தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, December 6, 2017

சட்ட மேதை அண்ணல் 
அம்பேத்கர் 
அவர்களின் 61 வது நினைவு தினம்.
06-12-1956

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே போராடினார் அவர் என்கிற பொது பிம்பத்தில் இருப்பது வருத்தத்துக்குரியது. எண்ணற்ற இன்னல்களுக்கு உள்ளாகி இருட்டில், துன்பத்தில், அடக்குமுறையில் உழன்று கொண்டிருந்த தன் சக மக்களின் துயரத்துக்கு என்ன காரணம், சாதிகள் எப்படி தோன்றின, சாதியம் எப்படி சக மனிதனை சமமானவனாக கருதாத துயர் மிகுந்த போக்கை வளர்த்தது என்பதைப்பற்றி அவர் செய்த ஆய்வு அதைத்தொடர்ந்து எழுதிய நூல்கள் எல்லாமும் அசாத்தியமானவை.
எந்த இடத்திலும் எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்லக்கூடாது என்பதற்காக வரிக்கு வரி அவர் கொடுத்திருக்கும் அடிக்குறிப்புகள் எந்த வெறுப்புணர்வும் இல்லாமல் உண்மையை மட்டும் ஒடுக்கப்பட்டவர்களின் ஆன்மாவின் தீனக்குரலாக எழுப்பிய அற்புதம் அவரால் செய்யப்பட்டது. வர்க்கத்துக்கும் வர்ணத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஆங்கிலேயருக்கு அவர் எடுத்துக்காட்டும் புள்ளி அற்புதமானது. அது சமூகத்துக்கு எதிரானது அல்ல, பணம் பெற்றால் ஒருவர் முன்னேறி வர்க்க அடுக்கில் மேலே போய் விடலாம்-இங்கே அது சாத்தியம் இல்லை என்று தெளிவாக பதிவு செய்தார் அண்ணல்.
எப்படி கல்விக்கூடங்கள், அரசின் கவுன்சில்கள், வேலை செய்யும் இடங்கள், வர்த்தகம் என்று பல்வேறு புள்ளிகளில் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று ஆதாரங்களோடு அவர் அடுக்கும் பொழுது ஆச்சரியப்படுவீர்கள்.
பலருக்கு தெரியாத தகவல் - இந்தியாவின் ரிசர்வ் வங்கி உருவானது அண்ணலின்வழிகாட்டுதலில் தான். காந்தி தேசத்தின் விடுதலைக்கு பின் சமூகம் சார்ந்த விடுதலையை முன்னெடுப்பதை பார்ப்போம் என்ற பொழுது அவரோடு எண்ணற்ற உரையாடல்கள் நிகழ்த்திய அண்ணலின் பொறுமையை நாம் கற்க வேண்டும்.  பூனா ஒப்பந்தத்தை காந்தி தன் உண்ணாநோன்பின் மூலம் மாற்ற முயன்ற பொழுது துயரத்தோடு விட்டு கொடுத்த அண்ணலின் கருணை பெரும்பாலான தலைவர்களுக்கு இல்லாதது .
அவருக்கிருந்த பல்துறை புலமை இன்றைக்கும் சிலிர்ப்பை உண்டு செய்கிறது. பொருளாதாரம், சட்டம், வரலாறு, சமூகவியல், புவியியல் என எண்ணற்ற துறைகளில் தனக்கான தேடலை விடாமல் செய்தவர் அவர் .
இந்திய அரசியல் சட்டத்தை உடனிருந்த உறுப்பினர்கள் பலர் நகர்ந்து கொள்ள ஒற்றை ஆளாக  செதுக்கி உருவாக்கிய பெருமை அண்ணல் அவர்களையே சாரும்.  அதற்கு பின்னும் ஒரு முன்கதை உண்டு.  இந்தியாவின் முதல் அமைச்சரவை பட்டியலோடு காந்தியை பார்க்க நேரு போன பொழுது அதில் அண்ணலின் பெயர் இல்லை.  "எங்கே அம்பேத்கர் அவர்களின் பெயர் ?"என காந்தி கண்களை குறுக்கி கேட்டார். நேரு அண்ணலை சட்ட அமைச்சராக ஆக்கினார் .
கிராம சுயராஜ்யம் என்கிற காந்தியின் வழியில் போனால் சாதியம் ஊற்றெடுக்கிற மண்ணாக இம்மண் போய் விடும் என்பதில் அண்ணல் தெளிவாக இருந்தார். அவர் இயற்றிய சட்டங்களின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு எனும் கனி கிடைக்கபெற்றது.  அதையும் தொடர்ந்து அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று அண்ணல் சொல்லவில்லை என்பதை குறித்துக்கொள்ள வேண்டும்.  அவர் இயற்றிய அரசியலமைப்பு சட்டம் தான் இந்த நாட்டை செலுத்தும் வாகனம் என்றால் அது மிகையில்லை.  இந்த நாட்டின் ஜனநாயகம் இன்னமும் உயிர்த்திருப்பதற்கு அண்ணலின்  தொலைநோக்கு  முக்கிய காரணம்.
பொதுவான இந்து சிவில் சட்டத்தை கொண்டு வர அவர் எடுத்த முயற்சிக்கு மதவாத சக்திகள் கடும் எதிர்ப்பை கிளப்பின. நேரு ஒத்துழைக்க வில்லை என எண்ணி அண்ணல் பதவி விலகினார். அவர் மரணமடைந்த சில மாதங்களில் அதை நேரு ஆறு தனித்தனி சட்டங்களின் மூலம் செய்து அண்ணலுக்கு அஞ்சலி செலுத்தினார்  அண்ணலிடம் இருந்து படிக்கவேண்டிய மிகமுக்கிய பாடம் உண்டு. எதையும் அறிவுப்பூர்வமாக அவர் கையாண்டார்.  வெறுப்பால் எதையும் கட்டமைக்கவில்லை.
அவர் அவர் எழுதிய எந்த கட்டுரையிலும் இந்த நாட்டின் மீது வெறுப்பை உமிழ்கிற வார்த்தைகளை நீங்கள் பார்க்க முடியாது. மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும் என்கிற முனைப்பு அவரின் எழுத்தில் சிந்தனையில் தெரியும். சமூக விடுதலைக்காக, ஏன் இந்த நாட்டின் இயக்கத்துக்கான விதை போட்ட அண்ணலை நினைவு கூர்வோம்.

கிளைகள்தோறும் கூட்டங்கள் நடத்தி 
அண்ணலை நினைவு கூர்வோம்!
அன்புடன்,
கே. கிள்ளிவளவன்.

Tuesday, December 5, 2017


       02-03-2018
REGULAR: 
220   =    220
 550   =    575
 1100   =  1200 
                                         2000   =  2300
                                         3000   =  3600

FRESH 
                                                510     --        550
                                              01-03-18 to 10-03-18
WITHOUT DATA
STV     99   = 26 நாட்கள்,  அனைத்து நெட்வொர்க்கும் இலவசம். ரோமிங்
STV   319  = 90 நாட்கள்,  அனைத்து நெட்வொர்க்கும் இலவசம். ரோமிங்

STV     19  = 84 நாட்கள்,  BSNL 15P/நிமி. மற்றவை 35P/நிமி.   ரோமிங்
                      STV VOICE19
STV     34  =   1 நாள்,    அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.    ரோமிங்
                      STV VOICE34
    



PLAN 186:     28 நாட்கள். 
                        அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          தினசரி 1 GB டேட்டா.
                          தினசரி 100 SMS  
                          ரோமிங் 

PLAN 429:    81 நாட்கள். 
                        அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          தினசரி 1 GB டேட்டா.
                          தினசரி 100 SMS  
                          ரோமிங் உண்டு.
==========================================
   
PLAN 485:     90 நாட்கள். 
                        அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          தினசரி 1.5 GB டேட்டா.
                          தினசரி 100 SMS  
                          
                          ரோமிங் உண்டு.

===========================================
PLAN 666:    129 நாட்கள். 
                        அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          தினசரி 1.5 GB டேட்டா.
                          தினசரி 100 SMS  
                          ரோமிங் இலவசம்.
=========================================
STV 187:        அனைத்து நெட்வொர்க்கும்        28 நாட்கள். 
                  இலவசம். +PRBT
                  தினசரி டேட்டா உண்டு. 
                  தினசரி 100 SMS  
                  ரோமிங் இலவசம். 
STV 349:           -----    DO   ---- +1 GB                                               54   நாட்கள். 
PLAN 429:        -----    DO   ---- +1 GB                                            81   நாட்கள். 
PLAN 485:        -----    DO   ---- +1.5 GB                                  90   நாட்கள்.   
PLAN 666:        -----    DO   ----  +1.5 GB                              129   நாட்கள்.  
STV    333:        -----    DO   ----  + 3 GB                                    45    நாட்கள்.  
STV    444:        -----    DO   ----  + 4 GB                                    60    நாட்கள்.
=========================================


STV 444            : 90 நாட்கள்  
                              தினசரி 2 GB டேட்டா மட்டும் 


STV 339            :    26 நாட்கள் 
                               BSNL மட்டும் இலவசம்.
                               மற்றவை தினசரி 30 நிமிடம் மட்டும் இலவசம்.
                               அதற்கு மேல் நிமிடத்திற்கு 25 பைசா.
                               தினசரி 3 GB டேட்டா 
==========================================
STV 395           :    71 நாட்கள் 
                              BSNL 3000 நிமிடம் இலவசம் 
                              மற்றவை 1800 நிமிடம் இலவசம் 
                              அதற்கு மேல் நிமிடத்திற்கு 20 பைசா
                              தினசரி 2 GB டேட்டா
PRBT:Personalized Ring Back Tone 




Monday, December 4, 2017


03-12-2017 அன்று 
குடந்தையில் நடைபெற்ற 
டிசம்பர் 12, 13  வேலைநிறுத்தப் போராட்ட 
விளக்கக் கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார் 
மாநிலத்  தலைவர்  தோழர். P. காமராஜ். 


இரங்கல் செய்தி!
திருமதி. G. சந்திரகலா SDE/CDR/TNJ அவர்கள் 
[03-12-17] நேற்றிரவு 11:30 மணிக்கு 
இயற்கை எய்தினார்.  
தோழியரின் மறைவுக்கு 
NFTE தஞ்சை மாவட்டச் சங்கம் 
தனது ஆழ்ந்த இரங்கலைத் 
தெரிவித்துக் கொள்கிறது. 

உடல் நல்லடக்கம் இன்று 04-12-17
மாலை 4 மணிக்கு 
திருக்காட்டுப்பள்ளியில் 
நடைபெறும்.






Sunday, December 3, 2017

NFTE - BSNL 
தஞ்சை மாவட்டம்.

போராடி நாம் தோற்றதில்லை!
போராடாமல் வென்றதில்லை!!


டிசம்பர் 8 ல் நடைபெறும் 
தஞ்சைக் கூட்டத்திற்கு தவறாது வாருங்கள்!!
தடைகளை தகர்த்தெறியும்  விளக்கத்தை   
தலைவர்களிடம்  கேட்போம்!!

2 நாள் வேலை நிறுத்தம் 
இரும்புக் கதவைத் திறக்கும் 
காலவரையற்ற வேலை நிறுத்தம் 
கதவை உடைத்து நொறுக்கும்!!

அனைவருக்கும் நீ சொல்லு 
ஆயிரம் விளக்கம் !
உன்னை உயர்த்திட 
உனக்கேன் தயக்கம்!!

எத்தனை சாதனைகள் 
எத்தனை எத்தனை உயர்வுகள் 
எதுவுமே நமக்கிங்கே 
தானாய் வந்ததில்லை!

போராடித்தான் வென்றிருக்கிறோம்!
புறமுதுகு காட்ட மாட்டோம்!!
MC யும் EL ம் 
இதற்காக போடமாட்டோம்!
ஏதாவது காரணம் சொல்லி 
ஒதுங்குவோரையும் விடமாட்டோம்!

என்னை, என் துறையை 
உயிரினும் மேலான என் தேசத்தை 
காத்திடும் காவலன் நான் 
கடுகளவும் ஓயமாட்டேன் !

தனியார் செல்போன் கம்பெனிக்கு 
நாலரை லட்சம் கோடியை 
கடன் கொடுத்த அரசாங்கமே!
BSNL துறைக்கு மட்டும் 
கடனே இல்லை தெரியுமா! 

BSNL தொழிலாளி 
சவலைப் பிள்ளை அல்ல! அல்ல!!
பல லட்சம் கோடி சொத்தை 
70 ஆயிரம் டவர்களை 
உருவாக்கிய தொழிலாளி!

தேசத்தின் பல துறைக்கு 
எல்லாமே கொடுத்தாச்சு!
தொலைத்தொடர்பு துறை மட்டும் 
மாற்றாந்தாய்ப் பிள்ளையா!

வாருங்கள் தோழர்களே!
சபதமெடுத்துப் போராடினால் 
சாதனை நமக்கு தூரமல்ல!

வணங்கி வரவேற்கும் ......
கே. கிள்ளிவளவன்.

Saturday, December 2, 2017





01-12-2017 அன்று 
பாண்டிச்சேரியில் நடைபெற்ற 
டிசம்பர் 12, 13  வேலைநிறுத்தப் போராட்ட 
விளக்கக் கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார் 
மாநிலச் செயலர் தோழர். K. நடராஜன். 

திருவாரூர் தோழர்.கூடூர் குணா அவர்களின் 
மகள் திருமண விழா திருவாரூரில் 01-12-2017 அன்று 
வெகு சிறப்பாக நடைபெற்றது. 
NFTE பேரியக்கத்தின் ஒப்பற்ற தலைவன் 
தோழர். R. பட்டாபிராமன்
மாநிலச் செயலர் தோழர். K. நடராஜன் 
மாவட்டச் செயலர்கள் 
கிள்ளிவளவன், கலைச்செல்வன் 
மற்றும் எண்ணற்ற தோழர்கள் பங்கேற்று 
மணமக்களை வாழ்த்தினர். 







மாவட்டச் சங்கத்தின் மனங்கனிந்த வாழ்த்துக்கள்!

மாநிலச் சங்க சுற்றறிக்கை:

மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நோக்கி..........

மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நோக்கி
BSNL நிறுவனத்தின் அனைத்து ஊழியர் சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் அமைப்புகள் டிசம்பர் 12 மற்றும் 13 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்து நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் வழங்கிவிட்டனர். இது நிலைமையை நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு. இந்தப் போராட்டத்தின் தேவையை, அதன் சாரமான முக்கியச் செய்தியை அனைத்து அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் எடுத்துச் சென்று போராட்டத்தை நூறு சதவீதம் வெற்றிகரமாக்க வேண்டும். அனைத்து மத்திய சங்கங்களின் நிர்வாகிகளைப் பங்குபெறச் செய்து திட்டமிட்ட மையங்களில் வேலைநிறுத்தத் தயாரிப்புக் கூட்டங்களைச் சிறப்பாக நடத்த வேண்டும். மாவட்டங்களிலும் அனைத்து மாநில நிர்வாகிகளை அழைத்து ஒருங்கிணைந்த தயாரிப்புக் கூட்டங்களை நடத்த வேண்டும்.
ஒவ்வொரு ஊழியரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதை உறுதி செய்ய கிளை மட்டங்களில் ஒருங்கிணைப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். முன்னதாகத் திட்டமிடப்பட்ட இயக்கங்களான மனித சங்கிலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூட்டாக மனு அளித்தலை சிறப்பாக நடத்தி முடித்திடல் வேண்டும்.
இதற்கு மத்தியில் BSNL நிர்வாகம், நமது கோரிக்கைகளில் பரிவுமிக்க அணுகுமுறை காட்டிவருவது குறித்து செய்திகள் வருகின்றன. BSNL நிறுவனம் லாபம் ஈட்டும் திசைவழியில் முன்னேறிவருவதால், நிர்வாகம் தனது யோசனைகளை முன்வைத்து DOT–யிடம் ஊதிய மாற்றம் செய்திட அனுமதிக்க வேண்டும் என வற்புறுத்துவதாகவும் தெரிகிறது. இந்நிலையில் ஒரு கேள்வி எழலாம், பிறகு ஏன் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்?
உறுப்பினர்களின் இந்த நியாயமான கேள்விக்கு விடையளித்து நன்கு விளக்க வேண்டியது நமது கடமை. யதார்த்த நிலைமைகளை விரிவாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப கோபத்தை வெளிப்படுத்த நமக்கு நியாயமான காரணங்கள் உள்ளன. நமது வேலைநிறுத்தம் ஊதிய மாற்றத்திற்காக மட்டுமல்ல. நமது நிறுவனத்தின் அடிப்படை ஆதாரமான செல் கோபுரச் சொத்துக்களைக் கபளீகரம் செய்ய நினைக்கும் அரசின் முடிவைக் கைவிட வற்புறுத்தியும்தான் வேலைநிறுத்தப் போராட்டம். தனி டவர் கார்பரேஷன் அமைப்பது என்பது எதிர்காலத்தில் தனியார் தொலைதொடர்பு கம்பெனிகளுக்குச் சேவைசெய்ய வைத்து கடைசியில் நமது பொதுச் சொத்தை அவை அரித்து கையகப்படுத்தும் நிலைக்குக் கொண்டுபோய்விடும்.
BSNL டவர்களைப் பிடிங்கிக் கொள்வதென்ற அமைச்சரவையின் முடிவு நியாயமற்றது, ஜனநாயக விரோதமானது. கோபுரங்களை நிர்மாணித்து விரிவாக்கிய, செல்டவர் செல்வத்தின் உண்மையான பங்குதாரர்களான ஊழியர்களிடம் இது குறித்து ஆலோசிக்கவும் இல்லை, தகவல்கூட தெரிவிக்காமல் ஊழியர் சங்கங்கள் இருளில் வைக்கப்பட்டது எந்த வகையில் நியாயம்?
அடுத்த முக்கிய பிரச்சனை ஊதிய மாற்றம். அரசு 3-வது ஊதிய மாற்றக் குழுவை அமைத்தது, அதன் சிபார்சுகளை ஏற்று DPE வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது என்பது உண்மைதான். ஆனால் BSNL நிறுவனம் தனது அதிகாரிகளுக்கு அந்த ஊதிய மாற்றத்தை அமல்படுத்த முடியாத ஒரு கம்பெனியாக உள்ளது; ஏனெனில், வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் கட்டுப்பாடுகள் அவ்வளவு கடுமையானவை. அந்த கன்டிஷன்களின்படி நட்டத்தில் இயங்கும் எந்த நிறுவனமும் ஊதிய மாற்றம் செய்ய முடியாது.
ஊதிய மாற்றம் குறித்து BSNL மேனேஜ்மெண்ட் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் நிச்சயம் தனது ஊழியர்கள், அதிகாரிகள்பால் நல்லெண்ணமும், பரிவும்மிக்கவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை, அவற்றை நடைமுறைப்படுத்த அதற்குரிய அதிகாரம் இருந்து எடுக்கப்பட்டவை ஆகாது. DPE வழிகாட்டல்படி அதிகாரம் வழங்கப்படாத நல்ல நோக்கம் கவைக்குதவாதுதானே? மாண்புமிகு தகவல்தொடர்பு அமைச்சரும் கூட அமைச்சரவை முடிவை மீறி தன்னால் ஏதும் செய்யமுடியாது என்று கருதுவதாகச் சொல்லப்படுகிறது. NFTE சங்கம் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்திற்காக ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள், நிர்வாகத் தரப்பு பிரதிநிதிகள் அடங்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்கும்படி கோரியது. அதற்கு நிர்வாகம் பேச்சுவார்த்தை துவக்க அத்தகைய வழிகாட்டுதல்கள் ஏதும் வரவில்லை என்று பதில் அளித்துள்ளது.
மேனேஜ்மெண்ட்டுடன் உடன்பாடு எற்பட்டால்தான் ஊழியர்கள் சம்பளமாற்றம் பெற முடியும். NFTE சங்கம் இரு தரப்பு பேச்சுவார்த்தை துவக்க வழிகாட்டல் வெளியிட DPE–க்கும் கோரிக்கை வைத்தது. அந்தக் கோரிக்கை தங்களது தீவிர பரிசீலனையில் உள்ளதாக DPE பதிலளித்துள்ளது. அப்படிப் பேச்சுவார்த்தை துவக்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டாலும், அது நமக்குப் பயன்அளிக்க வேண்டுமென்றால், நட்டமடையும் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியமாற்றம் வழங்கலாம் என்ற வகையில் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களிக்கும் அம்சம் இடம்பெற வேண்டும்.
மேலே விவரிக்கப்பட்ட சூழலில், ஊதிய மாற்றத்திற்கான இன்றைய யதார்த்த நிலைமை சாதகமாக இல்லாதது மட்டுமல்ல, ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நலன்களுக்கு எதிரிடையாகவே உள்ளது. நம் எதிரில் உள்ளது நாம் பயணிக்க வேண்டிய நெடிய கடுமையான போராட்டங்களுக்கான பாதை மட்டுமே! அது ஒன்று மட்டுமே நமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தை இணங்க வைக்க முடியும். ஒன்று, கடுமையான கட்டுப்பாட்டு வழிகாட்டுநெறிகளுக்கு திருத்தம் வெளியிட வேண்டும். (அல்லது) இரண்டு BSNL நிறுவனத்திற்கு மட்டும் ஒருமுறை விலக்களிக்க கடுமையாக வற்புறுத்த வேண்டும்.
மூடிய கதவுகள் திறக்கப்பட நமது வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு மட்டத்திலும் அதிகாரிகள் ஊழியர்கள் அணி திரள்வோம்! நம் கோரிக்கைகளின் நியாயத்தை நிலைநாட்டிட, டிசம்பர் வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஆகப்பெரிய வெற்றிக்காக ஒன்றுபட்டு உழைப்போம்! வெற்றி நமதே!
30-11-2017
தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் 
திரு. கு. பரசுராமன் MP அவர்களிடம் 
கோரிக்கை மனுகொடுக்கப்பட்டது.

மாவட்டப் பொறுப்பாளர்கள் தோழர்.
கிள்ளிவளவன், பன்னீர்செல்வம், கலைச்செல்வன்   NFTE
உதயன், கோபாலகிருஷ்ணன் AIBSNLEA 
இருதயராஜ் BSNLEU 
பழனியப்பன் SNEA
சுந்தர்ராஜன், சந்திரன் ANNA
சிவகுமார் FNTOBEA 
இளங்கோவன் PRO 
ஆகியோர் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.





செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR