தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, April 12, 2018

அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் 
கண்டன ஆர்ப்பாட்டம்

12-04-18 காலை 9:30 மணி 
CTMX  இணைப்பகம், தஞ்சாவூர்.
=========================================
நூற்றுக்கணக்கான தோழர்கள் 
மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்தனர். 
காவேரி  பிரச்சினைக்காகவும்  கருப்பு பேட்ஜ்
அணிந்து  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்துச் சங்கத் தலைவர்களும்
கண்டன உரையாற்றினர்.  






















Wednesday, April 11, 2018

அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் 
கண்டன ஆர்ப்பாட்டம்
=========================================
12-04-18 காலை 9:30 மணி 
CTMX  இணைப்பகம், தஞ்சாவூர்.
===========================================

BSNL நிறுவனத்தை 
அழித்திடும் நோக்கில் துணை டவர் நிறுவனத்தை உருவாக்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்தும்


தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியாக காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்தும் 
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
===============================

அனைவரும் வருக!
கோரிக்கையின் நியாயம் உணர்ந்த கொள்கைப் படையே!  வருக! வருக!!
====================================

Sunday, April 8, 2018

தோழர். O.P. குப்தாவுக்கு 

இன்று 96 வது பிறந்த நாள்.
==========================
1954  ல்   NFPTE தொடங்குவதற்கு முன்பாக 
UPTW என்ற பெயரில் இயங்கி வந்த சங்கத்தை 
POSTAL, தந்தி,  RMS,  TELECOM,  ADMINISTRATION
பகுதி அனைத்தையும் ஒன்று சேர்த்து 
P3, P4,  T3,T4,  R3, R4,  E3,E4, மற்றும் 
Administrative union    
என 9 சங்கங்களை ஒன்றிணைத்து NFPTE சம்மேளனத்தை 
உருவாக்கினார் தோழர் OP குப்தா.
எத்தனை போராட்டங்கள், எத்தனை  தடைகள் 
பல பிரதமர்கள், பல மந்திரிகள், அதிகாரிகள் 
என பலரையும் சந்தித்து 
சாதனை படைத்த சங்கம் NFTE.

தலைவனைப் போற்றுவோம்! வணங்குவோம்!! 

Thursday, April 5, 2018

காவிரி மேலாண்மை வாரியம் 
அமைப்பதில் உள்ள கயமைத்தனம்.

6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்திரவிட்ட கெடு முடிந்துவிட்ட சூழ்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை மயிர் அளவிற்குக் கூட மதிக்காமல் உதாசினப்படுத்தி இருக்கின்றது மத்தியில் ஆளும் ஆட்சி. 

உச்ச நீதிமன்ற நீதிபதிகளே, 'மோடி ஆட்சியில் நீதி மிரட்டியும் விலைபேசியும் வாங்கப்படுகின்றது' என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தி இருக்கும் சூழ்நிலையில், இந்த அரசு நீதித்துறையையும், அது கொடுக்கும் தீர்ப்புகளையும் மதிக்கும் என்று யார்தான் எதிர்பார்க்க முடியும்? 


ஆனால் தமிழர்களை மோடி அரசு இவ்வளவு  உதாசீனப்படுத்தியதையும், அவமானப்படுத்தியதையும் ஒரு பொருட்டாகக் கூட நினைக்காமல் மாநிலத்தை ஆளும் அடிமை அரசு, 'நாங்கள் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் உண்ணா விரதம் இருப்போம்' என்கின்றார்கள். இந்த உண்ணாவிரதப் போராட்டம் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமாம்!.


ஆற்று மணலைக் கடத்தி கோடி கோடியாய் கொள்ளையடித்த கும்பலுக்குக் காவிரிப் பிரச்சினையில் உணர்வுப்பூர்வமான சிந்தனை இருக்கும் என்று நாம் எதிர்பார்த்தால் நம்மைவிட அறிவிலிகள் வேறு யாரும் இருக்க முடியாது. இந்த மக்களை இன்னும் நம்ப வைத்து கழுத்தறுக்கவே இவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டம் இருக்கின்றார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
 தமிழர்களை அழித்து அப்படி ஓர் இனம் இந்த உலகில் இருந்ததற்கான சுவடே இல்லாமல் செய்திட வேண்டும் என்பதுதான்  நீண்ட காலத் திட்டமாகும். தமிழ்நாட்டில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும், நீட்டையும் திணித்து தமிழ்நாட்டு மக்களை அழிப்பதைவிட, காவிரி என்ற ஒன்றை இல்லாமல் செய்துவிட்டால் மொத்த தமிழ்நாட்டில் பாதியை அழித்துவிடலாம் என்பதுதான் தமிழின எதிரிகளின் திட்டமாக உள்ளது. 
மோடியின் ஆட்சி முடிவதற்குள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சுடுகாடாக மாற்ற வேண்டும் என இந்தப் பாசிச கும்பல் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றது. 
தமிழ் மக்களின் மொழி, பண்பாடு, அவர்களின் நாகரிகம் என அனைத்தையும் அழித்தொழிக்க செயலாற்றிவரும் இந்தக் கும்பலுடன் தமிழ்நாட்டில் இணைந்து செயலாற்றிவரும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற  அமைப்புகளும், இன்னும் பிற சாதிய அமைப்புகளும் இவர்களுடன் கைக்கோர்த்து தமிழ்மக்களை அழிக்க பணி செய்து கொண்டு இருக்கின்றன.
இந்து மக்களின் நன்மைக்காக அவர்களின் ஒற்றுமைக்காக கட்சி நடத்துவதாக சொல்லி, தமிழ் மக்களை சாதியாகவும், மதமாகவும் பிரித்து அவர்கள் மத்தியில் சாதிய துவேசத்தையும், மத துவேசத்தையும் வளர்க்கும் இந்தக் கும்பல், தமிழ் மக்களை ஒருக்காலும் அப்படி தன்னுடைய சக இந்துக்களாகப் பார்த்து அவர்களின் நன்மைக்காக உழைப்பவர்கள் கிடையாது என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. 
தமிழர்கள் வரலாற்றில் ஒருநாளும் இந்துக்களாக இருந்ததும் இல்லை, இனி இருப்பதற்கான எந்தத் தார்மீக நியாயமும் இல்லை என்பதைத்தான் மத்தியில் இருக்கும் மோடியின் பாசிச ஆட்சி திரும்பத் திரும்ப நிரூபித்துக்கொண்டு இருக்கின்றது. தமிழ்நாடு மத்திய அரசுக்கு வரி கொடுக்கவும், மற்ற மாநிலங்களில் இருந்து வாழ வழியற்று இங்கு வரும் நபர்களை இன்முகத்தோடு ஏற்று அவர்களை வாழவைக்கவும் மட்டுமே தேவைப்படுகின்றது. 
மற்றபடி தமிழ் மக்கள் எக்கேடு கெட்டு நாசமாய்ப் போனால்தான் நமக்கென்ன என்ற சிந்தனைதான் எப்பொழுதுமே மத்தியில் இருக்கும்  அரசுகளின் கொள்கை முடிவாக இருக்கின்றது.

மானமுள்ள தமிழினமே இப்போது நீ விழித்துக்கொள்ளவில்லை என்றால் உன்னுடைய தலைமுறையே அழிந்துபோகும். உணர்வு பெற்று விழித்தெழு. தெருவுக்கு வா, போராடு. உன் தாத்தனுக்கு தாத்தனுக்கும், உன் அப்பனுக்கு அப்பனுக்கும் இருந்த உரிமையை யாரோ ஒரு கேடு கெட்ட மதவாதக் கும்பல் பறிக்க முயலுகின்றது. விட்டுவிடாதே. வரலாற்றில் இது ஒரு முக்கிய தருணம். வாழ்வா சாவா போராட்டம். மோதிப் பார்ப்போம். இந்த முறை ஆரிய ராமனைப் பழி தீர்க்க ஒரு இராவணன் இல்லை எட்டுகோடி ராவணன்கள் இருக்கின்றார்கள் என்பதைக் காட்டுவோம். நாம் மானமுள்ள தமிழர்களாக இருந்தால் காவிரியை மீட்போம், இல்லை காவிரிக்கு நம் உயிரைக் கொடுப்போம். போராடு தமிழகமே போராடு!!
திருமண விழா.
நீடாமங்கலம்  தோழர். P.வீரையன் TT/BSNL 
இல்ல திருமணவிழா இன்று 
05-04-18 சிறப்பாக நடைபெற்றது.         மாவட்டசெயலாளர் K.கிள்ளிவளவன் மற்றும் தோழர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மணமக்கள் V.பிரகாஷ்- T.மேனகா 
வாழ்க! வளர்க!! என வாழ்த்துகிறோம்.
----------------------------------------------------------------------------


காவேரி மேலாண்மை வாரியம் 
அமைக்கக் கோரி திருவாரூரில் ஆர்ப்பாட்டம்.
05-04-18




Wednesday, April 4, 2018



01-04-2018 முதல் IDA 0.3% சதவீதம் உயர்வு!

01-04-2018 முதல் IDA 0.3% சதவீதம் 
உயர்ந்துள்ளது.
இத்துடன் மொத்த IDA (126.9% + 0.3%)
127.2% சதவீதம் ஆகும்.
ஒப்பந்த ஊழியர் VDA உயர்வு:

ஒப்பந்த ஊழியர்களுக்கான விலைவாசிப்படி VDA 01-04-2018 முதல் கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது.

UNSKILLED:
A பிரிவு நகரம் - ரூ.17/- நாளொன்றுக்கு உயர்வு ரூ.536/- லிருந்து ரூ. 553/- ஆக  உயர்வு.
B பிரிவு நகரம் - ரூ.14/- நாளொன்றுக்கு உயர்வு ரூ.448/- லிருந்து ரூ. 462/- ஆக உயர்வு.
C பிரிவு நகரம் - ரூ.11/- நாளொன்றுக்கு உயர்வு ரூ. 359/- லிருந்து ரூ. 370/- ஆக  உயர்வு.

இனி 01-04-2018 முதல்: UNSKILLED நாள் கூலி:
A பிரிவு நகரம்: ரூ. 553/-
B பிரிவு நகரம்: ரூ. 462/-
C பிரிவு நகரம்: ரூ. 370/-

நமது முதன்மைப் பொது மேலாளர் 
அவர்களின் வாழ்த்துச் செய்தி.
=======================================

அனைத்து தொழிற்சங்கங்களைச் சார்ந்த ஊழியர்களாகிய  நீங்கள் நமது நிறுவனத்திற்காக காலமறிந்து பெரிதும் உழைத்திருக்கிறீர்கள். 
அதற்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

உங்கள் தலைவர்களின் ஊக்குவிப்பால், அதன்  உறுப்பினர்களாகிய நீங்கள், நமது நிறுவனத்தை தாயாகப் பாவித்து தந்திட்ட 
சேவை மிகப் பெரிய பங்களிப்பாகும்.  

இன்னும் பல உறுப்பினர்களும், உறுப்பினர் அல்லாதோரும் நமது நிறுவனத்திற்கு பலவகைகளிலும் இத் தருணத்தில் 
பற்றுறுதியோடு தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.
அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

விடுமுறை நாட்களிலும் வேலை செய்து துறையின் வளர்ச்சிக்கு உதவிட்ட உங்களை மீண்டும் மீண்டும் வாழ்த்தி மகிழ்கிறேன் என்று 
நமது PGM  திரு C.V. வினோத் அவர்கள் 
அனைவரையும் பாராட்டியுள்ளார்.   
====================================================
PGM அவர்களின் 
வாழ்த்துக்கு நன்றி!
-----------------------------
  பரபரப்பாக பணியாற்றும்போது உங்களின்  பாராட்டு என்பது எங்களுக்கு ஒரு டானிக் ஆக இருக்கிறது.  அந்த வகையில் உங்கள் வாழ்த்து எங்களுக்கு பெரிதும் நிறைவைத் தருகிறது.   
எனவே, நமது PGM அவர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
=======================================================================
அவரின் வாழ்த்துச் செய்தி
  (ஆங்கிலத்தில்)கீழே உள்ளது.
I take this opportunity to thank each and every one of you for leading your unions and associations responsibly and thus serving our Company .
 I can proudly say that she is our Mother and your role  as leaders has helped motivating your members in serving dedication and I think this is the biggest contribution.
Many of your members have silently worked without any regard to personal comfort and offered the best they could for the customer inspite of so many constraints , some of your members  although had the heart to involve and demonstrate their love for the company , could not contribute to their satisfaction ,due to circumstances beyond their control.
I am indeed proud to notice that like a true family , I have seen others shouldering additional responsibilities when their colleagues were unable to support or actively participate, this is our true strength , where keeping aside differences we decided to work for a common cause in unison.
This indomitable spirit will carry us forward with pride into the next financial year where we will continue to face challenges .
Let us again move ahead as responsible citizens blessed with the opportunity of working for this great company and thus serving our nation.
Today incidentally being Easter , is also a day which symbolises the prevalence of unconditional love and truth over , selfishness, bigotry and untruth.  Goodwishes


Tuesday, April 3, 2018

துணை டவர் நிறுவன உருவாக்க எதிர்ப்பு 
கண்டன ஆர்ப்பாட்டம்.

27-03-2018

தஞ்சையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.








===============================

துணை டவர் நிறுவன உருவாக்க எதிர்ப்பு 
கண்டன ஆர்ப்பாட்டம்.

27-03-2018
திருத்துறைப்பூண்டியில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.



Monday, April 2, 2018

NFTE - BSNL
தஞ்சை மாவட்டம்.
----------------------------------
                                            கண்ணீர் அஞ்சலி!



அருமை தோழர்களே!
ஒரு வேதனையான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

நமது தமிழ் மாநிலச் செயலர் தோழர் நடராஜன் அவர்களின் தாயார் திருமதி. பாலாம்பாள் அம்மையார் அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மையாரின் உடல் நல்லடக்கம் நாளை காலை 10 மணிக்கு அவரது சொந்த ஊரான திருவாரூரில் நடைபெறும்.

தாயாரைப் பிரிந்து வாடும் தோழர் நடராஜன் அவர்களின் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் 
NFTE தஞ்சை மாவட்டச் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் விபரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

இவண்,
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர், தஞ்சை.



செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR