தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, February 21, 2011

பிப்ரவரி - 23 அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம்

    மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க பாராளுமன்றம் நோக்கிய பேரணி  பிப்ரவரி - 23 அன்று டெல்லியில் நடைபெறவுள்ளது.   அதையொட்டி நாம் நமது கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டத்தினை நடத்திட வேண்டும்.  

கோரிக்கைகள்

 1  மத்திய அரசே விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து. 
 2  பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை தாறுமாறாக உயர்த்தாதே. 
 3  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை  சீர்குலைக்காதே.
 4  நவீன இந்தியாவின் கோயில்களாம் பொதுத்துறை நிறுவனங்களை    
     சீரழிக்காதே.     
 5 உபகரணங்கள், கருவிகள் வழங்காமல், BSNL நிறுவனத்தின் விரிவாக்கத்தை  
     முடமாக்காதே! நலிவடையச் செய்யாதே.
 6  BSNL ஊழியர்களைக் குறைத்திட, VRS மூலம் ஆட்குறைப்பு செய்திடும் 
     வகையில் போடப்பட்ட கமிட்டியை ரத்து செய்.   

     மேற்கண்ட கோரிக்கைகளுக்காக நமது சம்மேளனமும், மாநிலச் சங்கமும் போராட்டத்திற்கு ஆதரவாக கிளைகள்தோறும்  கண்டன ஆர்ப்பாட்ட நடத்தக் கோரியுள்ளது.  

     எனவே, அனைத்து கிளைச் செயலர்களும் கிளைகளில் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியோடு நடத்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

தோழமையுடன்,
  எஸ். பிரின்ஸ்,                 T பக்கிரிசாமி,         T பன்னீர்செல்வம்,
மாவட்டத் தலைவர்.               மாவட்டப் பொருளர்.        மாவட்டச் செயலர்.    
                                                                          


Tuesday, February 15, 2011

BSNLEU சங்கத்திற்கு தொழிற்சங்க அங்கீகாரம்.

     ஐந்தாவது உறுப்பினர் சரிபார்ப்புத்  தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற BSNLEU சங்கத்திற்கு தொழிற்சங்க அங்கீகாரத்தினை BSNL நிர்வாகம் 14-02-2011 அன்று உத்தரவாக வெளியிட்டுள்ளது. 
     
     ஏற்கனவே பெற்று வந்த வசதிகளை அச் சங்கம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   14-02-2011 முதல் 13-02-2013 வரை இந்த வசதி தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

     அதோடு, கேரளா உயர்நீதி மன்றத்தில் FNTO சங்கம் தொடர்ந்துள்ள வழக்கினைச் சுட்டிக்காட்டி, அந்த   வழக்கின் முடிவுக்கு இவ் அங்கீகாரம் உட்பட்டது என்றும் கூறியுள்ளது.

Sunday, February 13, 2011

நண்பனும் வம்பனும்!

PART 5

வம்பன்: 
  என்னா நண்பா!   தேர்தலுக்கு முந்தி நீ என்னத் தேடி வந்த.   இப்ப என்னடான்னா நான் ஒன்னத் தேடி வர வேண்டியிருக்குது. தோத்துட்டமேங்கர  கவலையா?
 நண்பன்: 
  அதெல்லாம் ஒன்னும் இல்லேப்பா!   நாம ஒழச்ச, ஒழைப்புல ஒன்னும் கொற கெடையாது. அதே மாதிரி  நம்ம மாவட்டத்துல, மாநிலத்துல நாம,ஜெயிச்சும்புட்டோம் இல்லையா! 

வம்பன்: 
  இருந்தாலும், ஆல் இந்தியாவுல தோத்துட்டமேங்கர கவலை ஒனக்கு இருக்கு .இல்லையா? 

நண்பன்:
  ஆமாமா!    அது இல்லாம இருக்குமா!

வம்பன்: 
  அது இல்லாமத்தான் இருக்கணும்.  வெற்றி - தோல்வின்னா நீ என்னான்னு நெனைக்கிறே!  தேர்தல்ல ஜெயிக்கறது மட்டும்தானா! அது இல்லப்பா!!

நண்பன்:
  அப்புறம் வேற என்ன!  என்னை சாந்தப்படுத்துறதுக்காக நீ சொல்ற.    தோத்த பெறகு  எல்லாரும் சொல்ற வார்த்தைதான் இது.   ஒன்னும் புதுசா சொல்லலியே நீ!

வம்பன்: 
  புதுசுதாம்ப்பா . நானும் ஒன்ன மாதிரித்தான் நெனைச்சிக்கிட்டு இருந்தேன்.  நேத்திக்கி குப்தா கும்பகோணம் வந்தாருல்ல!   அவருப் பேச்சக் கேட்டப்புறம்தான் நாம ஜெயிச்சிருக்கிறது கொஞ்சம் நஞ்சம் இல்லேன்னு புரிஞ்சிது.  

நண்பன்: 
  என்னப்பா! புதுசு, புதுசாப் பேசுற!  அப்படி  என்னாதான் சொன்னாரு குப்தா?

வம்பன்: 
  நாம நடத்தப்போற போராட்டத்துக்கு கோரிக்கையை தெளிவா தேர்ந்தெடுத்து, விவாதத்துக்கு தேவையான பாய்ண்ட்டுகளை தயார் பண்ணி வச்சிக்கிட்டு, போராட்டத்தை அறிவிச்சு,  அதுல தொழிலாளிக்கு சேதாரம் ஏதுமில்லாம ஜெயிக்குரோம்ல அதுதான் வெற்றி அப்புடீன்னார் நம்ம குப்தா!  

நண்பன்: 
  வெரிகுட்!வெரிகுட்!!   நீ  கவனமாத்தான்        கேட்டிருக்கறே! வேற என்னா பேசினார்!


வம்பன்:
   நெறைய பேசினார். முக்கியமான ஒரு சில செய்திகளை மட்டும் சொல்றேன்.  அதாவது, போராட்டமும் நடத்தாம, அப்புடியே நடத்துனாலும் எந்த உடன்பாடும் ஏற்படாம அங்கீகாரப் போட்டியிலே மட்டும் வெற்றி பெற்றால் அது வெற்றி கிடையாது.  காலத்தே, போராடுவதும், கோரிக்கையை வென்றேடுப்பதும்தான் வெற்றி அப்படீன்னார். 


    அது மட்டும் இல்ல.   என் காலத்துல பெற்ற OTBP, BCR, 10 % அதெல்லாம் அப்போ இருந்த நிலைமைக்குத்தான் பொருத்தம்.   இன்னைக்கி இன்னும் மாற்றம் கொண்டு வரணும்.    பென்சன்ல இப்ப ஒரு நெருக்கடிய கொண்டு வந்திருக்காங்க.  அன்னைக்கி நாம 2000 செப்டம்பர் 6, 7, 8 தேதிகள்ல FNTO, BTEF சங்கத்தோட சேர்ந்து நடத்துன போராட்டம் இன்னைக்கி வரைக்கும் பென்சனை பிரச்சினையில்லாமல் கொடுத்துக்கிட்டிருக்கு.   அன்னைக்கி அதுலயும் சேராம நின்னது நம்பூதிரி அணிதான்.   சேராதது மட்டுமல்ல, EL,  GPF,  HBA  எல்லாம் போய்விடும்,  பொதுத் துறையானா எல்லாமே போய்விடும்.  இன்றைக்கு பொதுத் துறையாகி, அதில பெற்று வந்த எல்லாமே இன்னைக்கும் வாங்கிக்கிட்டிருக்கோம்.   இதுதான் வெற்றி.  BSNLEU இதுல தோல்வி அடஞ்சிருச்சி.  (இதுல மட்டுமா?)  அந்த பென்சன் போராட்டம் ஆரம்பிச்சபோது வெளிநாட்டிலிருந்த வாஜ்பாய், அமைச்சர் பாஸ்வானை கூப்பிட்டு, ஒடனே   போய் குப்தாகிட்டே பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு போடுன்னார். அதே மாதிரி அமைச்சர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு போடப்பட்டது.
   2000 அக்டோபரிலிருந்து நாம பெற்று வர்ற IDA பென்சனில் உள்ள விதி 37-8  என்பது புரிந்து கொள்ளப் படவில்லை.   இதுல நாம போராடாம ஜெயிக்க முடியாது.   ஏற்ற, இறக்கம் பற்றி கவலைப்படாது,பென்சனைப்பெற்றாக  வேண்டும்.   
     இதற்கான போராட்டத்தை நான் துவங்கப் போகிறேன்.  மற்றவர்களையும் இதில் அழைத்துச் செல்வேன். 
  இதில் வெற்றி பெறுவதுதான் வெற்றி.   தேர்தல் வெற்றி என்பது முழுமையான  வெற்றி அல்ல, அப்படீன்னு  குப்தா பேசினார். 


நண்பன்: 90 வயசுல நம்ம BSNL தொழிலாளி மேல அவருக்கு இருக்கற அக்கறை மத்தவங்களுக்கும் வந்துட்டா எப்படி இருக்கும்!

வம்பன்: குடந்தையில் அந்த எழுச்சியை நான் கண்ணாரப் பார்த்தேன்!  500 பேருக்கு மேல வந்திருந்தாங்க.   பேசிய தோழர்கள் எல்லாம் நெகிழ்வோடு பேசினாங்க.   குப்தாவைப் பாத்துட்டு தோழர்கள் எல்லாம் ஆனந்தக் கண்ணீர் வடிக்காத குறைதான்.  குப்தாவுக்கு மலர்க் கிரீடம் வைத்து, ஆளுயர ரோஜா மாலைப் போட்டு, பாக்கவே கண்கொள்ளக் காட்சியா   இருந்துது.   எனக்கு வயசாயிருச்சு, உடம்பு சரியாக இருக்காது,  கழுத்து தொங்கிக் கிட்டிருக்கு  அப்படீன்னு நெனைக்காதீங்க, என் மூளை, மனசு  எல்லாமே சரியா , மொறையாதான்  இயங்கிக்கிட்டிருக்கு அப்படீன்னு, சொன்னாரே பார்க்கலாம்.  அந்தச் சதுக்கமே   உணர்வலையில் அப்படியே ஆழ்ந்து விட்டது.

     இந்த அற்புதமான வாய்ப்பை நமக்கு தந்த குடந்தைத் தோழர்களை வாழ்த்தாத தோழர்களே இல்லைப்பா!

நண்பன்:  
  இன்னைக்கி நாம பேசினதுதான்  மனசுக்கு ரொம்ப திருப்தியா இருந்திச்சு.  நாளைக்கு சந்திப்போம் வம்பா!

பேட்டி தொகுப்பு:
உங்கள்
சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.

Friday, February 11, 2011

தாத்தா பாட்டு!

குப்தா எங்கள் தாத்தா
குணம் குன்றா தாத்தா.
ஒற்றுமைக்கு விலையாக 
தன்னைத்  தந்த தாத்தா.

என்னைப்  பெற்ற தந்தைக்கு 
ஏற்றம் தந்த தாத்தா
எல்லாம் உன்னால் வந்ததாலே 
எண்ணி மகிழ்கிறோம் தாத்தாவே!
ஒன்பது  பெரிய சங்கங்களை 
ஒன்றாய் இணைத்த தாத்தாவே!
ஓராயிரம் பேதமிருந்தும்
ஒருங்கிணைத்த தாத்தாவே!!
அழுக்காய் திரிந்து அவதியுற்றோர்
மிடுக்காய் வாழ வழி வகுத்து,
மண்ணில் நீயும் மனிதனென்ற 
மாண்பைத் தந்த தாத்தாவே!

உனது வாழ்க்கை நாங்கள் வாழ 
ஆசி தாரும் தாத்தாவே!
உன்னை பெற்ற இந்த மண்ணு 
உயர்வு பெறுது   உன்னாலே!

தக்க தக திமி தாளம் போட்டு 
ஆடுகின்றேன் தாத்தாவே!
உனது மடியில் விழுந்தெழுந்து 
உருண்டோடவா தாத்தாவே!

குண்டு கன்ன  தாத்தாவுக்கு
கொடுக்கும் முத்தம் தாராளம்.
கொஞ்சி உந்தன் தோளில் தொங்க 
ஆசை எனக்கு ஏராளம்! 
                               - எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.

Wednesday, February 9, 2011

5 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தல்

( சிறப்பு பார்வை )

 BSNLEU  சங்கம் - தொடர்ந்து 4 வது  முறையாக வெற்றி பெற்றுள்ளது .   மீண்டும்
 " SINGLE UNION CONCEPT " தானா ? என்ற கேள்வி எழுகிறது .   தேர்தல் ஜனநாயக
 முறையில்  நடந்து முடிந்துள்ளது .
ஆனால் சங்க அங்கீகாரம் என்ற நிலையில் ஜனநாயக படுகொலை நடக்ககூடாது .
இந்த முறை NFTE கூட்டணி வெற்றி பெற்று  இருந்தால் ,
  1. BONUS FORMULA - வில் மாற்றம் ,
  2. பல்வேறு சிக்கல்கள் நிறைந்துள்ள 4  கட்ட பதவி உயர்வு ,
  3. கருணை அடிப்படையில் வேலை  - நிராகரிப்பு 
  4. LEAVE ENCASHMENT   TO LIC 
  5. GROUP இன்சூரன்ஸ்  WITH  LIC 
  6. ROTATION TRANSFER (சுழல் மாற்றம் )
  7. VRS / CRS  திட்டங்கள் 
  8. 78 .2 %  IDA இணைப்பு 
  9. TTA TO JTO PROMOTION 
  10. WITH 30 % FITMENT TO TTA  , RM /Gr " D " IN  01 .01 . 2007 WAGE  REVISION
  11. BSNL  VIABILITY 
  12. PENSION 
  13. JOB SECURITY 
             மேலே குறிபிட்ட எல்லா அகில இந்திய பிரச்சினைகள் மீதும் தொடர்ந்து விவாதித்து , நல்லதொரு மாற்றம் பெற NFTE கூட்டணி வழிவகை கண்டிருக்கும்.
            ஆனால் BSNL  நிர்வாகமும் , வாக்களித்த ஊழியர்களும் இதை விரும்பவில்லை என்பது புரிகிறது.
              தொடர்ந்து 10 , 15  வருடங்களுக்கு  இந்த துறையை  காப்பாற்ற பாடுபட்டோம்.
              ஆனால் BSNLEU, மிக குறுகிய காலத்தில் எல்லாவற்றையும் முடிவிற்கு கொண்டு வந்துவிடும் .
                தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், NFTE தொடர்ந்து தனது போர்குணத்தை இழக்காது. 
               80300  ஊழியர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிற தன்னிகரற்ற தனிப்பெரும் சங்கம்  - NFTE 
               விகிதாசார பிரதிநிதித்துவம் மற்றும் அங்கீகாரம் பெற நீதிமன்றத்தில்  நமது உரிமையை கோருவோம் !!!
     நிர்வாகத்திலும் போராடுவோம் !!!
         கடமைகளால் களத்தை எதிர் கொள்வோம் !!!

Dissidence , 
      Discussion ,
           Different Point of Views 
                                            Open Debate 
These are the ways of DEMOCRACY .
     
                                                   அலைகள் ஓய்வதில்லை                

                                                       Yours Friendly
                         A.லைலாபானு    Br.Secretary GM(O) , Thanjavur     

Tuesday, February 8, 2011

குப்தா வருகிறார் குடந்தைக்கு!

     NFTE  
பேரியக்கத்தின் பெருந்தலைவன்  
தோழர் குப்தா அவர்கள் 
வருகிற 11-02-2011 வெள்ளிக்கிழமை 
மாலை 5 மணிக்கு 
குடந்தையில் பேசுகிறார்.   
நமது  மாவட்டம் முழுமையிலிருந்தும் தோழர்கள் திரளாய் பங்கேற்க வேண்டுகிறோம். 
எழுச்சியுரை கேட்க 
எல்லோரும் வருக! 

நமது வாழ்வும் - ஆன்மாவுமான 
தலைவனைக் காண 
வாழ்நாளின் அரிய சந்தர்ப்பம்.
நழுவ விடோம்!

Sunday, February 6, 2011

தோழா! தலைவா!! உம்மை யாம் வாழ்த்துகிறோம்!

அருமைத் தோழர்களே! தோழியர்களே!! தலைவர்களே!!
     உங்களை நன்றிப் பெருக்கோடு வாழ்த்துகிறோம்.  NFTE இம்முறை  வென்றாக வேண்டும் என்று நீங்கள் உழைத்த உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல.           
     பல மாநிலங்களில் வெப்சைட் இல்லாதபோது நம் தமிழகத்தில் மட்டும் எத்தனை மாவட்டங்கள் வலைத்தளம் துவங்கி, எப்படி எப்படியெல்லாம் செய்திகள் சேகரித்து, விபரங்களை வெளியிட்டு, சவால் விட்டு, அற்புதமாக கார்ட்டூன்கள் போட்டு, 
     அதே போல் நமது மகளிர் அணியினர் மாவட்டம்தோறும் பறந்து,  பறந்து பரப்புரை செய்து, 
     தோழர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, துண்டறிக்கைகள் போட்டு, உறுப்பினர்களிடம் தேர்தல் நன்கொடைகள் வசூல் செய்து தேர்தலை திருவிழா போல் நடத்தி, 
     கூட்டணிச் சங்கப்  பொறுப்பாளர்களின்  குன்றா உழைப்பு குடும்ப உறவாய், இனி எவராலும் பிரிக்க முடியா உறவாய்  பரிணமித்ததே,  
      அப்பப்பா!   சொல்லி மாளுமா உங்களின் செயல்பாடுகள்.   

     தலைவர்கள் என்றால், தலைமை என்றால் இப்படி, இப்படி, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உணர்த்தினார்களே!    எனது வாழ்நாளில் அவர்கள் எடுத்துக் கொண்ட இதுமாதிரியான பிரம்மப் பிரயத்தனத்தை, கண்டதும்   கிடையாது.   சொல்லிக் கேட்டதும் கிடையாது.
     மதுரை சேது, கடலூர் ஜெயராமன், RK, தமிழ்மணி,   C.K. மதிவாணன், குடந்தை ஜெயபால், KSK, பட்டாபி இன்னும் விடுபட்டுள்ள பல தலைவர்கள், மாநில, மாவட்ட, கிளைச் சங்க நிர்வாகிகள் கொடுத்த மதிப்புமிக்க உழைப்பு. கொஞ்சமா! நஞ்சமா!!   சொல்லும்போதே கண்கள் பனிக்கிறது.  ஒரே தலைவர் அடுத்தடுத்த  கூட்டங்களில்   எவ்வாறு இப்படி புதுமையாக, வித்தியாசமாக, உணர்வு மேலிட, மறுதலிக்க முடியாத விபரங்களோடு, புதிய புதிய ஆளுமையோடு   பேச முடிகிறது என்பதெல்லாம் இம்முறை நாம் கண்ட புதிய அனுபவம்.          
     தலைவர்களே! தோழர்களே!! அப்படி ஒரு கடப்பாடு, உற்சாகம் ஏன் உங்களுக்கு வரவேண்டும்!   NFTE என்றால் அவ்வளவு விருப்பமா!
       NFTE என்றால்  அப்படி ஒரு பலம்  உங்களுக்கு எப்படி வருகிறது.
    குப்தா என்று சொன்னாலே போதும்!  எல்லோருக்கும் குதூகலம் பொங்குகிறதே!  எப்படி, எப்படிங்க!!    பணியாற்றும் துறைக்காக, தொழிலாளிக்காக எந்த வித லாப நோக்கமின்றி, எதிர்பார்ப்பு ஏதுமின்றி  நீங்கள் பட்டபாடுகள்!   இன்றைக்கும் திரைக் காட்சியாய் விரிகிறதே!   

அங்கீகரிக்கப்பட்ட சங்கத்திற்கே 
இன்று  நீங்கள் 
ஆதர்ஷமாக ஆகி  இருந்தாலும் வியப்பில்லை.    

அப்படி ஒரு உழைப்பினை நல்கினீர்கள் .
     தலைவா!!  உங்கள் உழைப்புகள் நிச்சயம் வீணாகாது.     உங்கள் அடிச்சுவட்டில் வெகு நேர்த்தியாக நடைபோட்டு, தொழிற்சங்க பாதையை, ஒழுங்கமைத்து,      நிறைவாய்   செப்பனிடுவோம் என்ற உறுதியைக் கூறி, உங்கள் அனைவரின் பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன்.

அன்புடன், 
S. சிவசிதம்பரம்,
மாநிலத் துணைத் தலைவர்,
பட்டுக்கோட்டை.  

Thursday, February 3, 2011

தேர்தல் முடிவுகள் ( தமிழகம் )

தேர்தல் செய்திகள் ( தமிழகம் நீங்கலாக )

     SSA                           VOTE                NFTE           EU        FNTO   வெற்றி 


CHENNAI STP                     104                    47               54                          EU
CHENNAI STR                                              122              90                          NFTE
CHENNAI CTO                    254                     61             150                         EU
CHENGALPAT                     986                   503             396                         NFTE
ALTTC
GAZIABAD                                                      77               52                          NFTE 


Tuesday, February 1, 2011

நன்றி தோழர்களே!

     தேர்தல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட தலைவர்களே! தோழர்களே! தோழியர்களே!!உங்களுக்கு எமது நெஞ்சு நிறை நன்றியை காணிக்கையாக்குகிறோம்!  BSNL தொழிலாளர் கூட்டணிக்கு ஆதரவளித்த தோழர்களுக்கும், வெற்றிக்கு வித்திட்ட தோழமைச சங்கத் தோழர்களுக்கும் எமது நன்றிப் பாராட்டுக்கள்.    கடுமையாக உழைத்தீர்கள்! காற்றாய்ப் பறந்தீர்கள்!!     கைப் பணத்தை வாரி இறைத்தீர்கள்!! தமது இல்ல விழாபோல் கரைந்தீர்கள்!  பசி மறந்து, தூக்கமிழந்து துறைக்காக, துறைசார் தொழிலாளிக்காக நீங்கள் தந்த உழைப்பு ஈடு இணையற்றது!   

      நன்றி தோழர்களே!  நன்றி!!
                         உங்களை மீண்டும் வாழ்த்தி மகிழ்கிறோம்!
--------------------------------------------------------------------------
             நமது மாவட்டத்தில்   மொத்த வாக்குகள்  :  888
                                                      பதிவானவை:  873 
                                                        சதவிகிதம் :   98.3 %
வாக்குச் சாவடி வாரியாக:
                            மொத்த                           அஞ்சல்
                          வாக்குகள்   பதிவானவை       ஒட்டு    பதிவாகாதவை 
பட்டுக்கோட்டை    :   92          90             2            0
திருத்துறைபூண்டி :   68           68             0            0
மன்னார்குடி         :  110         108             1            1
திருவாரூர்           :  164         159             3            2
 தஞ்சாவூர்           :  454         439                       12
மொத்தம்            :   888          864             9           15

தோழமையுடன்,
T. பன்னீர்செல்வம்,               S. பிரின்ஸ்,               T. பக்கிரிசாமி,
மாவட்டச் செயலர்,          மாவட்டத் தலைவர்,    மாவட்ட பொருளர்,
       தஞ்சை .                        தஞ்சை                         தஞ்சை. 
 

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR