ஒன்று பெற்றால் ஒளிமயம் - அதிகம் பெற்றால் அல்லல்மயம் என்பது குடும்பக் கட்டுப்பாட்டிற்கு சரியானதுதான் .
ஆனால் 3 லட்சம் ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்த 1 லட்சம் வாக்குகளை பெற்ற மைனாரிட்டி சங்கம் EU மட்டும் போதுமா?
இதர இரண்டு லட்சம் பேர்களை பிரதிநிதிதுவப்படுத்த என்ன ஏற்பாடு?
எல்லாம் சரி! ஒன்றுக்குமேல் வேண்டாமென தோழர் O.P. குப்தாதானே கூறினார்! இது BSNLEU சங்கம் சொல்லும் பதில். நம்மில் பலர் பேசும் வாதமாகவும் உள்ளது.
தோழர் OPG ஏன் அப்படி கூறியிருந்திருக்க வேண்டும்? ஏனென்றால் ஒன்று எனில் NFTE வந்துவிடும். ஒன்றுக்குமேல் எனில் இரண்டாவதாக EU வரலாம். இரண்டாவதாக வந்துவிட்டால் அது என்ன செய்யும்?
ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும், சம்பள மாற்றம், பதவி உயர்வு, போனஸ் என்று யாவற்றிலும் அது தாமதம் செய்யும் என்பதால் அது இரண்டாவதாகக் கூட வரக்கூடாது. வந்தால் BSNL க்கும் ஆபத்து! தொழிலாளிக்கும் ஆபத்து எனக் கருதித்தான் குப்தா வேண்டாமென்று கூறியிருக்க வேண்டும் .
முதலாவது சங்க அங்கீகாரத் தேர்தலுக்குப் பின்னல் JCM ல் FNTO வையும் இணைத்துச் சென்றார் OPG. EU சங்கம் நீதிமன்றம் சென்று நம்மை செயல்பட விடவில்லை. தம்மை விட ஒட்டு குறைவாக பெற்ற FNTO வை NJCM -ல் வைக்கக் கூடாதென்றனர்.
2 ஆவது சங்க அங்கீகாரத் தேர்தலில் FNTO வின் CELL சின்னத்தை
வாங்கிக்கொண்டு, ( EU வின் சின்னம் ஆன்டனா! ) FNTO வாக்குகளைப் பெற்று அங்கீகாரம் பெற்றது EU சங்கம்.
இதன் மூலம் எது நடந்து விடக் கூடாது என்று OPG பயந்தாரோ அது நடந்தே விட்டது! இரண்டாவதாகக் கூட EU சங்கம் வரக்கூடாதென நினைத்ததற்கு எதிராக முதல் சங்கம் அதுவும் ஒரே சங்கம் என்றாகி - இன்று பல்வேறு சீரழிவுகளைக் கண்டு வருகிறது BSNL நிறுவனமும் - ஊழியர்களும்.
இந்த இழிநிலையை மாற்றிட, இதர பொதுத்துறை நிறுவனத்தில் உள்ளது போல் ஒன்றுக்கு மேற்பட்ட சங்கங்களுக்கு அங்கீகாரம் தேவை என்பது நமது NFTE உள்ளிட்ட ஒன்பது சங்கங்களின் நிலை!
அன்புடன், கே. நடராஜன், மாநில துணைச் செயலர், தஞ்சாவூர்.
No comments:
Post a Comment