நமது மாநிலத் தலைவர்
தோழர் காமராஜ் பணி ஒய்வு பெறுகிறார்!
புதுவையில் துவங்கிய சங்கப் பணி
அகில இந்தியாவையும் ஆட்கொண்டது.
இன்று நமது மாநிலத்தின் தலைவராய்
வலம் வருகிறார்! மிளிர்கிறார்!!
வாட்ஸப் குழுவின் கலக்கல் நாயகன்!
அகில இந்திய செய்திகளையும்
அன்றே அறிவிக்கும் அதிவேக வீச்சாளர்!
மாநாட்டில் பிரச்சனையா!
உடன் தீர்க்கும் திறனாளர்!
ஓட்டுப் புள்ளிக் கணக்குகள்
ஒரு நொடியில், விரல் நுனியில்!
தவழ்ந்தது பட்டுக்கோட்டை!
தாண்டியது பாண்டி மண்!
கர்ம வீரர் போல் இவரும் கருப்பு!
கொண்ட கொள்கையில் என்றும் சிவப்பு!
நிறைவாக பணியினை
நிறைவாக பணியினை
செய்து முடித்த தோழரே!
நீடூழி வாழ்க! நீடுபுகழ் பெறுக!
===================================
அன்புடன் வாழ்த்தி மகிழ்கிறது,
NFTE மாவட்டச் சங்கம்,
No comments:
Post a Comment