தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, June 8, 2013

மகத்தான மனிதர் பட்டாபி

                                   
 மகத்தான மனிதர் பட்டாபி 

  •           1985 தோழர் பட்டாபிக்கு JTO POSTING பெங்களூரில் கிடைக்கிறது அன்றைய மாநில தலைமை ஆரூரில் இப்போதுதான் MAZDOOR கிளை தொடங்கியிருக்கிறீர்கள்.  அதை பாதியில் விட்டு சென்றால் அமைப்பு வீணாகிவிடும்.  ஆகவே நீங்கள் ஆரூரிலேயே இருங்கள் என பணித்தது.  அதை சிரமேற்கொண்டு செயல்பட்டவர் பட்டாபி.
  •           திருவாரூர் தொழிற்சங்க கூட்டமைப்பு (TTUC ) தொடங்கி சில மாதங்களிலேயே கூட்டமைப்பில் அங்கம் வகித்த சங்க தோழியரிடம், சுயமரியாதையை கெடுக்கும் வகையில் நடந்துகொண்ட காவல்துறை அதிகாரியை எதிர்த்து போராடி மன்னிப்பு கோர செய்தவர் தோழர் பட்டாபி.
  •           தஞ்சை MAZDOOR போராட்டத்தில் சிறை சென்றவர்.
  •           காவிரி நதி நீர் போராட்டத்தில் கைதானவர்.
  •           OTBP /BCR  போராட்டத்தில் INCREMENT CUT பெற்றவர் .
  •           வேதையில் சமூக ஆதிக்க சக்திக்கு எதிராக போராடி தோழர் R K மற்றும் பல்வேறு தோழர்களோடு  வழக்கை சந்தித்தவர் .
  •            2003 ல்  ஆசிரியர் அரசு ஊழியர் போராட்டத்தில் களத்தில் நின்று உதவியவர்.
  •            தோழர் பட்டாபி தனிமனித ஒழுக்கத்தில் சிகரம்.
  •            தோழமை உள்ளங்களுக்கு அரண்.
  •            சமரசமில்ல போராளி. 
  •             MAZDOOR  வாழ்விற்காக, நமது இயக்கத்திற்காக அதிகாரியாகும்    வாய்ப்பை துறந்தவர் .
  •              பாட்டாளி வர்க்கத்தின் ஏர்முனை அவர் .
  •             தோழர்களின் உள்ளம் கவர்ந்த நாயகன்.
  •              எத்தனையோ சதிகளுக்கு இடையே முட்டுகட்டைகளை தகர்த்தெறிந்து, அவரை  மாநில செயலர் ஆக்கியது மதுரை. 
  •              CGM சந்திப்புக்கு அழைத்தார் புறக்கணித்தீர்கள். 
  •              சேலம் கூட்டத்தில் பங்கேற்க தவறினீர்கள்.
  •              தேர்தல் பிரச்சாரம் தனி அணியாய்  சென்றீர்கள்.
  •              குடந்தை வெற்றி விழா கூட்டம் பற்றி கொச்சை படுத்தி எழுதுகிறீர்கள்.
  •              அது மாநில செயலரை புண்படுத்துவதாய் எண்ணாதீர்கள்.
  •              ஆயிரக்கணக்கான  தமிழக தோழர்களின் உணர்வுகளை /மனதை புண்படுத்துகிறீர்கள்.
  •                போராட்டமே வாழ்க்கையான புனித போராளி தோழர் பட்டாபியை, எந்த போராட்டத்திலும் பங்கேற்காத நீங்கள் விமர்சிப்பது விந்தையிலும் விந்தை.  நீங்கள் யாரை வேண்டுமானாலும் வாழ்த்துங்கள் தவறில்லை, அது உங்கள் உரிமை அல்லது விருப்பம்.
  •                ஆனால்  ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட தோழர் பட்டாபியை தரக்குறைவாய் விமர்சிப்பதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.  அவர் தனி மனிதர் அல்ல!  அவர் இயக்கத்தின் மாநிலச்செயலர்.அவரை அவதூறாக எழுதுவது இயக்கத்தை அவதூறு செய்வதற்கு சமம். இயக்கம் உங்களால், என்னால் கட்டப்பட்டதல்ல. கட்டப்பட்ட இயக்கத்தின் அங்கம்தான்  நாம் என்பதை மறந்துவிடாதீர்கள் .
K. NATARAJAN, TTA /PSM ,
ACS, NFTE -BSNL. 

7 comments:

  1. சபாஷ்.. நடராஜன்..

    ReplyDelete
  2. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்

    ReplyDelete
  3. -----------------------க்கு தெரியுமா கற்பூர வாசனை ?

    ReplyDelete
  4. ஆமா anonymous நீங்க அம்மாவாசையா ?அப்துல்காதரா ?,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  5. Great and that i have a swell present: Who Repairs House Siding house renovation budget template

    ReplyDelete

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR