சின்ன புள்ளத்தனம்
சிறப்பாக நடந்த வேலூர் செயற்குழு இரவு 10 மணி வரை நடந்ததற்கு என்ன காரணம். தேவையில்லாத வெளிநடப்பு என்ற சிறுபிள்ளைதனமான செயல்தான். சில அரசியல்வாதிகள் செய்த செயலை நாம் செய்யலாமா? அந்த சிறுபிள்ளைதனத்தை ஆதரிக்கவும் ஒரு சிலர் இருக்கிறார்களே என்பதும் நமது வேதனை.
எதனால் வெளிநடப்பு?
சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை மாநாட்டில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து. அவர்கள் யார்?
ஒருவர் மதுரை சேது. இன்னொருவர் குடந்தை ஜெயபால்.
மதுரை சேது: இவர் மதுரையில் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தி தனது பணி ஓய்வு மூலம் வந்த பணத்தையும் மாநாட்டில் ஈடுபடுத்தி மாநாட்டை நிறைவுசெய்து அதன் வரவு செலவு கணக்குகளை வேலூர் செயற்குழுவில் தாக்கல் செய்ய வருகிறார். மாநாட்டுக்காக கூடுதலாக அவரால் செலவு செய்யப்பட்ட ரூபாய் 2 லட்சம் தொகையினை அளிக்க நாம் முடிவு செய்ய வேண்டிய நிலையில்தான் அவரை நீக்கிட கோரி வெளிநடப்பு.
குடந்தை ஜெயபால்: இவரும் மதுரை மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க தம்மை பல்வேறு பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டவர். பொறுப்பாளர் தேர்வில் பிரச்சினை ஏதும் வாராதிருக்க போடப்பட்ட கமிட்டியிலும், தேர்தல் நடத்த போடப்பட்ட கமிட்டியிலும் ஈடுபட்டு உழைத்தவர். இவரையும் நீக்கிடக் கோரித்தான் வெளிநடப்பு.
நன்றியோடு நினைத்துப் பார்த்து, போற்றிப் பாராட்ட வேண்டியவர்களை, சிறப்பு அழைப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை, மேடையில் வைத்துக் கொண்டே அவர்களை நீக்க வேண்டும் என்று சொல்வது அவர்களை அவமானப்படுத்துவது போல் ஆகாதா.
அதையும் தாண்டிஇதற்காக வெளிநடப்பு என்பதும் சரியா? சரி! எதற்காக அவர்களை நீக்க வேண்டும். அவர்கள் இருந்தால் என்ன பாதிப்பு ஏற்படும். இவைகளையெல்லாம் அமைப்பு நிலை விவாதத்தில் சபை அறிய தெளிவாக பேசுங்கள் என்று மாநிலச் செயலர் சொன்ன போதும் ஏன் அதை மறுதலிக்க வேண்டும்.
மேலும், வெளிநடப்பு செய்தவர்கள் மதியம் ஒரு மணிக்கு மேல் எழுந்து போய்விட்டால் அதற்குப் பெயர் உண்ணாவிரதமா? இதற்கெல்லாம் போய் ஜெகன் அணுகுமுறைகளை நினைவு கூறலாமா? இது ஜெகனுக்கு செய்த துரோகமாகாதா! என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.
மேலும், வெளிநடப்பு செய்தவர்கள் மதியம் ஒரு மணிக்கு மேல் எழுந்து போய்விட்டால் அதற்குப் பெயர் உண்ணாவிரதமா? இதற்கெல்லாம் போய் ஜெகன் அணுகுமுறைகளை நினைவு கூறலாமா? இது ஜெகனுக்கு செய்த துரோகமாகாதா! என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.
எனவேதான் இதை சிறுபிள்ளைத்தனமாக செய்துவிட்டார்கள் என்று சொல்லும் போது மனது சற்று ஆறுதல் கொள்கிறது. எனவே, இந்தத் தோழர்கள் இனியாவது ஆரோக்கியமான விவாதத்திற்கு தயாராகட்டும்.
எஸ். சிவசிதம்பரம்.
பட்டுக்கோட்டை.