தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, June 18, 2013

காஞ்சி வலைத்தளம் -காக்கட்டும் கண்ணியம்


காஞ்சிவலைதளத்திற்கு கனிவான வணக்கங்கள்........நான் மாவட்டசெயலராய் பொறுப்பேற்றதிலிருந்து தஞ்சை வலைதளத்தை நடத்திவருகிறோம்.தோழர் சீனாதானாவும் ,நானும் வெப்சைட் நிர்வகிக்கிறோம் ,தற்போது அதே நிலைதான் தொடர்கிறது ;ஏதோ புதிதாய் கண்டுபிடித்ததை போல எங்களின் மாவட்ட செயலருக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக website நடத்துவதாக விஷமத்தனமாக  எழுதிஉள்ளீர்கள் .நான் எழுதியுள்ள விஷயத்தை மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள் .தோழர் மதியை குறை கூறியுள்ளேனா?அல்லது திருச்சியில்  விழா நடத்தப்படும்  விதம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளேனா? தேவையில்லாமல் தோழர் பட்டாபி குறித்தும் அவர் வகிக்கும் மாநிலச்செயலர் பொறுப்பையும் மற்றும் என்னையும் சிறுமை படுத்தி எழுதியுள்ளதிலிருந்து உங்களின் சிந்தனை /மன வக்கிரம் வெளிப்பட்டுள்ளது .தொழிலாளி வர்க்க போராட்ட களத்தில் எனது 18 வயது முதல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறேன்.பயமுறுத்தல் ,அச்சுறுத்தல் ,மிரட்டல் இவைகள் யாவும் முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்தும் அதே காலாவதியான நடைமுறை வாசகம் உங்கள் எழுத்தில் தெரிகிறது .இது தொழிலாளி வர்க்க நடைமுறை பாதையிலிருந்து நீங்கள் விலகியதன் அடையாளம் .
தேவையில்லை தோழரே! விமர்சனம்/சுயவிமர்சனம் என்பது தொழிலாளி வர்க்கத்திற்கும் /கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இயல்பாய் இருக்க வேண்டிய நற்குணங்களில் ஒன்று .உங்கள் எழுத்தில் அது தெரியவில்லை குணக்கேடு தான் தெரிகிறது.

  அச்சுறுத்தலும் -அஞ்சுதலும்
  பயமுறுத்தலும்-பயந்துபோதலும்
  அடக்குதலும் -அடங்கிபோதலும்
  மிரட்டுதலும் -மிரண்டுபோதலும்
  ஒதுக்குதலும் -ஒதிங்கிபோதலும்
நமது வர்க்க குணமல்ல -நாம் எல்லோரும்
ஒரே பாசறையில் தான் வர்க்கம் பயின்றவர்கள்
தேவையின்றி என்னை மேலும் எழுதவைக்காதீர்கள் .


நன்றி ,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL ,
THANJAVUR .

10 comments:

  1. உளரல் அதிகமாயிட்டு இருக்கு நடராஜா
    கொஞ்ச நாள் கம்முனு கிட

    ReplyDelete
  2. உளரல் அதிகமாயிட்டு இருக்கு நடராஜா
    கொஞ்ச நாள் கம்முனு கிட

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. தோழர்க்கு ...சொந்த முகம் காட்டாது ...கட்டுரைக்கு ...விமர்சனம் வரும்பொழுதே தெரிகிறது
    நியாயம் எவ்விடம்... யாரிடம்...இருக்கிறது என ....!
    கம்ப இராமாயணத்தில் ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சங்களை தேடும் இலக்கண புலிகளிடம்...
    அகநானுற்றில் மார்க்சியம் தேடும் அறிவு ஜீவிகள்...
    மதுரை வீதியில் கண்ணகி திருகி எறிந்ததை தேடி கொண்டிருக்கும் கசாப்பு கடைகாரர்களிடம்...நியாயம் கேட்டால் ..
    தேடினால் இப்படி தான் ... வசைநாகரிகம் தான் ...அஞ்சாதுதொடரட்டும் ... உங்கள் பயணம்...
    விஜய்-குடந்தை

    ReplyDelete
  5. உம்மை நிராகரிக்க முடியாமல்...வலிமையாக தாக்குவதும், ஏற்றுக் கொள்ள முடியாமல் கடுமையாக ஏசுவதும்.. உமக்கு அவர்கள் அறியாமல் தருகிற அங்கீகாரம் . எதிர்ப்பும் ,வெறுப்பும் அற்ற உலகில் எதற்கு நீங்களும்...நாங்களும்...? . எது வரினும் எடுத்துரைபோம்...
    விஜய் குடந்தை

    ReplyDelete
  6. தோழர் நடராஜன் அவர்களுக்கு ...குடந்தையில் அந்த தரம் குறைந்த காஞ்சி இணையவசை பார்த்த பலரும் சொன்ன கருத்து என்னவென்றால்...முகநூலின் அரசியல் தனிநபர்களின் எவ்வாறு உளவியலை உருக்குலைக்கிறது என்பதற்கு சாட்சியமாக விளங்குகிறது சமீபத்திய விவாதங்கள். இணைய தள விவாதம் என்பது அறிவை பகிர்தல் என்பதற்கு மாறாக கேவலமாக ஏசிக் கொள்வதும், ஆதாரம் இல்லாமல் திட்டிக்கொள்வதுமாக மாறி விட்ட சூழலில்...இணைய வெளியும், தெரு முனை பைப்படியாக மாறி விட்டதை நம்மால் கவலையுடன் கவனிக்கத்தான் முடிகிறது
    மதுரையில் ஆரம்பித்த இந்த வசை...ஆதாரம் இல்லா ...பொய் பிரசாரம்...பட்டாபிக்கு இதய கோளாறு என்று சொல்லிய பொய் மாலைகள் எதுவும் ....பட்டாபி தான் தமிழ் மாநிலம் ஏற்று சுவாசித்து வரும் தலைவன் என்று ஆன பிறகு இம்மியும் குறையவில்லை... தங்கள் கருத்திற்கு...விமர்சனதிற்கு பதில் தராது தேவை இன்றி ...தனி மனித விமர்சிப்பில் கவனம் செலுத்துவோரிடம் இருந்து விலகி நிற்பது ஒன்றும் நம்மை கோழை
    ஆக்காது ...
    விஜய்-குடந்தை

    ReplyDelete
  7. கொச்சையாய் அபத்தமாய் எழுதும் உங்களுக்கு கருத்துக்கள் உளறலாய் தான் தெரியும்,தமிழை நன்கு கற்கவும்.தெளிய எழுதவும்.நடராஜா அநீதிக்கு எதிராய் தொடர்ந்து எழுதுங்கள்.போலிகளின் முகத்திரையை கிழியுங்கள்.

    ReplyDelete
  8. உசுப்பேத்தியே நடராஜனை ரணம் பண்றேங்கேளாயா?

    ReplyDelete
  9. நடராஜா நீங்கள் சரியாய் எழுதி உள்ளீர்கள் ,ஏசுவோர் ஏசட்டும் ,கவலைபடாதீர்,தொடரட்டும் உம் பணி ,,,

    ReplyDelete
  10. நடராஜா நீங்கள் சரியாய் எழுதி உள்ளீர்கள் ,ஏசுவோர் ஏசட்டும் ,கவலைபடாதீர்,தொடரட்டும் உம் பணி ,,,

    ReplyDelete

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR