நமது பொதுச் செயலாளர் ஏற்கெனவே போனஸ் கோரி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதை விபரமாக இதே வலைதளத்தில் முன்பே எழுதி இருக்கிறோம். இன்று ஜலந்தரில் நடைபெறுகின்ற CWC கூட்டத்தில் போனசுக்காக நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிற அக்டோபர் 12 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி,
மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் ருபாய் 3454
ரயில்வே தொழிலாளருக்கு போனஸ் ருபாய் 8860
அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் ரூபாய் 7000
என்று அறிவிப்பு வந்து விட்டது.
அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்ன செய்கிறது?
அங்கீகரிக்கப்பட்ட சங்கம் இன்னமும் போனஸ் பற்றி தேடுதல் நிலையிலேயே உள்ளது. ஏனென்றால் அது செயல்திறனுடன் கூடிய போனஸ் திட்டத்தில் கையெழுத்து இட்டதால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு போனஸ் கோரிக்கையை வைப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.
ஆனால் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர் வர்க்க போராட்டம் குறித்து ரொம்ப மும்முரமாக எழுதிக் கொண்டிருக்கிறது அங்கீகரிக்கப்பட்ட சங்கம்.
இது எப்படி இருக்கு? ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குவீர் தோழர்களே!
அன்புடன்,
S. சிவசிதம்பரம், மாநில துணைத் தலைவர், பட்டுக்கோட்டை. .
No comments:
Post a Comment