குப்தா எங்கள் தாத்தா
குணம் குன்றா தாத்தா.
ஒற்றுமைக்கு விலையாக
தன்னைத் தந்த தாத்தா.
என்னைப் பெற்ற தந்தைக்கு
ஏற்றம் தந்த தாத்தா
எல்லாம் உன்னால் வந்ததாலே
எண்ணி மகிழ்கிறோம் தாத்தாவே!
ஒன்பது பெரிய சங்கங்களை
ஒன்றாய் இணைத்த தாத்தாவே!
ஓராயிரம் பேதமிருந்தும்
ஒருங்கிணைத்த தாத்தாவே!!
அழுக்காய் திரிந்து அவதியுற்றோர்
மிடுக்காய் வாழ வழி வகுத்து,
மண்ணில் நீயும் மனிதனென்ற
மாண்பைத் தந்த தாத்தாவே!
உனது வாழ்க்கை நாங்கள் வாழ
ஆசி தாரும் தாத்தாவே!
உன்னை பெற்ற இந்த மண்ணு
உயர்வு பெறுது உன்னாலே!
தக்க தக திமி தாளம் போட்டு
ஆடுகின்றேன் தாத்தாவே!
உனது மடியில் விழுந்தெழுந்து
உருண்டோடவா தாத்தாவே!
குண்டு கன்ன தாத்தாவுக்கு
கொடுக்கும் முத்தம் தாராளம்.
கொஞ்சி உந்தன் தோளில் தொங்க
ஆசை எனக்கு ஏராளம்!
- எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
நல்லாயிருக்கு சிவசிதம்பரம் - பட்டாபி
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஉங்களின் செயலாக்க வெளிப்பாடுகள்
என் பையனுக்கு " மாமாப் பாட்டு "
எழுதத் தூண்டுகிறது. பாருங்களேன்
அதையும் பட்டாபி மாமா பாராட்டுவார்.
அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.