழைக்கும் மக்கள் கூட்டத்தை மனிதாபிமானத்தோடு பார்க்க உலகம் கற்றுக்கொண்டது.
அமெரிக்காவில் உருவான மே தினம் தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்பதே மே தினம் அளித்த உரிமை முழக்கமாகும்.
Tuesday, April 12, 2011
ஊழல் மலிந்த அரசியல் சூழலில் தூய்மையாய் பூத்த தும்பைப் பூ அன்னா ஹசாரே!!
லஞ்சம், ஊழல், குற்றங்கள் எல்லாம் எங்குதான் இல்லை. உலகம் முழுதும் பரவியிருக்கிறது. என்ன! அது நம்ம நாட்டில் கொஞ்சம் ஓவர்! அவ்வளவுதான்!! என்று நியாயப்படுத்தப்பட்ட சூழலில்,
அப்போ, இதற்கு விடிவே கிடையாதா! தடுப்பதற்கு மாற்று வழிதான் என்ன? என்ற கேள்வி நல்லவர்கள் மத்தியில் பதைபதைத்து எழுந்தபோது, எங்கு தேடினும் அதற்கான பதிலோ, வழியோ தென்படவில்லையே ஏன்?
லஞ்சம், ஊழலை எதிர்த்து பெரிதும் அக்கறை கொள்பவர்கள் இடதுசாரிகள். ஆனால் அவர்களிடம் ஒன்றுபடும் அக்கறை, சகோதர கட்சிகளை, சங்கங்களை சகித்துக் கொள்ளும் தன்மை குறைந்து விட்டது. அங்கும், பதவி ஆசை பற்றிக்கொண்டு விட்டதோ!
இருப்பினும், மாற்றத்தைக் கொண்டு வர உழைப்பவர்கள், என்கின்ற அடிப்படையில் அவர்களின் கரத்தை வலுப்படுத்துவதோடு, நாமெல்லாம் உதவிகரமாகவும் இருப்போம்!
காந்தியவாதி திரு. அன்னா ஹசாரே அவர்கள் தனது பட்டினிப் போரை 4 தினங்கள் தொடர்ந்து நடத்தியிருக்கிறார். அந்த லோக்பால் மசோதாவின் நியாயத்தை உணர்ந்து மத்திய அரசு இறங்கி வரவில்லை. தேசம் முழுதும் ஆதரவு அலை எழுச்சியோடு எழுந்ததால் இன்றைக்கு அதை ஒப்புக் கொண்டுள்ளது.
இதை அமுலுக்கு கொண்டு வருவது என்பதும் அவ்வளவு எளிதான காரியமல்ல. நமது தொடர்ந்த ஆதரவும், அக்கறையுடனான பரப்புரையும்தான் அம் மசோதாவை வெற்றி பெறச் செய்யும். இம் மசோதா இக் கால கட்டத்தில் மிக மிக அவசியம் என்பதை நாம் கண்டிப்பாக உணர்ந்தாக வேண்டும்!
இதை ஆதரித்து பேசுகின்ற அதே நேரத்தில், நம் நாட்டில் இது சாத்தியமில்லை, இதை சட்டம் போட்டெல்லாம் மாற்ற முடியாது. எவன் ஆட்சிக்கு வந்தாலும் இப்படித்தான் நடக்கும் என்கிற அபஸ்வரங்களும் ஒலிக்க ஆரம்பிக்கும், அவைகளை சட்டை செய்யாதீர்கள்.
பொதுவாக, அதிகாரத்தில் இருப்பவர்கள் பலருக்கு இவ் விஷயங்களில் அக்கறை இருக்காது. இவர்களும் வேதாந்தம்தான் பேசுவார்கள். இன்னும் சிலர், அக்கறை காட்டுவார்கள், ஆனால் செயல்பட மாட்டார்கள்.
அப்போ யார்தான் இதில் அக்கறை காட்டுவார்கள்? என்று யோசிப்பதை விட யாரால் இவ் விஷயத்தில் பொறுப்பாக இருந்து செயல்பட முடியும் என்று யோசித்தால், நம்மைப் போன்ற நடுத்தர - தொழிலாளி வர்க்கத்தால் நிச்சயம் முடியும் என்பது புலனாகும். ஆனால், நடுத்தர வர்க்கம் சின்னஞ் சிறிய அல்லது சில்லறைத்தனமான ஊழல்களில் ஆட்படுகின்ற காரணத்தால், அவைகளின் போர்க்குணம் மழுங்கடிக்கப்படுகிறது.
எனவே, பெரும்பான்மையாகவும், தாங்கும் சக்தியும் உள்ள நம்மால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நிலைப்பாடு இருக்கின்றபோது, நாம் அவைகளிலிருந்து விடுபடுவது நல்லதுதானே! இனி விடுபடத் துவங்குவோம்!!
நம்மால் முடியாதது யாராலும் முடியாது என்று நினைக்க வேண்டாம். அவர்களாலேயே முடியும்போது, நாம் ஏன் இந்த அற்பமான வாழ்க்கையை வாழ்கிறோம் என்ற எண்ணத்தை பலருக்கு இத் தன்மை தோற்றுவிக்கும்.
இந்த எண்ணத் தோன்றலே முதல் வெற்றி. இனி, அன்னா ஹசாரேயின் புதிய லோக்பால் மசோதா பற்றி எங்கும் விளக்கிப் பேசுவோம், பரப்புரைப்போம். பொது மக்கள் அறியும் வண்ணம் பல்வேறு வடிவங்களில் ஆதரவினைக் காட்டுவோம்.
வாழ்க! அன்னா ஹசாரே!!
தோழமையுடன்,
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.
Subscribe to:
Posts (Atom)


