தினம் ஒரு கருத்து
வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.
Friday, July 17, 2015
TTA
கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை
01/01/2007க்குப்பின் BSNLலில்
நேரடி நியமனம் செய்யப்பட்ட TTA தோழர்களுக்கு
ஒரு கூடுதல் ஆண்டு உயர்த்தொகை வழங்கிட
BSNL நிர்வாகம் 13/07/2015 அன்று உத்திரவிட்டுள்ளது.
01/01/2007லில் இருந்து 07/05/2010 வரை
பணியில் அமர்த்தப்பட்ட நேரடி நியமன TTA தோழர்களுக்கு
அவர்களின் சம்பள இழப்பை சரிக்கட்டுவதற்காக
ஒரு கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை வழங்கப்படும்.
NE-9 சம்பள விகிதமான 13600-25420ல்
அடிப்படைச் சம்பளமான ரூ.13600/= உடன்
ஒரு கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை சேர்க்கப்பட்டு
ரூ. 14010/=ல் சம்பள நிர்ணயம் செய்யப்படும்.
நிலுவைத்தொகை முழுமையான
காலத்திற்கும் வழங்கப்படும்.
சில இடங்களில் TTA தோழர்களின் சம்பள இழப்பை
சரி செய்ய PERSONAL PAY வழங்கப்பட்டது.
அத்தகைய தோழர்களுக்கு கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை வழங்கப்பட்டு PERSONAL PAY சரி செய்யப்படும்.
மேற்கண்ட உத்திரவு
இரண்டாவது ஊதியக்குழு அமுலாக்கத்தேதியான 01/01/2007 முதல்
இரண்டாவது ஊதியக்குழு உத்திரவு தேதியான 07/05/2010 வரை
பணி நியமனம் பெற்ற TTA தோழர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மற்ற பதவிகளுக்குப் பொருந்தாது.
07/05/2010ல் இருந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக
இப்பிரச்சினையை விடாது பேசி தீர்வுக்கு வழி வகை செய்த
நமது சங்கத்திற்கு நன்றிகள் பல .
செய்திகள்
==========
நமது BSNL நிறுவனத்தின் மனித வள இயக்குநராக
DIRECTOR (HR)
இதுவரை நிதி இயக்குநராகப் பணி புரிந்த
சுஜாதா ராய்
அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப்பதவியில் இது நாள் வரை நிரந்தர இயக்குநர் இல்லாத காரணத்தால் ஊழியர் பிரச்சினைகள் தீர்வின்றித் தேங்கிக்கிடந்தன. இனியாவது ஊழியர் பிரச்சினைகளுக்கு விடிவு பிறக்குமா
என பொறுத்திருந்து பார்ப்போம்.
===============================================
ஜூலை 2015 முதல் 2.1 சத IDA உயர்விற்கான
DPE உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது.
BSNL உத்திரவு விரைவில் வெளியிடப்படும்.
===============================================
BSNL - MTNL இணைப்பு இன்னும் நான்கைந்து மாதங்களுக்குள் முடிவு செய்யப்பட்டு விடும் என DOT செயலர் திரு.ராகேஷ் கார்க் கூறியுள்ளார்.
===============================================
BSNLலில் இருந்து ஓய்வு பெறும் தோழர்களின் ஓய்வூதிய விண்ணப்பங்கள் முன்கூட்டியே அனுப்பப்பட்டு அவர்களது ஓய்வூதியப்பலன்கள் காலத்தே கிடைத்திட வகை செய்ய வேண்டும்
என BSNL நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
===============================================
ஜபல்பூரில் தனி மாநிலத்தகுதியில் இயங்கி வந்த
QA CIRCLE மற்றும் INSPECTION CIRCLE ஆகியவை
ஒரே அமைப்பாக QA & INSPECTION
என்ற பெயரில் இணைக்கப்பட்டுள்ளன.
===============================================
இலவச இரவு நேர அழைப்பு மற்றும் இலவச ROAMING
வசதி பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கும் பொருட்டு
பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்களை
மாநில மாவட்ட மட்டத்தில் நடத்திட BSNL நிர்வாகம்
மாநில நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்களை
மாநில மாவட்ட மட்டத்தில் நடத்திட BSNL நிர்வாகம்
மாநில நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
===============================================
ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 சத IDA இணைப்பு
இன்னும் உறக்க நிலையிலேயே உள்ளது.
மத்திய மந்திரிசபைக்குறிப்புக்கு செல்லும் முன் கருத்து சொல்ல வேண்டிய நிதி, ஓய்வூதியம், சட்டம் மற்றும் கனரக தொழிற்சாலை இலாக்காக்கள் நாட்டை முன்னேற்றும் பணியில் மும்முரமாக இருப்பதால் பாவப்பட்ட ஓய்வூதியர்களின் பிரச்சினையைப் பற்றி சிந்திக்க நேரமில்லை என்று கூறப்படுகிறது.
நமது மூத்த தோழர்கள் இனியும் பொறுமை காப்பது உசிதமல்ல.
Thursday, July 16, 2015
மடியத் திருவுளமோ?
நமது BSNL நிறுவனத்தில்
அகன்ற அலைவரிசை இணைப்புத்தரும் பணி
மற்றும் அதனைப் பராமரிக்கும் பணி ஆகியவற்றை
குறிப்பிட்ட சில நகரங்களில் தனியாருக்கு விடுவதற்கு
நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் ஆச்சரியப்படுவதற்கு, ஆவேசப்படுவதற்கு ஏதுமில்லை.
ஊழியர்களை உதவாக்கரைகளாக ஆக்க முயற்சிக்கும்
பல நடவடிக்கைகளில் இதுவும் ஓன்று.
அது மட்டுமல்ல ஏற்கனவே ஜெய்ப்பூர், டேராடூன்,மீரட் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் BROADBAND சேவையை தனியாருக்கு விடும் பணி நடைமுறையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வழக்கம் போலவே நிர்வாகம் இந்தப்பிரச்சினையிலும் தொழிற்சங்கங்களை கலந்து ஆலோசிக்கவில்லை.
நமது சங்கங்கள் தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்ளன.
ஆனால் இந்தப் பிரச்சினையின் மறுபக்கத்தையும்
நாம் நடுநிலையோடு காணவேண்டும்.
இன்னும் கூட பல இடங்களில் BROAD BAND
இணைப்பு கேட்டவுடன் கொடுக்கப்படுவதில்லை.
உரிய கருவிகள், பொருட்கள், ஊழியர்கள், CABLE PAIR இல்லாத காரணங்களால் சில இடங்களில் தாமதம் நிலவுகிறது.
சில இடங்களில் உரிய கவனிப்பு இல்லை என்றால்
இணைப்பு தாமதப்படுத்தப்படுகிறது. பல இடங்களில்
பெரிய பெரிய சிபாரிசு மூலம் இணைப்பு பெறப்படுகிறது.
புதிய இணைப்புக்காக வருபவர்களிடம் அதிகாரிகளே
கையேந்தும் அசிங்கமும் ஆங்காங்கே நடைபெறுகிறது.
இணையதளப் பயன்பாடு
இன்றைய அத்தியாவசியமாக மாறிவிட்டது.
எனவே 108 சேவை போன்று BROAD BAND பழுதுகள் உடனுக்குடன் நீக்கப்பட வேண்டும். ஆனால் பழுதுகள் உரிய நேரத்திலே
பல இடங்களிலே நீக்கப்படுவதில்லை.
1008 தடவை வாடிக்கையாளர்கள்
வாய் வலிக்க சொன்னாலும் கதை நடப்பதில்லை.
பல வாடிக்கையாளர்கள் தங்களது இணைப்பு மாதக்கணக்கில்
வேலை செய்வதில்லை என்றும் பில்கள் மட்டும்
மாதந்தோறும் வந்து கொண்டிருக்கின்றன என்றும்
நொந்து கூற நாம் கேட்டுள்ளோம்.
பழுது நீக்க வேண்டி பலர் DGM, GM, CGM வரையிலும்
தொலைபேசியில் முறையிடுவதையும் நாம் பார்க்கின்றோம்.
சிலர் பழுது நீக்க BSNLலில் பணி புரியும் தங்கள் சொந்த பந்தங்கள்
மற்றும் நண்பர்களின் உதவியை நாடுகின்றனர்.
எதுவும் பலனளிக்காவிட்டால் பலர் மனம் நொந்து
இணைப்பைத் துண்டித்து விட்டு தனியார் சேவையை நாடும் காட்சியையும் நாம் காண்கின்றோம்.
ஆனாலும் கடமை உணர்வு மிக்க பல தோழர்கள்
இரவு பகல் பாராது உழைக்கும் நிலையையும்,
அவர்களுக்கு பெட்ரோல் செலவுக்கு கூட
நிர்வாகம் ஏதும் தர இயலாத நிலையையும் கூட
இங்கே நாம் காண்கின்றோம்.
அகன்ற அலை வரிசை இணைப்பின் ஆதரவில்தான்
தரை வழி இணைப்பு வாழ்கிறது என்ற உண்மை எல்லோருக்கும் புரிந்ததே. வருமானம் மிக்க அகன்ற அலை வரிசை சேவையை
கண்ணின் மணி போல் நாம் காக்க வேண்டும். நம்மை மீறி எந்த தனியாரும் இங்கே இணைப்பை கொடுத்திட முடியாது.
சிறப்பாக பராமரிக்கவும் முடியாது.
நமக்கு வேண்டியதெல்லாம் சேவை காக்கும் உறுதிதான்.
அன்று திருப்பூரில் US - WEST என்னும் நிறுவனத்திற்கு
புதிய இணைப்புக்கொடுக்கும் உரிமம் வழங்கப்பட்ட போது
நாம் அதை எதிர்த்து போராட மட்டும் செய்யவில்லை.
மாறாக நிர்வாகமே வியக்கும் வண்ணம்
இணைப்புகளை மின்னலென கொடுத்தோம்.
நமது துறை காத்தோம்.
நம்மையும் காத்தோம்.
அந்த வீரமும் விவேகமும்
இன்று அதனினும் பல மடங்கு
நமக்கு தேவைப்படுகிறது.
அன்று சுதந்திரத்தை நினைத்து...
எண்ணமெல்லாம் நெய்யாக
எம் உயிரில் வளர்ந்த
வண்ண விளக்கிது..
மடியத் திருவுளமோ?
என்று மனம் உருகிப் பாடினான் பாரதி...
நம் உயிரில் கலந்த BSNLஐ
நம் உணர்வில் கலந்த BSNLஐ
காக்க நாம் வேண்டாமா ?
தனியாருக்கு இடமும் தரலாமோ?
மடிய நாமும் விடலாமோ?
சிந்திப்போம்.. தோழர்களே..
செய்திகள்
ஜூலை 2015 முதல் IDA 2.1 சதம் உயரும்
என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இத்துடன் மொத்தப்புள்ளிகள் 102.6 சதம் ஆகும்.
பண்பலை வானொலிகளின் அடையாள எண்கள் போல்
நமது IDA உயர்ந்து வருகின்றது.
ஆனாலும் இணைப்புக்கான வழிதான்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படவில்லை.
==================================================================
தேசம் தழுவிய MNP மாற்று சேவைக்கு மாறும் வசதி ஜூலை 3 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
==================================================================
DIGITAL INDIA என்ற கொள்கையின் கீழ் பல்வேறு திட்டங்கள் இன்று பிரதம மந்திரியால் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
==================================================================
ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு பிரச்சினைகள் இரண்டு மாத காலத்திற்குள் தீர்க்கப்பட வேண்டும் என மாநில நிர்வாகம்
மாவட்ட நிர்வாகங்களை வலியுறுத்தியுள்ளது.
==================================================================
குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு CHILD CARE LEAVE 15 நாட்களுக்கு குறைவாகவும் எடுத்துக்கொள்ளலாம் என்ற DOPT வழிகாட்டலை அமுல்படுத்த BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
==================================================================
உடல் ஊனமுற்ற தோழர்கள் அரசுப்பணியில் அமர்வதற்கான வயது வரம்பு மேலும் தளர்த்தப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், OBC பிரிவிற்கு 13 ஆண்டுகளும், SC/ST பிரிவிற்கு 15 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.
செய்திகள்
இரயில்வே துறையைத்தனியார் மயமாக்கும்
நோக்கில் கொடுக்கப்பட்டுள்ள
BIBEK DEBROY COMMITTEEயின்
மோசமான பரிந்துரைகளைக் கண்டித்து
இரயில்வே ஊழியர்கள் 30/06/2015 அன்று
கறுப்பு தினமாக அனுசரிக்கின்றனர்.
===============================================
BSNL புனரமைப்பு சம்பந்தமாக
இலாக்கா அமைச்சர் பிரதம மந்திரியை
சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
================================================
தமிழகத்தில் ஜூலை முதல் வாரத்தில்
WORKS COMMITTEE பணிக்குழு கூட்டங்களை நடத்துமாறு
மாவட்ட நிர்வாகங்களை மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இரவு நேர இலவச அழைப்பு, இலவச ஊர் சுற்றி வசதி
ஆகியவை முக்கிய விவாதப்பொருளாகும்.
================================================
DELOITTEE குழுவின் முடிவுகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளன, அடுத்தது தமிழகமாக இருக்கலாம்.
சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்புக்குரல் கொடுத்த போதிலும் நிர்வாகம் தனது வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
================================================
26/06/2015 அன்று அனைத்து சங்கங்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. நமது இரண்டு நாட்கள் வேலை நிறுத்த விளைவுகள்
பற்றி விவாதம் செய்யப்பட்டது. தேவைப்படின் அடுத்த கட்ட
நடவடிக்கை பற்றியும் விவாதிக்கப்பட்டது.
கடன் பட்டார் நெஞ்சம்
22/06/2015 முதல் சென்னைக்கூட்டுறவு சங்கத்தின்
கடன் அளவு 5 லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயருகிறது.
சிக்கன நிதிப்பிடித்தம் 500ல் இருந்து 800 ஆக உயருகிறது.
குடும்ப நலநிதி 800ல் இருந்து 1200 ஆக உயருகிறது.
காப்பீட்டுத்தொகை 5 லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயருகிறது.
வட்டித்தொகை 14.5ல் இருந்து 16 சதமாக உயருகிறது.
உறுப்பினர்களின் ரத்த அழுத்தம் 140ல் இருந்து 200 ஆக உயருகிறது.
Tuesday, July 14, 2015
செய்திகள்
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குதற்கான குறிப்பு நமது இலாக்கா அமைச்சரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பின் இந்த குறிப்பு பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து இறுதியில் மத்திய மந்திரி சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
78.2 FILE பாரதம் முடிவுக்கு வந்து
2015ம் ஆண்டு ஓய்வு பெற்ற தோழர்களுக்கு
நல்வருடமாக அமைய நமது வாழ்த்துக்கள்.
==============================================================
மத்திய அரசின் 7வது ஊதியக்குழு தனது ஊதியக்குழு அறிக்கையை
2015 ஆகஸ்ட் இறுதிக்குள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
01/01/2016 முதல் ஊதியக்குழு அமுலாக்கம் இருக்கும்.
இம்முறை குறித்த காலத்திற்கு முன்னதாகவே ஊதியக்குழு
தனது பணியை முடிப்பது குறிப்பிடத்தக்கது.
2016ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு
நல்வருடமாக அமைய நமது வாழ்த்துக்கள்.
==============================================================
இந்திய தேசத்தில் தொலைபேசி எண்ணிக்கை
100 கோடியைத்தொட்டு நிற்கின்றது. விரைவில் மக்கள் தொகையை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்லக் குழந்தைகள் இனி கையில் செல்போன் பற்றியே பிறக்கும். இத்தகைய அசுர வளர்ச்சியில் நமது BSNL பங்கு பத்து சதத்திற்கும் கீழே
9.4 சதமாகப் போனதுதான் வருத்தமான வருத்தமாகும்.
==============================================================
தாஜ்மகால் பகுதியில் இலவச WIFI இணைய சேவையை நமது BSNL நிறுவனம் அளிக்க உள்ளது. தமிழக அரசை அடுத்து இலவசங்கள் அளிப்பதில் BSNL முன்னணியில் உள்ளது.
டெல்லிப்பகுதி முழுவதும் இலவச WIFI வசதி அளிக்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது தேர்தல் கால வாக்குறுதியாக அளித்திருந்தார். நமது MTNLன் பங்கு
அதில் என்ன என்பது தெரியவில்லை.
==============================================================
ஊழியர்களின் பெயர் மாற்றக்குழு DESIGNATION COMMITTEE விரைவில் தனது பரிந்துரையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய பெயரோடு பழைய தெம்போடு உலாவர ஊழியர்கள் தயாராகவும்.
==============================================================
நமது நிறுவனத்தின் இரவு நேர இலவச அழைப்பு வசதி பற்றியும்,
இலவச தேசம் சுற்றும் ஊர்சுற்றி ROAMING வசதி பற்றியும்
மக்களுக்கு எடுத்துச்சொல்ல அனைத்து ஊழியர் சங்க கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.
ஜூன் மாத சம்பளத்திலிருந்து PAY SLIP இனி
உங்கள் இ மெயிலில் எடுத்துக்கொள்ளலாம்.
கார்பொரேட் அலுவலக உத்தரவு
வெளியாகியுள்ளது.
Sunday, July 5, 2015
Subscribe to:
Posts (Atom)






