மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க பாராளுமன்றம் நோக்கிய பேரணி பிப்ரவரி - 23 அன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. அதையொட்டி நாம் நமது கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டத்தினை நடத்திட வேண்டும்.
கோரிக்கைகள்
1 மத்திய அரசே விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து.
2 பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை தாறுமாறாக உயர்த்தாதே.
3 விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்காதே.
4 நவீன இந்தியாவின் கோயில்களாம் பொதுத்துறை நிறுவனங்களை
சீரழிக்காதே.
5 உபகரணங்கள், கருவிகள் வழங்காமல், BSNL நிறுவனத்தின் விரிவாக்கத்தை
முடமாக்காதே! நலிவடையச் செய்யாதே.
6 BSNL ஊழியர்களைக் குறைத்திட, VRS மூலம் ஆட்குறைப்பு செய்திடும்
வகையில் போடப்பட்ட கமிட்டியை ரத்து செய்.
மேற்கண்ட கோரிக்கைகளுக்காக நமது சம்மேளனமும், மாநிலச் சங்கமும் போராட்டத்திற்கு ஆதரவாக கிளைகள்தோறும் கண்டன ஆர்ப்பாட்ட நடத்தக் கோரியுள்ளது.
எனவே, அனைத்து கிளைச் செயலர்களும் கிளைகளில் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியோடு நடத்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன்,
எஸ். பிரின்ஸ், T பக்கிரிசாமி, T பன்னீர்செல்வம்,
மாவட்டத் தலைவர். மாவட்டப் பொருளர். மாவட்டச் செயலர்.
No comments:
Post a Comment