அருமைத் தோழர்களே! தோழியர்களே!! தலைவர்களே!!
உங்களை நன்றிப் பெருக்கோடு வாழ்த்துகிறோம். NFTE இம்முறை வென்றாக வேண்டும் என்று நீங்கள் உழைத்த உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல.
பல மாநிலங்களில் வெப்சைட் இல்லாதபோது நம் தமிழகத்தில் மட்டும் எத்தனை மாவட்டங்கள் வலைத்தளம் துவங்கி, எப்படி எப்படியெல்லாம் செய்திகள் சேகரித்து, விபரங்களை வெளியிட்டு, சவால் விட்டு, அற்புதமாக கார்ட்டூன்கள் போட்டு,
அதே போல் நமது மகளிர் அணியினர் மாவட்டம்தோறும் பறந்து, பறந்து பரப்புரை செய்து,
தோழர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, துண்டறிக்கைகள் போட்டு, உறுப்பினர்களிடம் தேர்தல் நன்கொடைகள் வசூல் செய்து தேர்தலை திருவிழா போல் நடத்தி,
கூட்டணிச் சங்கப் பொறுப்பாளர்களின் குன்றா உழைப்பு குடும்ப உறவாய், இனி எவராலும் பிரிக்க முடியா உறவாய் பரிணமித்ததே,
அப்பப்பா! சொல்லி மாளுமா உங்களின் செயல்பாடுகள்.
தலைவர்கள் என்றால், தலைமை என்றால் இப்படி, இப்படி, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உணர்த்தினார்களே! எனது வாழ்நாளில் அவர்கள் எடுத்துக் கொண்ட இதுமாதிரியான பிரம்மப் பிரயத்தனத்தை, கண்டதும் கிடையாது. சொல்லிக் கேட்டதும் கிடையாது.
மதுரை சேது, கடலூர் ஜெயராமன், RK, தமிழ்மணி, C.K. மதிவாணன், குடந்தை ஜெயபால், KSK, பட்டாபி இன்னும் விடுபட்டுள்ள பல தலைவர்கள், மாநில, மாவட்ட, கிளைச் சங்க நிர்வாகிகள் கொடுத்த மதிப்புமிக்க உழைப்பு. கொஞ்சமா! நஞ்சமா!! சொல்லும்போதே கண்கள் பனிக்கிறது. ஒரே தலைவர் அடுத்தடுத்த கூட்டங்களில் எவ்வாறு இப்படி புதுமையாக, வித்தியாசமாக, உணர்வு மேலிட, மறுதலிக்க முடியாத விபரங்களோடு, புதிய புதிய ஆளுமையோடு பேச முடிகிறது என்பதெல்லாம் இம்முறை நாம் கண்ட புதிய அனுபவம்.
தலைவர்களே! தோழர்களே!! அப்படி ஒரு கடப்பாடு, உற்சாகம் ஏன் உங்களுக்கு வரவேண்டும்! NFTE என்றால் அவ்வளவு விருப்பமா!
NFTE என்றால் அப்படி ஒரு பலம் உங்களுக்கு எப்படி வருகிறது.
NFTE என்றால் அப்படி ஒரு பலம் உங்களுக்கு எப்படி வருகிறது.
குப்தா என்று சொன்னாலே போதும்! எல்லோருக்கும் குதூகலம் பொங்குகிறதே! எப்படி, எப்படிங்க!! பணியாற்றும் துறைக்காக, தொழிலாளிக்காக எந்த வித லாப நோக்கமின்றி, எதிர்பார்ப்பு ஏதுமின்றி நீங்கள் பட்டபாடுகள்! இன்றைக்கும் திரைக் காட்சியாய் விரிகிறதே!
அங்கீகரிக்கப்பட்ட சங்கத்திற்கே
இன்று நீங்கள்
ஆதர்ஷமாக ஆகி இருந்தாலும் வியப்பில்லை.
அப்படி ஒரு உழைப்பினை நல்கினீர்கள் .
தலைவா!! உங்கள் உழைப்புகள் நிச்சயம் வீணாகாது. உங்கள் அடிச்சுவட்டில் வெகு நேர்த்தியாக நடைபோட்டு, தொழிற்சங்க பாதையை, ஒழுங்கமைத்து, நிறைவாய் செப்பனிடுவோம் என்ற உறுதியைக் கூறி, உங்கள் அனைவரின் பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன். அப்படி ஒரு உழைப்பினை நல்கினீர்கள் .
அன்புடன்,
S. சிவசிதம்பரம்,
மாநிலத் துணைத் தலைவர்,
பட்டுக்கோட்டை.
No comments:
Post a Comment