தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, June 11, 2012




      இன்று மாலை CMD உடன் நமது தலைவர்கள் நடத்திய  பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.  எனவே திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் 13-06-2012 முதல் துவங்கும்.  வேலை நிறுத்தத்தை 100 % வெற்றிகரமாக்கிட திட்டமிடுவோம்.

Thursday, June 7, 2012

தோழர் ஜெகன் நினைவு தினம்    07-06-2012.

17-05-1931 ல் பிறந்து  75 ஆண்டுகள் வாழ்ந்து 07-06-2006 ல் மறைந்த மனித நேயப் போராளி தோழர் ஜெகன் மறைந்து 6 ஆண்டுகள் தொலைந்து விட்டது.    வாழ்நாளின் முக்கால் பகுதி 50 ஆண்டுகளை நம்மோடேயே கழித்தவர்.   போராட்டம் என்றால் அவர் நினைவு வரும்.   ஒரு காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறுகின்ற இச் சூழ்நிலையில் கூட தமது நினைவு நாளின் மூலமாக நம்மை வழி நடத்தும் தலைவனைப் போற்றுவோம்.
வெற்றிகரமான தார்ணா போராட்டம் !

        அகில இந்தியச் சங்க அறைகூவலின்படி தார்ணாப்  போராட்டம் தஞ்சை GM அலுவலகத்தில் நடைபெற்றது.  300 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.   SNEA  சங்க தோழர் சிவசங்கரன் தலைமையில் நடைபெற்றது.  அணைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் போராட்டத்தை விளக்கிப் பேசினார்கள்.   ஜூன் 13 முதல் தொடரப்போகும் வேலை நிறுத்தம் மிகப் பெரிய வெற்றியை அடையும் என்ற உத்தரவாதத்தை தோழர்களின் உரை எடுத்துக்காட்டியது.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR