தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, July 22, 2013

உலக கடிதம் எழுதும் தினம் 
 நலம். நலமறிய ஆவல்

அ. லைலாபானு 
NFTE  தமிழ் மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர், தஞ்சை.  

பல்கி பெருகி வரும் 
  தொழில் நுட்ப வளர்ச்சி/புரட்சி, 
  கணினி பயன்பாடு,
  எண்ணிலடங்கா குறுந்தகவல்கள்,
  இ - மெயில்,
  சமுதாய வலைதளங்களில் கருத்து பரிமாற்றம்,
  அலைபேசிகளின்  ஆக்கிரமிப்பால் கையளவில் சுருங்கிவிட்ட உலகம், 
  பாரம்பரியமான தந்தி சேவையின் மூடு விழா, மற்றும் 
  அன்றாட கடமைகளுக்கான ஓட்டம் 
என்ற பரபரப்பான சூழலில் " கடிதம் எழுதுதல் " என்ற உன்னதமான பயன்பாட்டை நாம் மறந்தே விட்டோம்!
       
         எழுத்து ஓர் வலிமையான ஆயுதம்.   இயல், இசை, நாடகம், கலை, இலக்கியம், குடும்ப உறவு, நண்பர்கள், அலுவலகம், அரசியல், சமூகம், சமயம் என எல்லா மட்டத்திலும் கோலோச்சிய அற்புதமான எழுத்தாற்றல் இன்று அரிதாகிவிட்டது.

       மேகம் விடுதூது, புறா விடுதூது, பின்னர் கடிதம் எழுதுதல் என்ற பரிணாம வளர்ச்சியில் புரட்சிகர சிந்தனையாலும், எழுத்தாலும் இவ்வுலகை மிடுக்குடன் நடத்தியவர்கள் பலர். 

1.   முன்னாள் பிரதமர் நேரு அவர்கள், சிறையில் இருந்து தன்  மகள் இந்திரா பிரியதர்ஷனிக்கு எழுதிய கடிதங்கள்தான் பின்னாளில் அவரின் அரசியல் பிரவேசத்திற்கும்,  பாரத பிரதமர் ஆவதற்கும் வழிகாட்டியது. இந்தக் கடிதங்களின் தொகுப்பே   "Glimpses of World History " என்ற நூலாக வெளிவந்தது.  

2.    மறைந்த திரு. அண்ணாதுரை அவர்கள், ' தம்பிக்கு ' என்று எழுதிய கடிதங்களும், அதைப்போலவே இன்றும் திரு. கருணாநிதி அவர்கள் எழுதும் 'உடன்பிறப்புக்கு' என்ற கடிதங்களும் சிறப்பானவை.

3. தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசனாரின் ' அன்னைக்கு', 'தம்பிக்கு', 'தங்கைக்கு', 'நண்பர்க்கு' என்று எழுதிய கடிதங்கள்  தமிழகத்தின் பண்பாட்டை பறைசாற்றும்படி அமைந்தவை. 

4. அசத்தலான எழுத்தாற்றல், பேச்சாற்றல், தலைமைப் பண்பு, துரித செயல்பாடு என்ற பன்முகத் திறன் நிறைந்த தலைவர்கள் உள்ள நம்  NFTE சங்கத்தில் இன்றைய நமது தமிழ் மாநிலச் செயலர் தோழர். பட்டாபிராமன் அவர்கள் ஓர் அற்புத சிற்பி.

      அவரின் அயராத உழைப்பால், எழுத்தால் நமது  நடந்து முடிந்த 6 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தலில், NFTE தமிழ் மாநிலச் சங்கம் வாகை சூடியதோடு, 2வது  சங்க அங்கீகாரமும், கவுன்சில்களில் பங்கேற்கும் வாய்ப்பும் பெற்றுள்ளோம்.

      கிடைத்துள்ள அறிய வாய்ப்பை நழுவ விடாது, சிரத்தையோடு செயல்பட்டு, அனைவரின் ஒத்துழைப்போடு,

BSNL ஐ பாதுகாத்தல்,
தேசத்தைக் காத்தல் 

என்ற உன்னத கடமைகளுடன் பீடு நடை போடுவோம்.

ஏற்றமிகு எழுத்துக்களைப்  போற்றுவோம்!
வாருங்கள் பெண்களே! 
வளம் சேர்ப்போம் நமது பணியாலும்!! 

நல்வாழ்த்துக்களுடன்,
அ. லைலாபானு 
தமிழ் மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர், 
NFTE, தஞ்சை.  

Friday, July 19, 2013

                 கவிஞர் வாலி மறைவுக்கு நமது சிரம் தாழ்ந்த அஞ்சலி 


கவி மழை தனது சாரலை நிறுத்திக்கொண்டது ,

3 தலைமுறையின் கவி ஊற்று வற்றி போனது ,

கவி சக்கரத்தின் சுழற்சி இன்று நின்று போனது ,

நல் கவிஞனை ,நடிகனை திரைஉலகம் இழந்துவிட்டது ,

பாரதிசெல்லம்மாளிடம் ஆசி பெற்ற கவிஞனவன் ,

சொந்த வாழ்வில் சோதனைகளை கடந்தவனவன் ,

கவிஞனின் மறைவு கலையுலக இழப்பு ,  

 கவிதை பயணத்தின்முடிவுறா பயணத்திற்கு 

தொலைபேசி தொழிலாளியின் கண்ணீர் அஞ்சலி ,,,,,,,,,


                                   

Monday, July 15, 2013

என்.எல்.சி. போராட்டம் வாபஸ்

நெய்வேலி: என்.எல்.சி.யின் ரூ. 500 கோடி மதிப்பிலான 5 சத பங்குகள் தமிழக‌ பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்க செபி ஒப்புதல் அளித்தது. என்.எல்.சி.யின் பங்குகளை தமிழக பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கும் என முதல்வர் ஜெயலலிதா, அறிவித்தார். இதையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடவும் வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக , தொழிற்சங்கங்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் 13 நாட்கள் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

-நன்றி தினமலர் .
Click Here

Thursday, July 11, 2013

வாழ்த்துகிறோம்


 


TM தேர்வெழுதும் தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.தஞ்சையில் தோழர் கலியபெருமாள் ,SNATTA  முன்னால் மாநில செயலர் ,TM  தேர்வெழுதும் தோழர்களுக்கு வகுப்பெடுத்து உதவுகிறார்.திருச்சி SDE தோழர் பாலுசாமி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தயார் செய்த மாதிரி வினா தாள் நமது தமிழ் மாநில WEBSITE ல் வெளியிடப்பட்டுள்ளது .மாதிரி வினாத்தாள் வெளியிட்ட மாநிலசெயாளர் தோழர் பட்டாபி அவர்களுக்கு நன்றி .வருகிற சனிக்கிழமை(13-7-2013) காலை 10 மணி அளவில் ,TM தேர்வெழுதும் தோழர்களுக்கு திருச்சியில்  SDE தோழர் பாலுசாமி மற்றும் அவரது நண்பர்கள் வகுப்பு எடுக்க உ ள்ளனர். குடந்தை மற்றும் தஞ்சை/வாய்ப்புள்ள  தோழர்கள் சென்று பலன் பெற வேண்டுகிறோம் .தஞ்சையில் தேர்வெழுத இருக்கும் தோழர்கள் :
1.அமர்நாத் ராவ் 
2.மீனாக்ஷி 
3.ஜெயலக்ஷ்மி 
4.கலைஅரசன் 

தோழர்கள் அனைவரும்  தேர்வில் வெற்றி பெற தஞ்சை மாவட்ட தோழர்கள்  சார்பில் வாழ்த்துக்கள்.தோழர் கலியபெருமாள் ,SNATTA  முன்னால் மாநில செயலர் ,திருச்சி SDE தோழர் பாலுசாமி /M .K கணேசன் மற்றும் அவரது நண்பர்கள் அனைவருக்கும் நமது நெஞ்சுநிறை நன்றி.

                                               
                                                  தோழர் கலியபெருமாள்     
                            

          


       ன்றி,
K .NATARAJAN, MA ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR . 


                                        

கண்டனத்துக்குரிய தாக்குதல்

நன்றி தினமணி
பிகார் மாநிலத்தில், 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மகாபோதி கோயிலில் தொடர்ச்சியாக 9 குண்டுகள் வெடித்து, இரண்டு புத்தத் துறவிகள் காயமடைந்திருக்கிறார்கள். ஆயுதத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அன்பை அணியாகப் பூண்ட அசோக மன்னன், போதிமர நிழலில் ஞானம் பெற்ற புத்தருக்கு, அதே புத்த கயையில் (கயா), அவர் மறைந்த 250 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிய கோயிலில் குண்டுகள் வெடித்துள்ளன. வெடிக்காத இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் புழங்கும் நேரத்தில் இந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யாமல், அதிகாலை 5.30 மணியளவில், குறைந்த சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்திருப்பதை தீவிரவாதிகளின் "கருணை' என்று வகைப்படுத்த முடியாது. இதன் நோக்கம் இந்த புனிதத் தலத்தை மதிக்கும் பௌத்தர்களின் மனதில் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.
மியான்மர் மற்றும் இலங்கையில் முஸ்லிம்கள் மீது பௌத்தர்கள் நிகழ்த்திய தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தத் தாக்குதலை நடத்த இந்திய முஜாஹிதீன்கள் திட்டமிட்டிருந்ததாக ஆறு மாதங்களுக்கு முன்பே மத்திய உளவுத்துறை தெரிவித்திருந்தது. அந்தத் தகவலைத் தொடர்ந்து, இந்தக் கோயிலின் அருகே மாநிலக் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கோயிலுக்கு வெளியில் மட்டுமே இவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கோயிலுக்கு உள்ளே, 80 அடி புத்தர் சிலை அருகிலும் மற்றும் 3 இடங்களிலும் குண்டு வெடித்திருப்பதால், கோயிலுக்கு உள்ளே பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவது அவசியம்.
எல்லா குண்டுவெடிப்புகளின்போதும் வழக்கமாகச் சொல்வதைப் போலவே இந்தச் சம்பவத்திலும்கூட, "தீவிரவாதிகளின் திட்டம் குறித்து முன்னமேயே எச்சரித்தோம்' என்று மத்திய புலனாய்வுத் துறை சொல்வது பொறுப்பின்மையின் உச்சம். இத்தகைய தகவல் கிடைத்தவுடன், மாநில அரசின் காவல்துறையுடன் மத்திய அரசின் பாதுகாப்புப் படைகளில் ஒரு பிரிவும் களத்தில் இறங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்க வேண்டாமா?
"யுனெஸ்கோ'-வினால் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள மகாபோதி கோயிலைப் பாதுகாப்பதில்கூட இத்தகைய மெத்தனப் போக்கு இருக்குமேயானால், நாம் எப்படி மற்ற பாதுகாப்புச் சின்னங்களையும், நகரங்களையும் அப்பாவி மக்களையும் பாதுகாக்கப் போகிறோம் என்கிற கேள்வி எழுகிறது. இதற்கு மத்திய உள்துறையும் மாநில அரசும்தான் விடையளிக்க வேண்டும்.
அடிப்படையில் பார்த்தால் இஸ்லாமுக்கு கொள்கை அளவில் நேர்எதிரிடையான மதம் பௌத்தம்தான். இஸ்லாம் இறைநம்பிக்கை இல்லாதவர்களையும் இறை மறுப்பாளர்களையும் "காஃபிர்'கள் என்று இடித்துரைக்கிறது. ஏனைய மதங்கள் இஸ்லாமைப்போல ஏகஇறைவனை ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர இறை மறுப்பை அங்கீகரிக்கும் மதங்களல்ல. ஆனால், பௌத்தத்தின் அடிப்படையே இறை மறுப்பு என்பதால் பௌத்தமும் இஸ்லாமும் அடிப்படையிலேயே ஒன்றுக்கொன்று முரணானவை. அதனால்தான் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பாமியான் புத்தர் சிலைகளைத் தகர்க்க முற்பட்டனர். ஆகவே மியான்மர் மற்றும் இலங்கையில் இந்த இரண்டு மதத்தினருக்கு இடையே மோதல்கள் நடந்துகொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்காக இந்தியாவிலுள்ள புத்த கயையில் இப்படியொரு தாக்குதலை நடத்தியிருப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல.
மியான்மர் மற்றும் இலங்கையில் பௌத்தர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளிடையே மோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சில உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன. அதற்காக, உலகின் வேறு நாடுகளில் அமைதியாக வாழ்ந்துவருகின்ற, எந்தவகையிலும் தொடர்பே இல்லாத அப்பாவி பௌத்தர்களைத் தாக்குவது நியாயமற்றது, அர்த்தமற்றது 
புத்தர் ஞானம் பெற்ற போதிமரத்தை வழிபடுவதற்காக உலக நாடுகள் பலவற்றிலுமிருந்தும், குறிப்பாக சீனா, ஜப்பான், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து பக்தர்கள் புத்த கயை வந்து கொண்டிருக்கிறார்கள். இச்சம்பவத்தால் அயல்நாட்டவருக்கு ஏற்பட்டுள்ள அச்ச உணர்வைப் போக்க வேண்டியது இந்திய அரசின் முதல் கடமை.
இந்தப் பிரச்னைக்கு ஜனநாயக ரீதியாகவும், சட்டப்படியும் தீர்வு காண அமைதியான அரசியல் வழிமுறைகள் இருக்கின்றன. அதைவிட்டுவிட்டு வன்முறையைக் கையாளுவதும் சாதாரண பொதுமக்களைக் காயப்படுத்துவதும் இறைநம்பிக்கை உள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மதத்தின் பெயரால் நடத்தப்படும் எந்த ஒரு வன்முறைத் தாக்குதலும் அன்பும் கருணையும் உருவான இறைவனுக்கு நிச்சயமாக ஏற்புடையதாக இருக்காது என்பதுகூட தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஏன் தெரியவில்லை?
இத்தகைய வன்முறை குறிப்பிட்ட மதத்தினரிடையே பீதியை ஏற்படுத்தினாலும், இறைநம்பிக்கையை மேலும் வலிமையாக்கவே இந்த பீதி பயன்படும் என்பதைத் தீவிரவாதிகள் உணர்ந்தால், இவ்வாறு வழிபாட்டு ஸ்தலங்களின் மீதான தாக்குதலை நடத்த மாட்டார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகளிலும், தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும், அவர்களுக்குப் பணம் கிடைக்கும் வழிகளைத் தடுப்பதிலும் அரசியல் நெஞ்சுரம் இல்லாமல் இருப்பதால்தான் தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. தீவிரவாதிகளுக்கு இதயமும் கிடையாது. இரக்கமும் கிடையாது; உண்மையான இறை உணர்வும் கிடையாது என்பதைத்தான் இந்தத் தாக்குதல் வெளிப்படுத்தியிருக்கிறது.
"அவரவர் மதம்' பிடித்ததால் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தவில்லை, "மதம்பிடித்து' அலைவதால் நடக்கிறது!   






நன்றி,
கே.நடராஜன் M.A,
TTA /PSM,
ACS/NFTE-BSNL,
THANJAVUR.



 உத்ரகாண்ட் நிவாரண நிதிஅளிப்போம்
இந்துக்களின் புனித தலம் பக்தி யாத்திரைக்கு பெயர் பெற்ற இடம் பேரிடர் துன்பத்தில் சிக்கியுள்ளது .இயற்கையின் கோரதாண்டவம் மாநிலத்தையே புரட்டி போட்டுள்ளது .மக்கள் வாழ்வு நிலைகுலைந்துபோய் உள்ளது .                                     
    
பேரிடர் துன்பம் துடைக்க அரசும் ,மனிதாபிமானிகளும் முயற்சிகள் எடுத்து வரும் பணியில் BSNLகார்ப்பரேட் அலுவலகமும் நமது       ஊ ழியர்களிடமும்ஒரு நாள் சம்பளத்தை நிவாரண பணிக்கு கேட்டுள்ளது .நமது உறுப்பினர்களும் .
தங்களது பங்களிப்பை கொடுத்து உதவுவோம் ,

அம்மாநில மக்கள் இந்த துயரத்திலிருந்து                   மீ ண்டெழுந்து சகஜநிலைக்கு திரும்பிட நமது இயக்கத்தின் ஆறுதலை பதிவு செய்கிறோம் .சிறியவர்கள் ,முதியவர்கள் ,யாத்ரீகர்கள் ,பிற மாநிலத்தவர்கள் என பலரை பலி கொண்டுள்ளது இந்தஇயற்கை சீற்றம் .தமிழக அரசு தனது மாநிலமக்களை  மீட்டுவர ஏற்பாடு செய்தது  பாராட்டுக்கு உரியது .உயிர் தப்பி வந்த மக்களின் கண்ணீர் மல்கிய பேட்டி கண்டோர் நெஞ்சை பதறவைத்தது .நாம் கொடுக்கும் நிதி அவர்தம் வாட்டம் போக்குமே அன்றி அவர்தம் மன வருத்தம் போக்காது .நிதி தந்து உதவுவோம் அம்மாநிலத்தை நிமிரச்செய்வோம்.


ன்றி,
K .NATARAJAN, MA ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR . 




Tuesday, July 9, 2013

TELECOM ல் 100% FDI எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

                                தஞ்சை CTMX ல் 9-7-2013 காலை 10:30 மணி அளவில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் SNEA ராஜேந்திரன் DE தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில் NFTE மாவட்ட தலைவர் பிரின்ஸ் SEWA சுந்தரமூர்த்தி BSNLEU மாவட்ட செயலர் சுப்ரமணியன் SNEA குணசேகரன் AIBSNLEA உதயன் ,துரையரசன் போன்ற சங்க தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.NFTE மாவட்ட செயலர் பன்னீர் செல்வம் நன்றி கூறி முடித்து வைத்தார் 
                              100% FDI கூடாதென முழக்கம் எழுப்பப்பட்டது .மேலும் தஞ்சை மாவட்டம் முழுவதும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன .
                               திருவாரூரில் SDOT கிளை ஆர்பாட்டம் நிகழ்த்தியது. SDOT கிளை தலைவர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.TTUC -சாமிநாதன், அவர்களும் போஸ்டல் ராமலிங்கம் அவர்களும் ,AITUC -அழகிரி அவர்களும் ,AIBEA -காளிமுத்து அவர்களும் .கிளைசெயலாளர் குணசேகரன் ,தோழர் D.சேகர் கிளை  பொருளாளர் ,மாவட்ட துணை செயலர் சீதாராமன் ஆகியோர்கள் உரை நகழ்த்தினார்கள்.தோழியர்கள் சுமதி,ஜெயந்தி,கலந்துகொண்டார்கள் .தோழியர் அக்கா வாசுகி நன்றி கூறினார்.


                                    





நன்றி,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR . 

மாவட்ட செயற்குழு தீர்மானங்கள்

தோழர் பிரின்ஸ் -தலைமை , 
தோழர் கிள்ளிவளவன் -துவக்க உரை 
அனைத்து  கிளை செயலாளர்களும்  தோழர்கள்  வேதநாயகம் ,வேதமணி,C .சேகர் ,A .சேகர் ,ராஜசேகர்,ரெங்கசாமி ,சிவசங்கரன்,சுப்பையன்,சுந்தரராஜன் ,சின்னப்பா ,K .செல்வராஜ் ,M.கைலாசம் ,பத்மநாபன் ,பாண்டுரெங்கன்,நீலமேகம் விவாதத்தில் பங்கேற்றனர்.தோழர்கள் மேகநாதன் ,கலைச்செல்வன்,சீனாதானா ,LCP ,அய்யனார் ,லைலாபானு ,இளங்கோவன் போன்ற மூத்த தோழர்கள் விவாதத்தை செழுமை படுத்தினர்.தோழர் பன்னீர்செல்வம் ,மாவட்ட செயலர் விவாதத்தை முடித்து வைத்து பேசினார் .தோழர் நடராஜன் மாநில துணை செயலாளர் நிறைவுரை ஆற்றினர் .தோழர் பக்கிரிசாமி ,மாவட்ட பொருளாளர் வரவு செலவு கணக்கை சமர்ப்பித்து நன்றி கூறி முடித்து வைத்தார்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாய் நிறைவேற்றபட்டது.
  • ஒவ்வொரு  உறுப்பினரிடமிருந்தும் ரூபாய் 10 மாத சந்தாவாக கிளைகள் வசூல் செய்து கொள்வது.
  • கிளை மாநாடுகளை ஜூலை இறுதிக்குள்ளாக நடத்துவது 
  • மாவட்ட மாநாடு G .M (O) கிளை நடத்துவது 
  • உறுப்பினர் சேர்க்கையை ஜூலை 13க்குள் முடித்திட வேண்டும் 
  • JCM உறுப்பினர்கள் தோழர்கள் பிரின்ஸ்,பன்னீர்செல்வம்,பக்கிரிசாமி,நடராஜன்,மேகநாதன் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர் 
  • works committe உறுப்பினர்கள்தோழர்கள் சிவசிதம்பரம் ,கிள்ளிவளவன்,A .சேகர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்
  • தமிழகத்தில் தமிழில் வலைதளத்தை முதன்முதலில் தொடங்கியது தஞ்சை மாவட்டம் தான்.தொடங்கியவர் தோழர் சீனாதானா அவரை இச்செயற்குழு மனதார பாராட்டியது .தோழர் நடராஜன் அவர்களும் தோழர் சீனாதானா அவர்களும் இன்னும் சிறப்பாய் செய்திகளை தர வேண்டுமென செயற்குழு தனது விருப்பத்தை பதிவு செய்தது .
  • குறிப்பு:    மாநில  செயற்குழு 

    தீர்மானத்தின் படி மாநில செயலரையும் ,மாநில சங்க செயல்பாட்டையும் தனிப்பட்ட முறையில் தாக்கி /சிறுமை படுத்தி சுற்றறிக்கைகள் வெளியிடப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் .இது தொடர்ந்தால் அவர்கள் மீது சங்கரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் 

    18-7-2013 BSNL பாதுகாப்பு மாநாடு என்ற பெயரிலோ அல்லது வேறு எதற்கும் NFTE emblem பொறிக்கப்பட்ட ரசீது மூலம் வசூல் நடத்தப்படக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது .





    நன்றி,
    K .NATARAJAN ,TTA /PSM ,
    ACS ,NFTE -BSNL .
    THANJAVUR .


Friday, July 5, 2013

மாவட்ட செயற்குழு

8-7-2013 திங்கள் கிழமை மாலை 4 மணி அளவில் CTO OUTDOOR LINE STAFF REST ROOM ல் மாவட்ட செயற்குழு தோழர் பிரின்ஸ் ,மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெறும் .SPECIAL CL ELIGIBLE தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்கவும் 


நன்றி,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .

Thursday, July 4, 2013

ஆர்பாட்டம்

                                    தஞ்சை மாவட்டத்தில் NLC பங்கு விற்பனை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சிறந்த முறையில் நடைபெற்றது .திருவாரூர் ,திருத்துறைபூண்டி,பட்டுக்கோட்டை ,மன்னார்குடி பகுதிகளில் ஆர்பாட்டம் நடத்திட மாவட்ட செயலர் அழைப்பு விடுத்தார்.தஞ்சை CTO வளாகத்தில் இன்று 10:30 மணிக்கு தோழர் பிரின்ஸ் அவர்கள் தலைமையில் NLC பங்கு விற்பனை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சிறந்த முறையில் நடைபெற்றது .தோழர் கருணாகரன், பொறுப்பு செயலர் ,ஒரத்தநாடு கண்டன முழக்கம் எழுப்பினார்.கிளை செயலாளர்கள் தோழர்கள் வேதமணி,SDOP கிளை ,A .சேகர் ,TVN கிளை ,K .செல்வராஜ் PSM கிளை,S.பாண்டுரங்கன் ,SDOT கிளை ,ராஜேஷ் ,CTMX கிளை ,வேதநாயகம் ,VRM கிளை மற்றும் S.இளங்கோவன் மாவட்ட துணை தலைவர்,N.மேகநாதன் ஆகியோர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
                                                  

  மாவட்ட செயலாளர்  தோழர் T.பன்னீர்செல்வம் NLC பங்கு விற்பனை கூடாது என்றும் அதை NFTE பேரியக்கம் உறுதியாய் எதிர்கிறது என்றும் போராடும் NLC தோழர்களுக்கு ஆதரவாக தனது கருத்தை பதிவு செய்தார் .
போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற கோரியும்/இந்தியாவின் ஆலயங்களாய் கருதப்படும் பொதுத்துறை பங்குகளை விற்க கூடாது எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து ,மீடியாக்களுக்கு பேட்டி அளித்தார் . 
                
                                   மாநில துணை செயலாளர் தோழர் நடராஜன் நிறைவுரை ஆற்றினர்.இறுதியாக தோழர் K.சின்னப்பா கிளை செயலர்,GM(O),நன்றி கூறி நிறைவு செய்தார் .



நன்றி,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .



 

Wednesday, July 3, 2013

NLC பங்கு விற்பனை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாளை 4-7-2013 வியாழன் காலை 10 மணி அளவில் மாநில சங்க அறைகூவலை ஏற்று   NLC  போராடும் தோழர்களுக்கு ஆதரவாக பங்கு விற்பனைக்கு  எதிராக ஆர்ப்பாட்டம்  தஞ்சை மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது .தஞ்சையில் மாவட்ட தலைவர் தோழர்  பிரின்ஸ்  தலைமையில்   CTO வளாகத்தில் நடைபெற உள்ளது .தோழர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கவும் .




நன்றி,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .

வெல்லட்டும் போராட்டம்


            

              57 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பொதுத்துறை நிறுவனம்.2400 மெகா வாட்  மின் உற்பத்தி செய்யக்கூடியது.ஆந்திரா , கேரளா,பாண்டிச்சேரி போன்ற பிற மாநில தேவைகளில் 1200 மெகா வாட்  தேவையை பூர்த்தி செய்கிறது.
          17000 தொழிலாளர்கள் ,ஒப்பந்த தொழிலாளர்கள் என பல இந்திய குடிமக்களுக்கு வாழ்வளிக்கும் பொதுத்துறை நிறுவனம் .
10% பங்கு விற்பனை என 2002,2006ல் மத்திய அரசு கூறிய போது அதனை எதிர்த்து போராட்டம் நடத்தி முறியடிக்கப்பட்டது .
          தற்போது மீண்டும் 5% பங்கு விற்பனை மூலம் 466 கோடி திரட்ட முடிவு செய்கிறது மத்திய அரசு.
தமிழ்நாடு அரசு பங்கை பெறுவது என்பதோ ,ஊழியர்கள் பங்கை பெறுவது என்பதோ ஏற்புடையதல்ல என்பதே அனைத்து தொழிற்சங்க முடிவு .

           SEBI நிர்பந்தம் என்று சொல்லியோ ,பங்கு விற்பனை செய்தால் தான் நவரத்தினா அந்தஸ்து தொடரும் என்று சொல்வதோ ,அரசாங்க கஜானாவிற்கு பணம் தேவை என்று சொல்வதோ ,அமைச்சரவை முடிவு என்று சொல்வதோ சரியல்ல.அந்நிய தேச வங்கிகளில் இந்திய தேச பெரும் முதலாளிகள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை இந்திய தேசத்திற்கு கொண்டு வர வேண்டும் என அமைச்சரவை முடிவெடுக்கட்டம். 
        கர்ம வீரர் காமராசர்  முதலமைச்சராய் இருந்த காலத்தில் தன்னலம் பாராது குடும்ப அரசியலுக்கு இடம் கொடுக்காது ,ஊழல் அரசியலுக்கு இடம் கொடுக்காது இந்திய சனங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது NLC. 57 ஆண்டுகள் கழித்து காங்கிரசார்/இதர தோழமை கட்சி முதலாளிகள் காமராசர் பாதையை சீரழிப்பதை அனுமதியோம்.நீதி துறை ,காவல் துறை மூலம் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கிவிடமுடியாது.
 
                       போராட்டம்  வெல்க !
நன்றி,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR