நெல்சன் மண்டேலா ( பிறப்பு: ஜூலை 18, 1918), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர்
(வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க
தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா
கெரில்லாப் போர்முறைத்
தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு
சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக
விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார்.
தொண்ணூற்று நான்கு வயதான மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை
மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக,
ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட
குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு
தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
கேப்டவுண்: ஆஸ்பத்திரில் அனுமதிக்கப்பட்டுள்ள நெல்சன் மண்டேலாவின்
உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபரான 94 வயது நெல்சன் மண்டேலா நுரையீரல்
நோய்த்தொற்று காரணமாக ஜூன் 8-ம் தேதி பிரிட்டோரியா நகரில் உள்ள
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது உடல்நிலை திடீரென மோசமானதைத் தொடர்ந்து,
தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, துணை அதிபர் சிரில் ராமபோசா ஆகியோர்
அன்று மாலை மண்டேலாவை மருத்துவமனை சென்று பார்த்தனர்.
அதன் பின்னர் அதிபர் ஜூமோ சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
"மண்டேலாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவினரை அதிபர்
ஜேக்கப் ஜூமா சந்தித்து அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார். கடந்த 24
மணி நேரமாக மண்டேலாவின் உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது என்று மருத்துவக்
குழுவினர் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தத்
தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் டாக்டர்கள் மேற்கொண்டுள்ளனர்' என
தெரிவிக்கப்பட்டுள்ளது .
நன்றி,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .
No comments:
Post a Comment