தினம் ஒரு கருத்து
வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.
Thursday, March 15, 2018
கோலாகலமாகத் துவங்கிய அமிர்தசரஸ்
அகில இந்திய மாநாடு.
13-03-2018 அகில இந்திய செயற்குழு
துவங்கி இனிதே நிறைவுற்றது.
14-03-2018 அன்று மாநாடு துவங்கியது.
ஆயிரக்கணக்கான தோழர்கள் பஞ்சாப்
அமிர்தசரஸில் திரண்டனர்.
நமது தஞ்சை மாவட்டத்திலும்
மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன்
தலைமையில் நூற்றுக்கணக்கான தோழர்கள்
எழுச்சியோடு புறப்பட்டனர்.
மாநாட்டுக்கு செல்லும் வழியில் தாஜ்மஹால்,
பஞ்சாபில் உள்ள வாகா பாகிஸ்தான் எல்லைப் பகுதி,
அங்கு பாகிஸ்தான், இந்தியா இரு நாட்டு ராணுவ அணிவகுப்பு
Sunday, March 11, 2018
வாழ்த்துக்கள் தோழர்களே!
அமிர்தசரஸில் நடைபெறுகின்ற
ஐந்தாவது மாநாடு
அகில இந்திய மாநாடு
வெல்லட்டும்! வெல்லட்டும்!!
வெற்றி நடை போடட்டும்!
தியாகி பூமி தஞ்சையிலிருந்து
புறப்பட்ட செம்படையே!
உங்கள் வருகையால் பஞ்சாப் மண்
மேலும் சிவக்க வாழ்த்துகிறேன்!
பிறந்த மண்ணை விட்டுப் பிரிந்து
10 நாட்கள் பயணம் செய்யும்
எங்கள் அருமைத் தோழர்களே!
உங்கள் பயணம் வெற்றியாகும்!
எல்லோருக்கும் வாழ்வளிக்கும்!
நம்மை நோக்கிய பிரச்சனைகள்
தீர்வதற்கு வழிகோலும்,
தீர்மானங்கள் உருவாகட்டும்.
உரமாக, செறிவாக
போராடும் தலைவர்கள்
புதிதாய் பதவி ஏற்கட்டும்!
உங்களது சுற்றுப் பயணம்
வெற்றி பயணம் ஆகட்டும்!
என்றும் நமது மாவட்டம்
ஏற்ற பணியில் சிறக்கட்டும்.
வாழ்த்துக்கள் தோழர்களே!
எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
Thursday, March 8, 2018
சர்வதேச மகளிர் தினம்
இன்று உலகம் முழுவதும் கொண்டாடப் படும் சர்வதேச
மகளிர் தினம் உருவானதே ஒரு போராட்டக் களத்தில்தான். 1900ஆம் ஆண்டின் முதல் 10 ஆண்டுகளில்
பெண்கள் பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இவற்
றிற்கு எதிராக உலகம் முழுவதும் பெண்கள் வெகுண்டெழுந்து போராடிக்கொண்டிருந் தனர். சில
நாடுகளில் பெண்களுக்கான அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.
சர்வதேச மகளிர் தினம் தோற்றம்
1907-ல் ஜெர்மனியில், ஸ்டட்கார்ட் என்ற நகரில் முதன் முதலாக ‘சோசலிச பெண்கள் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் 15 நாடுகளிலிருந்து 59 பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். உலகம் முழுவதுமுள்ள பெண்கள் அமைப்புகளை ஒருங்கிணைப்ப தற்கு ஒரு சர்வதேச பெண்கள் அமைப்பு இம்மாநாட்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு கிளாரா ஜெட்கின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
1908-ம் ஆண்டு முதன்முதலில் நியூ யார்க் நகரில், 15000-க்கும் மேற்பட்ட பெண் கள் பேரணியாக சென்று தங்களின் வேலை நேரத்தை குறைக்க வலியுறுத்தியும், தேர் தலில் வாக்களிப்பதற்கான உரிமை கோரி யும், தங்களுக்கு நியாயமான, சமவேலைக்கு சமஊதியம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
1909-ல் ஆடை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த மகளிர் தங்களுக்கு நியாய மான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத் தம் மேற்கொண்டனர். அமெரிக்காவின் சோச லிஸ்ட் கட்சி தேசிய அளவிலான முதல் மகளிர் மாநாட்டை பிப்ரவரி 28-ம் தேதி நடத் தியது. அன்றைய தினத்திலிருந்து 1913 வரை பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டது.
ஜெர்மனியில், 1910-ல் கோபன்ஹேகன் நகரில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சி இரண்டாவது மகளிர் மாநாட்டை நடத் தியது. இதில் 17 நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். இவர்கள் பல்வேறு நாடுகளின் தொழிற்சங் கங்களின் பிரதிநிதிகளாகவும், சோசலிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளாகவும், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகளாகவும் இருந்த னர். பின்லாந்து நாட்டின் நாடாளுமன்றத் திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதிநிதிகளாக வந்திருந் தனர். இந்த மாநாட்டில் சோசலிஸ்ட் ஜனநா யக கட்சியின் மகளிர் பிரிவு தலைவராக இருந்த கிளாரா ஜெட்கின், பெண்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தை நடத் திட வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார். இந்த தீர்மானம் அனைத்து பிரதி நிதிகளாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ரொட்டியும் ரோசாப்பூவும்
தொடர்ந்து 1911-ல் சர்வதேச மகளிர் தினம் முதன்முதலாக ஆஸ்திரியா, டென் மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடு களில் மார்ச் மாதம் 19-ந்தேதி கொண்டாடப் பட்டது. இந்த நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட பேரணி கள் நடைபெற்றன. இந்த பேரணிகளில் பெண்கள் வேலை செய்வதற்கான உரிமை. தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமை, பயிற்சி பெறுவது, பொது அலுவலகங்களில் வேலை செய்வது, சமூகத்தில் பாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.
அதே ஆண்டில் மார்ச் மாதம் 25-ந்தேதி அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற ஒரு முக்கோண தீ விபத்தில், பணியில் ஈடுபட் டிருந்த 140 பெண்கள் உயிரிழந்தனர். இவர் களில் பெரும்பாலானோர் இத்தாலி நாட் டைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்து அன் றைய தினம் அமெரிக்க நாட்டில் பெண்க ளுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்ததை வெளிப்படுத்தியது. இதன் பின்னர், தொழி லாளர் சட்டங்களை கடுமையாக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட இந்த நிகழ்ச்சி அடிகோலாக அமைந்தது. இதே ஆண்டில் பெண்கள் நடத்திய ‘ரொட்டியும் ரோசாப்பூவும்’ என்ற இயக்கம் பெண்களின் கோரிக்கை களை வலியுறுத்துவதாக அமைந்தது. இத்த கைய தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை யும் வேலை செய்யும் உரிமையும் சம ஊதியம் பெறும் உரிமையும் பிற்காலத்தில் கிடைத்தன.
மார்ச் 8
சர்வதேச பெண்கள் தினம்
1913-14-ல் ரஷ்ய நாட்டில் முதன் முறை யாக சர்வதேச பெண்கள் தினம் கொண் டாடப் பட்டது. 1913-ம் ஆண்டு பிப்ரவரி கடைசி ஞாயிறு அன்று நடைபெற்ற மாநாட்டில் மார்ச் 8 பெண்கள் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 1914-ல் போருக்கு எதிராக பெண்கள் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பேரணி நடத்தினர். 1917-ல் ரஷ்ய பெண்கள் ‘ரொட்டிக்காகவும் போருக்கு எதிராகவும்’ பிப்ரவரி கடைசி ஞாயிறு அன்று வேலை நிறுத்தம் செய்தனர். அப்போது நடைபெற்ற போரில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருந்தனர். இந்த வேலை நிறுத்தத்தை தடைசெய்ய ஆரம்பத் தில் அரசு முயற்சி செய்தபோதும் பின்னர் ரஷ்ய நாட்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை முதல் முறையாக தந்தது குறிப் பிடத்தக்கது. அந்த வீரஞ்செறிந்த வேலை நிறுத்தம் ரஷ்ய ஜூலியன் காலண்டர் படி பிப்ரவரி 23 என்றாலும் உலகம் முழுவதும் கடைப்பிடித்து வரும் காலண்டர் படி மார்ச் 8 ஆகும். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளே நாம் இன்று கொண்டாடும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாகும்.
இன்று சர்வதேச மகளிர் தினம் உலகில் அனைத்து நாடுகளிலும் உற்சாகமாக கொண் டாடப்படுகிறது. சீனா, வியட்நாம், ஒன்றுபட்ட ரஷ்ய நாடுகளில் இன்று மகளிர் தினத்திற்கு அரசு விடுமுறை விடப்படுகிறது. அமெரிக் காவில் மார்ச் மாதம் முழுவதும் பெண்கள் வரலாற்று மாதம் (றுடிஅநn’ள ழளைவடிசல அடிவோ) கொண்டாடப்படுகிறது.
இந்திய நாட்டில் பெண்கள் நிலை
நமது நாட்டிலும் மகளிர் தின கொண் டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வணிக நிறுவனங்கள் இந்த நாளை பயன் படுத்திக்கொண்டு ஆடை அணிகலன்கள் விற்பனைக்கு, விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் இந்திய நாட்டில் பெண்கள் நிலை மிகவும் மோசமாகவுள்ளது.
இந்திய நாட்டில் பணிபுரியும் பெண் களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக ‘அசோசெம்’ அமைப்பு சேகரித்த புள்ளி விப ரங்கள் கூறுகின்றன. இரவு நேரங்களில், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற் றும் பெண்களும், விமானப் போக்குவரத்துப் பணியில் பணியாற்றும் பெண்களும், மருத்து வமனையில் பணியாற்றும் பெண்களும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்றும், நிறுவனங்கள் இவர்களுக்கு போதுமான பாதுகாப்பை தரத்தவறியுள்ளன என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது தலைநகர் தில்லியில் அதிகபட்சமாக 65சதவீதமும் ஹைதராபாத்தில் 28சதவீதமும் மும்பையில் 28சதவீதமும் என உள்ளது.
பெங்களூரில் உள்ள 2200 தொழில் நிறுவனங்களில் 1600 நிறுவனங்கள் மட்டும் தொழில்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் 75000 முதல் 95000 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். மருத் துவமனைகள், விமானப்போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பணி யாற்றும் இவர்களில் 56சதவீத பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என ‘அசோசெம்’ புள்ளிவிபரம் கூறுகிறது.
மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால் நேரு, தந்தை பெரியார் போன்றவர்கள் பெண் களுக்கு சம உரிமை வழங்குவது குறித்து பேசியிருந்தாலும், பெண்களுக்கென தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், அவை யெல்லாம் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளன. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு பிரச்சனையில் இன்று இந்திய அரசியல்வாதிகளின் முகமூடிகள் கிழித்தெறி யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சித் தலைவர்களை தவிர ஏனையோர் இரட்டை நிலைப்பாடு கொண்டி ருப்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. மாநி லங்களவையில் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு மசோதா, மக்களவையில் நிறை வேற்ற முடியாமல் உள்ளது வெட்கக்கேடானது.
இன்று பெண்கள் தினத்தை கொண்டாடு வதில் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் உள்ளது. அதே போல் உழைப்பாளி மக்களுக் கும் ஒரு நோக்கம் உள்ளது.
பெண்களுக்கு, சமூகம், அரசியல், பொரு ளாதாரம் மற்றும் தொழிற்சங்கத்தில் சமத்து வம் கிடைத்திடவும், சொத்து உரிமை, சட்டம் இயற்றக் கூடிய அவைகளில் இடம் பெற்றிடவும்,
வேலை செய்யுமிடங்களில் ஆண்- பெண் என்ற பாகுபாடு இல்லாமலிருக்கவும், வேலை செய்யுமிடங்களில் பாதுகாப் பினை உத்தரவாதப்படுத்திடவும், குழந்தைகள் காப்பகங்கள் ஏற்படுத்திடவும், பாலியல் பலாத்காரத்தை தடுத்து நிறுத்திடவும், வரதட்சணைக் கொடுமைகளை களைந்திட வும், பெண்களை வணிக விளம்பரத்திற்கு அருவருக்கத்தக்க முறையில் பயன்படுத் துவதை தடுத்து நிறுத்திடவும், சாதியக் கொடுமைகளிலிருந்தும், மதரீதியான, சம்பிர தாய, மூட பழக்க வழக்கங்களிலிருந்தும் பெண்களை மீட்டெடுத்திடவும், உலகமயத் தினால் முதலில் பாதிக்கப்படுவது பெண் என் பதால் அவற்றிற்கு எதிரான போராட்டங்களில் பெண்களை ஈடுபடுத்துவதும்
இன்று உழைப்பாளி மக்கள் முன் உள்ள தலையாயக் கடமைகளாகும். இந்த உணர் வோடு 108-வது சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவோம்.

வாழ்த்துக்கள் தோழியர்களே !
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர், தஞ்சை.
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர், தஞ்சை.
Wednesday, March 7, 2018
பெரிதும் வருந்துகிறோம்!
காரைக்கால் கிளைச் செயலராக பணியாற்றி வரும்
அன்புத் தோழர். பன்னீர்செல்வம்
அவர்களின் மனைவி
இன்று 05-03-2018 மாலை இயற்கை எய்தினார் என்பதை
ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது இறுதி மரியாதை நாளை 06-03-18 அன்று
கோட்டுச்சேரி அவரது இல்லத்தில் நடைபெறும்.
உற்ற துணையின் பிரிவால் வாடும் தோழருக்கும்
அவர்தம் குடும்பத்தாருக்கும் தஞ்சை மாவட்டச் சங்கம்
தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
Tuesday, March 6, 2018
மருத்துவப்படி குறைப்பு
செலவுகளை குறைக்கவேண்டும் என்பதன்
அடிப்படையில் அவுட்டோர் டிரீட்மெண்ட்
எடுத்துக் கொள்ளும் ஊழியர்களுக்கு
இதுநாள் வரை கொடுத்து வந்த
ஓராண்டுக்கான லிமிட் தொகை
குறைக்கப்பட்டு வரும் 01-04-2018 முதல்
12 நாள் சம்பளம் + DA என்றளவில்
தொகை கணக்கிடப்படும்.
ஓய்வூதியர்களுக்கு இதுநாள் வரை வவுச்சர் இல்லாமல் பெற்று வந்த தொகை நிறுத்தப்பட்டு வரும் 01-04-2018 முதல் பழைய முறையே தொடரும்.
Friday, March 2, 2018
NFTE - BSNL
தஞ்சை மாவட்டம்
நம்பிக்கையின் சின்னமாக நமது BSNL
ஏர்செல் கம்பெனி திவால் ஆகிவிட்டது
என்ற செய்திக்குப் பிறகு நமது BSNL அலுவலகத்திற்கு
MNP கேட்டு பொதுமக்கள் குவியத் தொடங்கிவிட்டார்கள்.
நமது அலுவலங்களிலும் இதற்கான
சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்கள்.
இருப்பினும் இந்த வாய்ப்பை நாம் முன்னிலும்
முனைப்பாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்கள்.
இருப்பினும் இந்த வாய்ப்பை நாம் முன்னிலும்
முனைப்பாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
ஏர்செல் வரும் ஏப்ரல் 15 வரை இணைப்பில் இருக்கும்
என்று TRAI கூறியிருக்கிறது.
போர்ட்டிங் கோடு இப்போது இரண்டு நாளிலேயே
வர ஆரம்பித்துவிட்டது.
MNP க்கு SMS அனுப்பும் முறையில்
ஏற்கனவே உள்ள முறையே மிகச் சிறந்தது.
அடுத்து ஒரு முறையை கூறியிருக்கிறார்கள்.
அதாவது PORT No. எடுப்பதற்கு
9842012345 க்கு கால் செய்து சிம் நம்பரில்
கடைசி 5 எண்ணை டயல் செய்து PORT No. பெறலாம்.
இதுவே, சென்னையில் வாங்கிய சிம் என்றால்
9841012345 என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும்.
இப்போது வோடாபோனும் நிதி நெருக்கடியில் சிக்க வாய்ப்பு
உள்ளதாக தொலைக்காட்சி செய்திகள் கூறுகின்றன.
அதேபோல், ஜியோவும் ரிலையன்ஸுடன்
இணைவதற்காக 4 நாட்கள் தனது
சேவையை நிறுத்தப் போவதாக
செய்திகள் கசிகின்றன.
சூழ்நிலையை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதென்பது,
BSNL ன் வளர்ச்சி என்பதோடு மட்டுமல்லாது,
அரசுத் துறை மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தும்.
தோழர்களே!
பொதுமக்களில் பலருக்கும் MNP க்கு
SMS கொடுக்கத் தெரியவில்லை.
இதற்கு உதவி செய்தாலே பேருதவியாக இருக்கும்.
விபரம் தெரிந்த ஓய்வு பெற்ற தோழர்கள்
பங்களிப்பு செய்தால் நெரிசலைக் குறைக்கலாம்.
இந்தத் தருணத்தில் தோழர்கள் தங்களது
விடுப்பை முடிந்தவரை தவிர்க்கவும்.
இதற்கு உதவி செய்தாலே பேருதவியாக இருக்கும்.
விபரம் தெரிந்த ஓய்வு பெற்ற தோழர்கள்
பங்களிப்பு செய்தால் நெரிசலைக் குறைக்கலாம்.
இந்தத் தருணத்தில் தோழர்கள் தங்களது
விடுப்பை முடிந்தவரை தவிர்க்கவும்.
இப்போது airtel லிலிருந்து கூட
MNP கேட்டு வருகிறார்கள்.
MNP கேட்டு வருகிறார்கள்.
அரசுத் துறைதான் எதற்கும் அசராத துறை
என்ற நம்பிக்கை நம் மக்களுக்கு
வர ஆரம்பித்துவிட்டது.
அந்த நம்பிக்கையை மேலும் வளர்த்தெடுக்க
கடுமையாய் உழைப்போம்.
என்ற நம்பிக்கை நம் மக்களுக்கு
வர ஆரம்பித்துவிட்டது.
அந்த நம்பிக்கையை மேலும் வளர்த்தெடுக்க
கடுமையாய் உழைப்போம்.
வாழ்த்துக்கள் தோழர்களே!
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர், தஞ்சை.
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர், தஞ்சை.
Thursday, March 1, 2018
சிரியா - மனித ரத்தத்தில் மிதக்கும்
அல்லாவின் தேசம்
சமூக வலைதளங்கள் எங்கும் ஒரே ரத்தத்தின் வாடை. முகம் சிதைந்த குழந்தைகளின் அழுகுரலும் கதறலும் நாள் முழுவதும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. நீண்ட வரிசையில் படுக்க வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் பிணங்கள் எல்லாம் உயிர்பெற்று நம்மைப் பார்த்து சிரிக்காதா என்ற ஏக்கம் மனதைக் கவ்வுகின்றது. ஒவ்வொரு போரும் குழந்தைகளை கடவுளின் தேசத்திற்கு வலுக்கட்டாயமாக வழியனுப்பி வைக்கின்றது. கடவுள்கள், அவர்களை வழிதவறி வந்தவர்கள் என்று மீண்டும் திருப்பி அனுப்ப மனமற்று தம்முடைய கொடுங்கரங்களில் இறுகப் பற்றி ரத்தம் வழியும் தனது வாயால் முத்தம் கொடுத்து மகிழ்கின்றன. இரத்தவாடையை சகிக்க முடியாத குழந்தைகள் கதறுகின்றார்கள், கடவுளின் முகத்தில் தமது பிஞ்சுக் கால்களால் எட்டி உதைக்கின்றார்கள். பால்குடி மறக்காத குழந்தைகள் ரத்த வாடை வீசும் கடவுள்களைப் பார்த்து மிரண்டு போய் தாயின் அரவணைப்பில் இருந்து தங்களை திருடிக் கொண்டு வந்த இந்தக் கடவுளை நிச்சயம் ஒரு உண்மைக் கடவுள் வந்து பழி தீர்த்து தங்களை விடுவிப்பார் என்று நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
கடவுள்களுக்கு எப்பொழுதும் போர்களைப் பற்றியோ, பசியைப் பற்றியோ, உழைப்புச் சுரண்டலைப் பற்றியோ கவலை இருப்பதில்லை. அவைகள் தங்களைப் பிரார்த்திக்கும் நபர்கள் நல்ல அடிமைகளாக, விசுவாசிகளாக இருக்கின்றார்களா என்பதை மட்டுமே பார்க்கின்றன. கடவுள்கள் தங்களுக்குள் எப்பொழுதும் சமரசமாகப் போய்க் கொள்கின்றார்கள். அல்லாவின் தேசத்தில் இருக்கும் எண்ணெய்க்கு ஏசுவின் தேசம் உரிமை கொண்டாட முடியும். அமெரிக்க வங்கிகளில் முதலீடு செய்யப்படும் பெட்ரோ டாலர்களை அல்லாவால் மகிழ்ச்சியோடு வரவேற்க முடியும். அதே போல அல்லாவின் தேசத்தில் எண்ணெய்க்காக நடத்தப்படும் பச்சைப் படுகொலைகளை ஏசு ரசித்து மகிழ்வார். கடவுள்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கின்றார்கள். அவர்கள் தங்களுக்குள் ஒருநாளும் முரண்பாடு கொள்வதில்லை. எல்லாக் கடவுள்களும் தங்கள் குழந்தைகள் பட்டினியாலும், நோயாலும், கொடும் வறுமையாலும் சாகும்போது அதைப் பற்றி துளியும் கவலை கொள்வதில்லை. கடவுளின் ஆசிபெற்ற கொலைகாரர்கள், தங்கள் விருப்பம் போல கடவுளின் தேசத்திற்கு கணக்கு வழக்கற்று அதன் குழந்தைகளை கொடூரமாகக் கொன்று அனுப்பி வைக்கின்றார்கள்.
அல்லா சியாவையும் ஆதரிக்கின்றார், சன்னியையும் ஆதரிக்கின்றார், அலாவியையும் ஆதரிக்கின்றார். அதுபோல ஐஎஸ்ஸையும் ஆதரிக்கின்றார். அவர்கள் அனைவரும் தங்களுக்குள் அடித்துக் கொண்டு சாவதை மேல் இருந்து பார்த்து பரவசம் அடைகின்றார். அல்லாவுக்கு மட்டும் அல்ல. உலகில் உள்ள எல்லா கடவுள்களுக்கும் குழந்தைகள் ரத்தம் என்றால் எப்பொழுதும் விருப்பம்தான். சிவனுக்காக பிள்ளைக்கறி சமைத்த சிறுதொண்ட நாயனாரும், கடவுளின் விருப்பத்தை நிறைவேற்ற தனது மகன் ஈசாக்கை பலியிடத் துணிந்த ஆபிரகாமும் இன்னமும் கொண்டாடப்படும் உலகில் குழந்தைகளின் ரத்தம் கேட்கும் கடவுள்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் கடைசியாக மிச்சம் இருக்கும் கிழக்கு கூட்டா பகுதி மீது சிரிய ராணுவமும், ரஷ்யப் படைகளும் கூட்டாக இணைந்து ஐ.நா. சபை அறிவித்த 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தி கொத்துக்கொத்தாய் மக்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கின்றார்கள். மக்கள் ஒரு பக்கம் தங்களை மனிதக் கேடயங்களாய் பிடித்து வைத்திருக்கும் கிளர்ச்சியாளர்களிடமும், அவர்களை அழித்து சிரியாவை சன்னி தீவிரவாதிகளின் பிடியில் மீட்க நினைக்கும் சிரிய அரசுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு மடிந்து கொண்டு இருக்கின்றார்கள். ஒடுக்கப்பட்ட அலாவி பிரிவு முஸ்லிம்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பதை விரும்பாத சன்னி மேலாதிக்கவாதிகள் ஒட்டுமொத்த சிரியாவையும் கைப்பற்றி தங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த, அமெரிக்கா ஏகாதிபத்தியம், சவுதியின் துணையுடன் சிரிய அரசுப் படைகளுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.
மக்களைக் கொன்று போடும் எல்லா முஸ்லிம்களும் அதை அல்லாவின் பெயரால் செய்வதாகவே சொல்கின்றார்கள். குரானின் வரிகளில் இருந்து தங்களது பயங்கரவாத செயல்களுக்கு ஆதாரங்களையும் காட்டுகின்றார்கள். அல்லா யார் பக்கம் நிற்கின்றார் என்பதுதான் இன்னும் பயங்கரவாதிகளால் பாதிக்கப்படும் இஸ்லாமிய மக்களால் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே உள்ளது. அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு தன் சொந்த மத மக்களையே கொன்று போடத் துணைபோகும் இஸ்லாமிய நாடுகளை அல்லா மகிழ்ச்சியோடு அங்கீகரிக்கின்றாரா? தன் சொந்த மக்கள் கை கால்கள் சிதறி, உடல் சிதைந்து துர்மரணம் அடைவதை அவர் வேடிக்கை பார்த்துக் களிக்கின்றாரா?
உலகில் உள்ள எல்லா மதங்களும் ஆளும்வர்க்கத்தின் கைக்கூலியாகவே செயல்படுகின்றன. மதவாதிகளுக்கு தன் சொந்த மதத்தைப் பின்பற்றும் மக்கள் பட்டினியால் சாவதைப் பற்றியோ அவர்கள் வறுமையால் அழிவதைப் பற்றியோ எந்தக் கவலையும் கிடையாது. தன் சொந்த மத மக்கள் தன்னுடைய பெயரால் அடித்துக்கொண்டு சாவதைப் பற்றி கடவுள்களுக்கும் கவலை கிடையாது. மத வெறியர்களின் பயங்கரவாத செயல்களை எதிர்க்கத் திராணியின்றி கோழைகளாய், அடிமைகளாய் மத விசுவாசிகள் இருக்கின்றார்கள்.
மனிதம் இல்லாத எல்லாத மதங்களும் இந்த உலகில் இருந்து அழித்தொழிக்கப்பட வேண்டும். சிரியாவிலோ, இல்லை உலகில் வேறு நாடுகளிலோ மதத்தின் பெயராலும், கடவுள்களின் பெயராலும் தினம் தினம் கொல்லப்படும் நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்களுக்கு இந்த மதவாதிகள் ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும். மனித உயிர்களை இரக்கமற்று கொன்றுபோடும் கொடியவர்களை மதமும், கடவுளும் வேண்டுமென்றால் இந்த உலகில் தொடர்ந்து ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகளாய், எடுபிடிகளாய் இருக்க அனுமதிக்கும். இந்தச் சமூகம் அறிவுபெற்று முற்போக்காக பொதுவுடமையின் சிந்தனையின் வழி மாறும்போது மதத்தையும், கடவுளையும் வைத்து பிழைப்பு நடத்தும் பிற்போக்கு கும்பல் தங்களது இடத்தை காலி செய்துகொண்டு ஓடவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அந்த நாளுக்காக மனிதத்தை மதிப்பவர்கள் நேசிப்பவர்கள் காத்துக்கிடக்கின்றார்கள்.
- செ.கார்கி
நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் - ஒரு சகாப்தம்
இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி .ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களைப் போன்று ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் அரசியல் ஈடுபட்டபோதும் அவர் தோல்விகளைச் சந்தித்தார். ஆகவே அரசியல் பணிகளில் இருந்து விலகி, வழக்கறிஞர் தொழிலைத் தொடர்ந்தார். தமிழக அரசினால் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞராகவும், அட்வகேட் ஜெனெரலாகவும் நியமிக்கப்பட்டார். 1974ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு, 1988ல் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார். அதன் பின்பு 1988 முதல் 1994 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்தார். இந்தியா உச்சநீதிமன்ற வரலாற்றில் தமிழகத்தில் இருந்து தலைமை நீதிபதியாக மாற வேண்டிய சூழல் வந்த பொழுது அதனைப் பெருந்தன்மையாக வெங்கடாசலய்யாவிற்குத் தந்த பெருமை நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்களுக்கு உண்டு .
இந்தியாவின் தெற்கு சீமையிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் பல அரசியல் சட்ட அமர்வுகளில் அமர்ந்து குறிப்பாக எஸ்.ஆர். பொம்மை வழக்கில் மத்திய அரசு, மாநில அரசுகளை அரசியலமைப்புச் சட்ட பிரிவான 356-ஐ பயன்படுத்திக் கலைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு உள்ள உரிமைகளைத் தெளிவாக வரையறை செய்தார். இதன்மூலம் மத்திய அரசின் எதேச்சதிகாரம் தடைபட்டது. குறிப்பாக பல மாநிலங்களில் ஆட்சியும், உரிமையும் பாதுகாக்கப்பட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 482ன் கீழ் குற்ற வழக்குகளை ரத்து செய்யயும் உயர்நீதிமன்றத்தின் உள்ளார்ந்த அதிகாரத்தில் 'பஜன்லால்' என்ற வழக்கு மூலம் பல நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்தார். இன்றைக்கும் இந்த வழக்குதான் அனைத்து இந்திய உயர்நீதிமன்றங்களிலும் முன் மாதிரித் தீர்ப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. போபர்ஸ் வழக்கு, கத்தார்சிங், W.N.சக்லா போன்ற முக்கிய வழக்குகளில் நீதிபதியாக இருந்து தீர்ப்பை எழுதியுள்ளார்.
ஓய்வுக்குப் பின்பான சமூகப்பணிகள்
உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு காஷ்மீர் பிராக்போரா துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் தலைவராக செயல்பட்டார். நேர்மையானமுறையில் பல்வேறு மிரட்டல்களை சமாளித்து, காஷ்மீர் களத்தில் இருந்து நேரடி ஆய்வு செய்து, அப்போதைய காஷ்மீர் மாநில முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் 225 பக்க அறிக்கையை விரைவாக சமர்ப்பித்தார். தான் பணியாற்றியதற்காக அரசு வழங்கிய சம்பளத்தை அப்படியே முழுவதையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொடுத்து உதவினார்.
ஐந்தாவது ஊதியக்குழு தலைவராக 1994 முதல்1997 வரை பொறுப்பு வகித்தார். மேலும் தேசிய பிற்படுப்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக சில ஆண்டுகள் பதவி வகித்தார். தனது சொந்த ஊரில் 40 ஏக்கர் நிலத்தை தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை உயர்த்துவதற்காக வழங்கி, வீடுகள், பள்ளிக்கூடம் மற்றும் அனாதை மக்களுக்காக இல்லங்களை உருவாக்கினார். இது மட்டுமின்றி 20 ஏக்கர் நிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ளவும் தனக்கு சொந்தமான நிலத்தில் வழிவகை செய்தார்.
சிறந்த சமூகப் பணிகளுக்காக சிறந்த குடிமகனுக்கான தேசிய விருதை அன்னை தெரசா அவர்களின் கைகளில் இருந்து பெற்றார். நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் சமூக நீதிக்கான பணிகளைப் பாராட்டி நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் நூற்றாண்டு விழா விருதை மதுரை மையமாகக் கொண்டுசெயல்படும் சோக்கோ அறக்கட்டளை 2016ம் ஆண்டு வழங்கியது. சமூகப் பிரச்னைகளைப் பற்றி பேசும்போது கணீரென்று பேசுவார் என பாலி.எஸ்.நரிமன் தனது கடிதம் ஒன்றில் ரத்தினவேல் பாண்டியன் பற்றிக் குறிப்பிடுகிறார்.
நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் கொடுத்த இடைக்கால அறிக்கையின்படி சாதீய மோதல் மூலம் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தமிழக மக்களுக்கு அன்றைய முதல்வர் பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். நேர்மையுடன் தைரியமாக காஷ்மீரில் ஒரு நபர் ஆணையத்தின்மூலம் உண்மையை உரக்கச் சொல்லியதால் காஷ்மீர் மக்களின் இதயத்தில் நிரந்தரமாக நின்றார். அதேபோன்று சமூக ஏற்றத்தாழ்வுகளை கலைவதற்காக இந்திராசாஹினி வழக்கில் இடஒதுக்கீட்டைஆதரித்து தீர்ப்பு வழங்கியதன் மூலம் அவரின் உடல் இவ்வுலகைவிட்டு மறைந்தாலும் என்றென்றும் நம் அனைவரது இதயங்களிலும் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் வாழ்வார்!
Tuesday, February 27, 2018
தோழர். A. பன்னீர்செல்வம் TT அவர்கள்
இம் மாதம் 28-02-2018 அன்று பணி நிறைவு பெறுகிறார்!
27-02-18 அன்று கூத்தாநல்லூரில் சிறப்பான முறையில் பாராட்டு விழா நடைபெற்றது.
ஊழியர்கள், அதிகாரிகள், ஊர்ப் பிரமுகர்கள், கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் என்ற வகையில் 100 க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
நமது மாவட்டச் செயலர்
தோழர். கிள்ளிவளவன்,
TMTCLU மாவட்டச் செயலர்
தோழர். கலைச்செல்வன்,
மாவட்டத் தலைவர் தோழர். நாடிமுத்து,
மாநில மகளிரணி தலைவர்
தோழியர் லைலாபானு,
ஓய்வு பெற்ற தோழர்கள்
மன்னை காளிதாஸ், MC,
பட்டுக்கோட்டை சிவசிதம்பரம்
மற்றும் பல தோழர்கள்
பங்கேற்று வாழ்த்தினர்.
பெரிதும் வருந்துவோம்!
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும்
அரசுப் படையினருக்கும்
இடையே நடைபெறும் சண்டையில்
அப்பாவி மக்கள், குழந்தைகள்
பேரல் குண்டுக்கு பலியாகிற,
காயப்படுகிற கொடுமை
பெரிதும் வேதனை அளிக்கிறது.
சர்வதேசத் சமூகம், ஐக்கிய நாடுகள் சபை
இவையெல்லாம் எதற்கு இருக்கிறது
என்றே தெரியவில்லை.
என்ன கொடுமைடா! சாமி!!
நமக்கு நடந்ததாய் எண்ணுவோம்!
கவலைப்படுவோம், வேதனைப் படுவோம்!!
நாய்களை திட்டித் தீர்ப்போம்!
மனித குலமா இதைச் செய்கிறது என்று வெட்கப்படுவோம்!
Subscribe to:
Posts (Atom)