JUNE 16 சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
"எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலேஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே "
என்றான் பாரதி .
ஒவ்வொருவர் வாழ்விலும் "தந்தை " என்னும் பாத்திரம் ஒவ்வொரு அனுபவத்தை கொடுத்திருக்கும்.தந்தை என்பவர் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு உணர்வை தருபவராய் ,அரவணைப்பை தருபவராய் ,வழிகாட்டியாய் ,
முன்உதாரணமாய் விளங்க வேண்டும் .
" தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை " என்று சொல்பவரும் உண்டு.நமது பகுதியின் பிதாமகன் தோழர் குப்தா ,ஜெகன் ஏராளமான குடும்பங்களுக்கு வெளிச்ச கீற்றை தந்தவர்கள் .
அடிமட்ட தொழிலாளியாய் வாழ்கையை தொடங்கிய நம் தோழர்களின் .ஒவ்வொருவர் வாழ்க்கை பயணத்திலும் நிழலாய் துணை நின்றவர்கள் நம் தோழர்கள் மனதில் நிலைத்து நிற்பவர்கள் .தோழர் குப்தா ,ஜெகன்
திருஉருவப்படம் இல்லாத NFTE தோழர்களின் வீடே இல்லை எனலாம் .சர்வதேச தந்தையர் தினத்தில் தொலைதொடர்பு தொழிலாளர்களின் பிதாமகன்கள் தோழர் குப்தா ,ஜெகன் ஆகியோரை போற்றுவோம் .அவர்தம் குடும்பத்திற்கு நன்றி கூறுவோம் .
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .
தஞ்சை இணையம் சிலிர்த்து எழுந்து நிற்கிறது....இணைய பொய் புனைவுகளை விலக்கி உண்மை தெரிந்திட ... உங்கள் பணி கட்டாய தேவை இன்றும்... என்றும்
ReplyDeleteம.விஜய்- குடந்தை
நன்றி தோழர் விஜய் !
ReplyDelete