தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, October 11, 2015


மறைந்தார் மனோரமா!

          திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், 1943ம் ஆண்டு மே, 23 ம் தேதி பிறந்தவர் கோபி சாந்தா. சினிமாவுக்காக மனோரமா என்று பெயர் மாற்றப்பட்டார். ராஜமன்னார்குடியில் 6ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தனது, 12 வயதில் நாடகத்தில் நடிக்கத் துவங்கினார். பின்னர், 1960ல் 'களத்துார் கண்ணம்மா' என்ற படம் மூலம் தமிழ் சினிமா உலகில் கால்பதித்தார். தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து, 1000 படங்களுக்கும் மேல் நடித்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர்.  தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருடன் நாடகத்திலும்,  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார். கதாநாயகி, வில்லி மற்றும் குணச்சித்திரம் உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடித்தவர். நடிப்பு மட்டுமின்றி, 300க்கும் மேற்பட்ட பாடல்களும் பாடியிருக்கிறார். டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.  'பத்ம ஸ்ரீ' மற்றும் தமிழக அரசின் 'கலைமாமணி' மற்றும் தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார். சினிமா ரசிகர்களால் 'ஆச்சி' என்று அழைக்கப்பட்டவர். கடைசியாக, 'சிங்கம் 2' படத்தில் நடித்திருந்தார். விரைவில் தயாரிக்கப்படும் 'சிங்கம் 3' படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

Thursday, October 8, 2015

செய்திகள் 

தமிழகத்தில் 02/06/2013 அன்று நடந்த JTO இலாக்காத் தேர்வில் ST காலியிடங்களில்  7 தோழர்கள் வெற்றி பெற்றதாக  தமிழக நிர்வாகம் அறிவித்துள்ளது. வெற்றி பெற்ற தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
09/10/2015 முதல்  GPF நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

பதவி பெயர் மாற்றத்தில் அதன் குழுவின் பரிந்துரை  அமுல்படுத்தப்பட வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
திறந்த நிலைப்பல்கலைக் கழகங்கள் மூலம் பெறப்பட்ட +2 படிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.


JTO ஆளெடுப்பு விதிகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு விரைவில் உத்திரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் சாதிச்சான்றிதழ் பிரச்சினையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர்.அந்தோணிச்சாமி, SS அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த மத்திய சங்கமும் தமிழ் மாநில சங்கமும்  முயன்று வருகின்றன.

ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பை அமுல்படுத்துவது சம்பந்தாகவும், தனி  TOWER CORPORATION அமைப்பது சம்பந்தமான பிரச்சினையில் அரசால் அமைக்கப்படும் அமைச்சர்கள் குழுவில் BSNL சார்பாக அதிகாரிகளை சேர்த்திடக் கோரியும்   DOT செயலரை நமது கூட்டமைப்புத்தலைவர்கள் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

TM பதவிகளில் ST  பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நமது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடி மட்ட ஊழியர்களின் STAGNATION - ஆண்டு உயர்வுத்தொகை தேக்க நிலை  பற்றி விரைந்து முடிவெடுக்க நமது சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
அக்டோபர் - 8
பாட்டளிகளின் கவிஞன் 
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 
நினைவு நாள் 

மீன் வியாபாரி 
முறுக்கு வியாபாரி 
மாம்பழ வியாபாரி 
இட்லி வியாபாரி 
தேங்காய் வியாபாரி 
கீற்று வியாபாரி 
மாட்டு வியாபாரி 

எத்தனையோ வியாபாரம் செய்தான்...
இறுதியில்.. 
கவிதையை வியாபாரம் செய்யும் 
கலைத்துறையில் கால் பதித்தான்..

செய்யும் தொழிலே தெய்வம்... 
அதில் திறமைதான் நமது செல்வம்...
என்று பாடி காலத்தால் அழியாத 
கருத்துக்கள் சொன்னான் ...

பாட்டை ஆண்டவன்... 
பாட்டாளிகளின் ஆண்டவன்... 
பட்டுக்கோட்டை புகழ் பாடுவோம்....

ஆசிரியர்கள் போராட்டம் வெல்லட்டும்!!

தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த மூன்று இலட்சம் ஆசிரியர்கள் தங்களுடைய பதினைந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இது குறித்த செய்தி கடந்த பல நாட்களாக வந்த போதிலும், ஆசிரியர்களின் பல்வேறு சங்கப் பிரதி நிதிகளை முதலமைச்சரோ, அந்தத் துறை அமைச்சரோ அழைத்துப் பேச வில்லை. அதிகாரிகள் வேறு வழியில்லாமல், அதுவும் நேற்று முன்தினம் தான் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுகிறார்கள். அந்தப் பேச்சுவார்த்தையும் உருப்படியான தீர்வு எதுவும் காணப்படாமல் தோல்வியிலே முடிந்துள்ளது.அமைச்சர் எங்கே போனார்? அவர் ஏன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை. ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா? ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கப் போவதாகச் செய்தி வந்து எத்தனை நாட்களாகிறது? உடனடியாக அந்தத் துறையின் அமைச்சர் முதலமைச்சரோடு கலந்து பேசி விட்டு, போராட்டம் அறிவித்த ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்திருக்க வேண்டாமா? கடந்த மார்ச் மாதமே கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, தலைமை ஆசிரியர்கள் என 24 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து "ஜேக்டோ" அமைப்பை மீண்டும் தொடங்கி, அதன் சார்பில் இது வரை மூன்று கட்டமாகப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் அரசுத் தரப்பில் "ஜேக்டோ" அமைப்பை அழைத்து யாருமே பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்த பிறகாவது அமைச்சர் உடனடியாக முயற்சிகளை மேற்கொண்டு, போராட்ட அறிவிப்பு கொடுத்தவர் களை அழைத்துப் பேசி சமாதானப்படுத்துவதற்கு முயற்சி செய்திருக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் போல இந்தப் பிரச்சினையிலும் ஒரு சுமூகமான சூழலை ஏற்படுத்த எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ளாத . அரசுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இப்போதாவது ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, போராட்டத்தை முடித்து வைத்திடவும், அவர்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும் முன் வர வேண்டுமென்று இந்த ஆட்சியினரை வலியுறுத்துகிறோம்/

Monday, October 5, 2015



6.10.2015

இடைக்கால  போனஸ்

கோரி ஆர்ப்பாட்டம்

இடம்:-பொதுமேலாளர் அலுவலகம்      காலை 11.30 மணி 

                                            போனசை லாபத்துடன் இணைக்காதே !
                              
                                            PRP/PMSநிபந்தனைகளைபுகுத்தாதே !

                                           குறைந்த பட்ச போனஸ் மறுக்காதே !
·    
                                             60 % க்கு கீழ் போனஸ் மறுக்காதே!
·     
                                             FAIR என்பதை உருவாக்கு !
·                            
                      ஒப்பந்தம் உருவாக்கும் வரை அனைவருக்கும்                         
                      தற்காலிக போனஸ் வழங்கு !

மாவட்டம் முழுவதும் கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம் 

ஒப்பந்த ஊழியர்களுக்கான 

VDA - விலைவாசிப்படி உயர்வு 

             தினக்கூலி அடிப்படையில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA - VARIABLE  DEARNESS ALLOWANCE - விலைவாசிப்படி 01/10/2015 முதல் கீழ்க்கண்டவாறு உயரந்துள்ளது. இதற்கான உத்திரவை CLC முதன்மைத் தொழிலாளர் ஆணையம் 30/09/2015 அன்று டெல்லியில்  வெளியிட்டுள்ளது.

==============================================
பிரிவு                      A  நகரம்                             B  நகரம்           C   நகரம் 
==============================================
UNSKILLED                    353                             294                        236
WATCH AND WARD       390                            333                    276
WITHOUT ARMS  
WATCH AND WARD       430                            390                    333
WITH ARMS 
==============================================

                                  
நிரந்தர ஊழியர்களுக்கு 01/10/2015  முதல்
 IDA அதிகபட்சமாக 5.3 சதம் உயர்ந்துள்ளது. 
 ஆனால் அன்றாடக்கூலிகளாகப் பணி புரியும்
 தொழிலாளர்களுக்கு  மிகக் குறைந்த அளவே 
VDA கூடியுள்ளது.  
C பிரிவு நகரில் ஒரு நாள் கூலி 
ரூ.233/=ல் இருந்து ரூ.236/= ஆக ஒரு நாளைக்கு
ரூ.3/= மட்டுமே உயர்வடைந்துள்ளது. 

மேலும் ஒப்பந்த ஊழியர்கள் எந்தவிதமானப் பணி 
செய்தாலும் அனைவருக்கும் UNSKILLED சம்பளமே வழங்கப்படுகிறது. 
குறிப்பாக காவல் பணியிலும், கேபிள் தோண்டும் பணியிலும்  
ஒப்பந்த ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவர்களுக்கும் 
UNSKILLED சம்பளமே வழங்கப்படுகிறது. 
இது அடிமட்ட ஊழியர்களை ஏமாற்றும் செயலாகும்.

உறிஞ்சப்படும் ஒப்பந்த ஊழியர்கள் 
தங்கள் உரிமை பெறுவது எந்நாளோ? 

செய்திகள் 

33வது அகில இந்திய JCM கூட்டு ஆலோசனைக்குழு டெல்லியில் 16/10/2015 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

01/10/2000 ஊதிய திருத்தத்திற்குப் பின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்பட்ட சம்பளக்குறைபாடு.. PAY ANOMALIES  மற்றும் 
PAY ABERRATIONS குறித்து உரிய தகவல்கள் பல மாநில நிர்வாகங்களிடமிருந்து டெல்லி அலுவலகத்திற்கு வந்து சேரவில்லை. இவற்றை உடனடியாக அனுப்பி வைக்குமாறு மாநில நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு 
12/10/2015 அன்று டெல்லியில்  கூடுகிறது.

AIRTEL நிறுவனத்தின்  4G விளம்பரம் மக்களைத் தவறாக வழி நடத்துவதாகவும்.. அதனால் அந்த விளம்பரத்தை திரும்ப பெறவேண்டும் என மத்திய அரசு AIRTEL நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

01/08/2014க்குப்பின் BSNL நிறுவனத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள LICயின் காப்பீட்டு வசதி மாற்றப்பட்டு புதிய ஆயுள் காப்பீட்டு வசதி அமுல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக 01/08/2014க்குப்பின் பணியில் 
சேர்ந்தவர்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. 

Friday, October 2, 2015








01/10/2015 முதல் 

5.3 சத IDA 
 
உயர்ந்துள்ளது.

இத்துடன் மொத்தப்புள்ளிகள்  

107.9 ஆகும்.

புதுவை..  

வாகை சூடிய தோழர்களுக்கு 

வாழ்த்துக்கள் 
29/09/2015 அன்று நடைபெற்ற 
புதுவை மாவட்ட மாநாட்டில்  
புதிய நிர்வாகிகள் தேர்வில் 
கருத்தொற்றுமை ஏற்படாத காரணத்தால் 
ஜனநாயக வழியில் தேர்தல் நடைபெற்றது. 
தோழர். காமராஜ் அவர்களின் தலைமை ஏற்று 
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 
தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

மாவட்டத்தலைவர் : தோழர்.தண்டபாணி 
மாவட்டச்செயலர் :  தோழர்.செல்வரங்கன் 
மாவட்டப்பொருளர் : தோழர்.தேவதாஸ் 

ஆகியோர் தலைமையிலான
 புதிய நிர்வாகிகள்  சிறப்புடன் 
செயல்பட  நமது வாழ்த்துக்கள்.
============      =====================      ============

போர் வெறி கொண்ட 
அன்றைய அசோக மன்னன் 
கலிங்க நாட்டில் காட்டாறாய் ஓடிய 
ஆயிரமாயிரம்  வீரர்களின் 
குருதி கண்ட பின்பு 
குற்றம் உணர்ந்தான்..
 போர் வெறி தணிந்தான்..
சங்கம் சரணம் என சரணடைந்தான்.
இது வரலாறு..

அசோக ராஜ்ஜியம் என்பது.. 
எதிர்த்து வாழ்வதல்ல..
எதிரியையும் ஏற்று வாழ்வது...

வரலாற்றிலும்... வாழ்க்கையிலும்...
எதிர்ப்பவர்கள் வீழ்கிறார்கள்..
ஏற்பவர்கள் வாழ்கிறார்கள்...

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR