தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, August 31, 2017

வடபாதிமங்கலம் டெலிகாம் டெக்னீசியன் 
தோழர். M. பக்கிரிசாமி அவர்கள் 
ன்று 31-08-2017 பணி ஒய்வு பெறுகிறார். 
------------------
மாநில கபடி போட்டியில் பங்கேற்று 
நமது BSNL துறைக்கு பெருமை சேர்த்தவர்.
தமிழகம் தழுவிய அளவிலும் கபடி போட்டிகளில் 
பங்கேற்று வெற்றிகளைக் குவித்தவர்.

 பணி நிறைவு பெரும் இந் நன்னாளில் அவரை 
தஞ்சை மாவட்டச் சங்கம் 
வாழ்க! வாழ்க!! வென வாழ்த்தி மகிழ்கிறது. 

தோழரின்பணி ஓய்வுக்  காலம் 
சிறப்புற்று விளங்கிட அன்புடன் வாழ்த்துகிறோம்!

TMTCLU செய்திகள்: 


சம வேலைக்கு சம ஊதியம்நீதிமன்ற வழக்கு


நமது நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட TMTCLU சங்கத்தின்  சார்பில் போடப்பட்ட வழக்கு 28/08/2017 அன்று  காலை விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த  நீதிபதி அவர்கள் உடனே சம்மந்தப்பட்ட   BSNL மாநில நிர்வாகத்திற்கும், கார்ப்பரேட் அலுவலகத்திற்கும் விசாரணைக்கு வருமாறு கடிதம் அனுப்ப உத்திரவிட்டுள்ளார்.  ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதிய மாற்றத்தில் நல்ல முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
                                              தோழமையுடன்,
                                                            R.செல்வம்
                                                 மாநில பொதுச் செயலர்
                                                             TMTCLU
தகவல்:
தோழர். D. கலைச்செல்வன்.

Wednesday, August 30, 2017



அனைவருக்கும் இலவச தொலைபேசி சலுகை.
கார்ப்பொரேட் அலுவலகம் உத்தரவு.

குரூப் B, C, D ஊழியர்கள் மற்றும் 
ஓய்வூதியர்கள் அனைவருக்கும் 
இரவு நேர இலவச கால் வசதி 
( இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை
மற்றும் ஞாயிறு முழுவதும் ) 
வழங்கப்பட்டுள்ளது.

29-08-2017 அன்று உத்தரவு போடப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.



NFTE
மத்திய செயற்குழுக் கூட்டம் 

அக்டோபர் 12 & 13 - 2017
விஜயவாடா – ஆந்திர மாநிலம்

தலைமை
தோழர்.இஸ்லாம் அகமது
NFTE அகில இந்தியத்தலைவர்

ஆய்படு பொருள்

  • அமைப்பு நிலை
  • ஊழியர் பிரச்சினைகள்
  • 3வது ஊதிய மாற்றம்
  • போனஸ்
  • JCM கூட்டங்கள்
  • இயக்கத்தை வலுப்படுத்துதல்
  • நவம்பர் 2017 - அனைத்து சங்கப் போராட்டம்
  • பஞ்சாப் அகில இந்திய மாநாடு...
  • இதர பிரச்சினைகள் தலைவர் அனுமதியுடன்…

துண்டு, சோப்புக்கான தொகை 

ரூபாய் 750  ஆக உயர்வு! 

நமது NFTE சங்கத்தின் முயற்சியால் 
BSNL ஊழியர்களுக்கு 
சோப்பு,துண்டு, டம்ளர், பேனா, டைரி, 
வாட்டர் பாட்டில் ஆகிய பொருட்கள் வாங்கிட ரூபாய் 500 வழங்கப்பட்டு வந்தது.

பல வருடமாக ஒரே தொகை 
வழங்கப்பட்டு வருவதால் 
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 
அத் தொகையை உயர்த்த 
மாநிலக் குழுவில் கோரிக்கை வைத்திருந்தோம்.

தற்போது, நமது கோரிக்கை ஏற்கப்பட்டு 
ரூபாய் 750 வழங்க உத்தரவாகியுள்ளது.

இனி ஜனவரி 2018 முதல் 
உயர்த்தப்பட்ட தொகை 
ரூபாய் 750/-வழங்கப்படும்.

தஞ்சை SNEA கண்டன  ஆர்ப்பாட்டம் 

SNEA அகில இந்திய பொதுச் செயலர் 
தோழர் செபாஸ்டியன் அவர்களுக்கு 
கார்பொரேட் நிர்வாகம் பழிவாங்கும் போக்கில்
வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகையை
வாபஸ் வாங்கக் கோரி  
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதற்கு ஆதரவு தெரிவித்து NFTE சங்கமும் 
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது.
மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன், 
TMTCLU மாவட்டச் செயலர் தோழர். கலைச்செல்வன், 
அய்யம்பேட்டை கிளைச்செயலர் தோழர். ஞானச்சுடர் 
மற்றும் பல தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.


29-08-17    
அன்புத் தோழர்களே! 
அனைவருக்கும் வணக்கம்.     கடந்த 26-08-17 அன்று நமது இரண்டாவது மாவட்டச் செயற்குழு பட்டுக்கோட்டையில் காலை 11 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 
தலைவர் T. பன்னீர்செல்வம் அவர்கள் மாவட்டச் செயற்குழுவை தலைமை தாங்கி நடத்தினார். மாவட்ட துணைச்செயலாளர் தோழர். D. கலைச்செல்வன் அவர்கள் முன்னிலை வகித்தார்.மாவட்டச் செயலர் தோழர்  கிள்ளி அவர்கள் 8 மாத செயல்பாட்டறிக்கையை முன்வைத்து விரிவாகப் பேசினார்.  பின்னர் அமைப்பு நிலை விவாதத்தை மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர் தோழியர் லைலாபானு துவக்கி வைத்து உரையாற்றினார்.  செழுமையான விவாதங்களை மாவட்டச் சங்கத் பொறுப்பாளர்களும், கிளை செயலர்களும் முன்வைத்தனர். தோழர்கள் வீரபாண்டியன், சிவசிதம்பரம்,நாடிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  
இறுதியாக மாநிலச்செயலர் தோழர் நடராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார். 3 வது  PRC பற்றியும், போராட்டங்களில் ஒற்றுமை இல்லாத சூழலுக்கு தெளிவான விளக்கமளித்தும், எதிர்காலத்தில் ஒன்றுபட்ட போராட்டத்திற்கான திட்டமிடல் பற்றிய விபரத்தையும் எடுத்துக் கூறினார்.  110 தோழர்கள் பங்கேற்ற இச்செயற்குழு தோழர். பட்டுக்கோட்டை விஜயராகவன் நன்றி கூற இனிதே நிறைவுற்றது.

Tuesday, August 29, 2017


                                                                                                   29-08-2017
மாவட்டச் செயற்குழு தீர்மானங்கள்


1.   25-11-2016 அன்று திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டு வரவு செலவு கணக்கு,  தாக்கல் செய்யப்பட விபரங்களை, அன்றைய வரவேற்புக்குழு, எல்லா கிளைகளுக்கும் மாவட்டச்சங்கம் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும் என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

2.  தமிழ் மாநிலச் செயற்குழுவினை தஞ்சாவூரில் செப்டம்பர் 30 க்குள் நடத்துவது என்றும், அதற்கு அனைத்து கிளைகளும்  குறைந்தபட்சம் ரூ. 5000/- வழங்கிட வேண்டுமென்றும் பணிவுடன் இச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

3. மாவட்டச் சங்க நிர்வாகிகள் தோழர். C. சுந்தர்ராஜூ PTK, S. இராஜேஷ் CTMX / TNJ  ஆகியோர் பணி  ஒய்வு பெற்று விட்டதால் புதிய மாவட்டச் சங்க நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழியர்களை இச் செயற்குழு தேர்ந்தெடுக்கிறது.

1. V. விஜயலட்சுமி, STS (O)/PTK மாவட்ட அமைப்பு செயலர்.
2. R . மீனாட்சி,  TT / CTMX / TNJ மாவட்ட அமைப்பு செயலர்.

4. தஞ்சை மாவட்ட புதிய வலைத்தளத்திற்கு மாநிலச் சங்கம் லிங்க்கை மாற்றித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறது.

5.  கிளை மாநாடுகளை நடத்தாத கிளைகள் உடனடியாக மாநாட்டை நடத்திட   இச் செயற்குழு பணிக்கிறது.

6. ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சினைகளில் நமது தமிழ் மாநிலச்  சங்கம் எப்படி TMTCLUவுடன் பயணிக்கின்றதோ அவ்வாறே தஞ்சைமாவட்டச்சங்கமும்  பயணிக்கும் என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

7.  அடுத்த தஞ்சை மாவட்டச் செயற்குழுவினை டிசம்பர் 2017க்குள் மன்னார்குடி கிளை நடத்திட இச் செயற்குழு வேண்டுகிறது.

8. நமது தஞ்சை மாவட்ட நிர்வாகம் பரிவோடு பரிசீலித்து 25 க்கும் மேற்பட்ட  ஊழியர்களுக்கு மாற்றல் உத்தரவினை தந்து உதவியது. அதேபோல் நெருக்கடியான சூழ்நிலைமையில் மருத்துவ செலவுக்கு திருவாரூர் தோழர். பாஸ்கரனுக்கு WELFARE FUND டிலிருந்து ரூபாய் 50,000 நிதியுதவி செய்தது.காலத்தே  இப்  பேருதவியை  மனிதாபிமானத்தோடு செய்து தந்த நமது  முதன்மைப் பொது மேலாளரை இச்செயற்குழு  நன்றியறிதலோடு பாராட்டி மகிழ்கிறது.

9. இச் செயற்குழுவினை சிறப்பான முறையில் நடத்தித்தந்ததற்கும், செழுமையான விவாதம் மூலம் ஒருமித்த முடிவுகளை எடுக்க உதவியதற்கும் பட்டுக்கோட்டைக் கிளையினை மாவட்டச்செயற்குழு பாராட்டுகிறது.

10. மாநிலச் சங்க செயல்பாட்டுக்கு உதவிடும் வகையில், பணி  ஒய்வு  பெரும்  தோழர்களிடம் ஒலிக்கதிர் நிதி பெற்றுத் தந்திடுமாறும், அதற்கான செயல்களில் ஈடுபடுமாறும்  அனைத்துக் கிளைகளையும் இச்செயற்குழு வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

தோழமை வாழ்த்துக்களுடன்,

தோழர். T. பன்னீர்செல்வம்,
மாவட்டத் தலைவர், தஞ்சாவூர்.

தோழர். கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர், மன்னார்குடி.

தோழர். A. சேகர்,
மாவட்டப் பொருளர், திருவாரூர்.

Monday, August 28, 2017

06-09-2017

குடந்தை  --   தஞ்சை   --    கடலூர் 
மாவட்டங்கள் இணைந்த கிளைச்செயலர்கள் 
கருத்தரங்கம்.






Wednesday, August 23, 2017







மாற்றம் தேவை
By எஸ்ஏ. முத்துபாரதி  
தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு எனச் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். அது உயர்ந்த குணங்களுக்காக சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், இப்போது என்ன நிலை?
அண்டை மாநிலங்களோடு இணக்கமில்லாத சூழல். நமது பொருட்களை விற்கச் சென்றாலும் சரி, நாம் அவர்களிடமிருந்து நதிநீர்ப் பங்கீடு பெறுவதாக இருந்தாலும் சரி எப்போதும் பிரச்னைதான். ஏன் இந்த நிலை?
ஒரு குடும்பத்தில் அண்ணன் - தம்பி உறவே சரியில்லாதபோது ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் எப்படி உறவு சுமூகமாக இருக்கும் என்பது நியாயமான கேள்விதான்.
ஆனால், சிறந்த ஆட்சி என்பது அண்டை மாநில உறவுகளை முறையாக பராமரித்து நமக்கான காரியங்களை ராஜதந்திர முறையில் சாதித்துக் கொள்வதுதான்.
பிற மாநிலங்களில் அவர்களின் கல்வி முறையில், அரசு இயந்திர நிர்வாக முறையில், மழைநீர் சேமிப்பு அல்லது நீராதார முக்கியத்துவத்தினை நாம் ஏன் பின்பற்ற மறுக்கிறோம்? நல்லது எங்கிருந்தாலும் நாம் சென்று கற்றுக்கொள்வதும் நடைமுறைப்படுத்துவதும் தவறல்லவே.
தான் வாழும் இந்த சொற்ப காலத்திற்குள் தேவைக்கும் அதிகமாக சொத்து சேர்த்து, இன்னும் சேர்க்க வேண்டும் என்கிற பேராசையுடன் அலைந்து பொருள் சேர்க்கும் அரசியல்வாதிகளை நாம் என்னவென்று சொல்வது?
அவர்கள் தங்கள் நிலை உணர்ந்து போதும் என நினைத்து இனிவரும் காலங்களிலாவது மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என முடிவெடுத்தால்கூட தமிழகம் சற்று தலைநிமிரும் என நம்பலாம்.
அரசாங்க பணிகள் நடைபெறுவதற்கு ஒப்பந்ததாரர்கள் நியமனம் அல்லது ஏதாவது கொள்முதல் செய்வது உள்ளிட்ட எந்த செயல்பாடு என்றாலும் ஊழல்தான். இதில் என்ன கொடுமை என்றால், யாரும் யாரையும் கேள்வி கேட்க முடியாது. எங்கும் லஞ்சம், ஊழல் எனும்போது யாரிடம் சென்று என்ன முறையிடுவது?
ஆனால், இம்மாதிரியான குறுகிய நோக்கமுள்ளவர்கள் இந்தத் தலைமுறையினர்தான். முப்பது நாற்பது வருடத்திற்கு முந்தைய தலைமுறையினர் தங்கள் பெரும் சொத்திலிருந்து பெரிய பள்ளிகளையும், கல்லூரிகளையும் கட்டி தானமாக தந்துள்ளனர்.
அன்றைய மனிதர்கள் இம்மாதிரி குறுகிய மனப்பான்மையோடு இருந்திருந்தால் நிறைய கல்விக்கூடங்கள் இருந்திருக்காது.
மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பது மன்னர் வம்சம் ஆண்ட அந்தக்காலம். இந்தக்காலத்தில் மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களால், மக்கள் எவ்வழியோ அப்படியே ஆட்சியாளர்களும் இருப்பார்கள்.
மக்கள்தான் எங்கு போனாலும் லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக்கொள்வதே கடமை என முடிவெடுத்துச் செயல்படுகிறார்கள்.
ஊழல் நடந்தால் அதில் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிற குறையறிவு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
சாலைகளில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்த அளவு வேண்டுமானாலும் குழி தோண்டுகிறார்கள். ஏதோ பணி செய்கிறார்கள். அந்தப் பணி முடிந்தவுடன் அந்த சாலையை சீர் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவார்கள்.
இங்குதான் மக்கள் கேள்வியே கேட்க மாட்டார்களே. அவரவர்களுக்கு வேறு சிந்தனை வந்துவிடக் கூடாது என்பதற்காக வீதிதோறும் மதுபானக்கடை. மக்களுக்கு குடிக்கும் பழக்கத்தை அடிக்கடி ஞாபகப்படுத்த திரைப்படங்களில் அரை மணிநேரத்திற்கு ஒருமுறை மதுபானக்கடை காட்சிவேறு.
அதுவும் இப்போது சின்னத்திரை எனப்படும் தொலைக்காட்சி தொடர்களில்கூட மதுக்குடிக்கும் காட்சிகள் வைத்திருக்கிறார்கள்.
எத்தனையோ வளர்ந்த நாடுகளை, வல்லரசு நாடுகளைப் பற்றி படிக்கிறோம், கேள்விப்படுகிறோம். அப்போதெல்லாம் நமது நாடும் அந்த நிலைமைக்கு வரவேண்டும் என மனதிற்குள் ஆசைப்படுகிறோம்.
ஆனால் நடக்கும் அநியாயங்களை, அக்கிரமங்களை பார்த்து சிறிதுகூட எதிர்ப்பின்றி, உணர்ச்சியின்றி நாம் பயணப்பட்டால் எப்படி ? இந்திய அளவில் தமிழர்களின் மரியாதை எந்த அளவிற்கு உள்ளது என்பதை பிற மாநிலங்களுக்குச் சென்றால் புரிந்து கொள்ளலாம். எந்த மாநிலத்திலும் தமிழன் என்றால் மரியாதையில்லை.
காரணம் நமது ஆட்சிமுறையில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், ஊழல்கள், லஞ்சம், மக்களின் எழுச்சியின்மை, போராட்ட குணமின்மை, நேர்மையின்மை போன்றவை. விதிவிலக்காக சிலரும் சில செயல்பாடுகளும் இருக்கலாம். அதை வைத்து தமிழகத்தின் பெருமை உயர்ந்துவிடாது.
சிலர் பொதுநலன் கருதி போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது குண்டர்சட்டம் பாய்ந்து அவர்களை சிறையில் அடைப்பதும் ஒரு நாகரிக சமுதாயத்திற்கு அடையாளமில்லை.
ஆட்சியின் மீதும் அதிகாரத்தின் மீதும் சம்பாதிப்பதின் மீதும் பேராசை உள்ளவர்கள் சமூக ஆர்வலர்களை தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்தி சிறையில் தள்ளிவிடுவார்கள்.
இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்கிற பேதமெல்லாம் இல்லை. படித்தவன் அவனுக்குரிய வகையில் சட்டத்தை மீறுவதும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ளவும்தான் முயற்சி செய்கிறான். இதற்கு படிக்காதவர்கள் எவ்வளவோ பரவாயில்லை எனும் சொல்லும்படியான சூழல்தான் உள்ளது.
மக்களிடையே நேர்மை இருந்தால்தான் அவர்களிலிருந்து வரும் தலைவர்களுக்கும் நேர்மை இருக்கு.

Tuesday, August 22, 2017


தோழர். ஜீவா பிறந்த நாள் 

ஆகஸ்ட் 21: ஜீவா எனும் மானுடன் பிறந்த நாள் இன்று.. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன். பாட்டாளிகளின் தோழன். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வீரன். கலைகள் பேசிய புலவன். நேர்மையான அரசியலுக்கு இலக்கணமாக இருந்தவன். எளிய மனிதன்... புனிதன்! * ஐந்தாம் ஃபாரம் படிக்கும்போதே பாடல்கள் இயற்றும் திறமை பெற்றிருந்தார். 'காலுக்குச் செருப்புமில்லை... கால் வயித்துக் கூழுமில்லை... பாழுக்கு உழைத்தோமடா... பசையற்றுப் போனோமடா!' என்ற இவரது பாட்டுதான் தமிழகத்தின் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரையும் செங்கொடியின் கீழ் திரளவைத்த பாட்டாளி கீதம்! * எவ்வளவு காலம்தான் பேசிக்கொண்டே இருப்பீர்கள்? பொறுப்புகளுக்கு வர வேண்டாமா?' என்று முதலமைச்சர் பி.எஸ்.குமாரசாமி ராஜா கேட்டார். 'ஏழைகளுக்காகப் பேச வேண்டியதுதான், உழைக்க வேண்டியதுதான் சாக வேண்டியதுதான்' என்று தயக்கம் இல்லாமல் பதில் கூறி பதவிகளைத் தட்டிக் கழித்தார்!

Image may contain: 1 person, text


பாஜகவின் அணுகுமுறை மிக மோசமான முன்னுதாரணம்!

கு
ஜராத்தில் மிகச் சாதாரணமாக நடந்து முடிந்திருக்க வேண்டிய மாநிலங்களவைத் தேர்தலை, ஒரு தேசிய விவகாரம் ஆக்கி, ஜனநாயகத்துக்குப் புறம்பான வழிகளைக் கையாண்டு அவமானப்பட்டிருக்கிறது பாஜக.
குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக இரு இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெல்வது நிச்சயம் என்ற சூழலே இருந்தது. காங்கிரஸ் வேட்பாளராகக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அகமது படேல் அறிவிக்கப்பட்டபோது, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் இறங்கினார். பேர அரசியலின் விளைவாக குஜராத் காங்கிரஸ் உடைக்கப்பட்டது. காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த சங்கர் சிங் வகேலா வெளியேறினார். தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து வெளியேறினார்கள். காங்கிரஸிலிருந்து கவரப்பட்ட பல்வந்த் சிங் ராஜ்புத் வேட்பாளராகக் களத்தில் இறக்கப்பட்டார். காங்கிரஸ் சட்ட சபை உறுப்பினர்கள் பாஜகவால் கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டனர் என்று வெளிப்படையாகவே குற்றச்சாட்டு வந்தது. இதன் விளைவாகத் தங்கள் கட்சியினுடைய சட்ட சபை உறுப்பினர்களை கர்நாடகத்துக்குக் கூட்டிச் சென்று விடுதியில் தங்கவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது காங்கிரஸ்.
தேர்தலில் பாஜக வேட்பாளர்களான அமித் ஷா, ஸ்மிருதி இரானி இருவரும் எதிர்பார்த்தபடி வென்றனர். கடுமையான போராட்டத்துக்குப் பின் அகமது படேல் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். ஆனால், அவரது வெற்றி அறிவிக்கப்படுவதற்கு முன் பாஜக நடந்துகொண்ட விதம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரையும் முகம் சுளிக்கவைத்தது. அணி மாறி பாஜகவுக்கு வாக்களித்த இரு உறுப்பினர்கள் வாக்குச் சீட்டில் முத்திரையிட்டுப் பெட்டியில் போடுவதற்கு முன்னால், பாஜகவின் தேர்தல் முகவரிடம் ஓட்டுச் சீட்டுகளைக் காட்டியது அங்கிருந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. இந்தத் தேர்தலை பாஜக எதிர்கொண்ட விதத்துக்கான அப்பட்டமான சாட்சியமாக அது அமைந்தது. காங்கிரஸார் இதைச் சுட்டிக்காட்டி, அந்த இரு ஓட்டுகளைச் செல்லாததாக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டபோது, ‘அப்படி ஏற்கக் கூடாது’ என்று வலியுறுத்துவதற்காகக் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவில் தொடங்கி பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேட்லி, சட்ட அமைச்சர் ரவிஷங்கர் வரை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி அழுத்தம் கொடுத்தது பாஜக. மிக மோசமான முன்னுதாரணம் இது. ஆளுங்கட்சி யின் அழுத்தத்தையும் தாண்டி தேர்தல் ஆணையம் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டதன் விளைவாக நாட்டின் மானம் அங்கு காப்பாற்றப்பட்டிருக்கிறது.
அரசியல் வெற்றிக்காக எந்த வழிமுறையையும் கையா லாம் என்ற முடிவுக்கு ஒரு கட்சி வருவதைக் காட்டிலும் மோசம் இல்லை. வெற்றி - தோல்விகளைத் தாண்டியது ஒரு கட்சி மக்களிடத்தில் பெறும் நம்பிக்கையும் நம்பகத்தன்மையும். பாஜக இதை ஒரு படிப்பினையாகக் கருத வேண்டும்!
நன்றி: தி ஹிந்து 

Monday, August 21, 2017

BSNL ன் சுதந்திர தின பரிசு.


15-08-2017 முதல் டேட்டா மற்றும் ரேட்கட்டர்கள் மும்பை, டெல்லி நீங்கலாக ரோமிங்கிலும் வேலை செய்யும். 

BSNL is allowing Voice /SMS /Combo STVs in Home LSA & National Roaming (excluding Mumbai &Delhi) in Prepaid Mobile Services from 15.08.17-BSNL TN CIRCLE

logo






 21-08-2017
மாவட்டச் செயலர் மடல் - 2
அன்புத் தோழர்களே, தோழியர்களே!!
         வணக்கம்.   கடந்த 26-11-2017 அன்று ஆரூரில் நடைபெற்ற மாநாட்டில் நான் மாவட்டச் செயலராக  உங்களால்ஏகமானதாகத்  தேர்ந்தெடுக்கப்   
பட்டேன்.    அன்று தொட்டு   இது நாள் வரை நிறைவான ஒத்துழைப்பினை நல்கி வருகிறீர்கள். அதற்கு எனது நன்றியும் பாராட்டும்.

        அகில இந்திய, மாநிலத் சங்க  றைகூவல்களை நமது மாவட்டம் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.
        
          ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான பல்வேறு நிகழ்வுகளில், குறிப்பாக சென்னைப் பேரணியில் அதிகம் பேர் பங்கேற்றதும் மகிழ்ச்சி.   இது மாநில மட்டத்தில் AITUC யில் நமக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்திருக்கிறது.

           அதேபோல், தோழர் R.K. செயலூக்கப் பாராட்டு விழாவிலும் படையாய்த் திரண்டு வந்து பங்கேற்று பெருமை சேர்த்தீர்கள் நண்பர்களே!

           அடுத்து நமது மாவட்டச்செ  யற்குழு பட்டுக்கோட்டையில் வருகிற
26-08-2017  அன்று நடைபெறவிருக்கிறது.   அதற்கான ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை தோழர்கள்    சிறப்பாக செய்து வருகிறார்கள்.  நல்ல தீர்மானங்களை   நிறைவேற்றிட,   எதிர்களைச்   செயல்திட்டங்கள் வகுத்திட  உங்களின் ஆக்கபூர்வமான விவாதங்கள் உதவட்டும்.

           செயற்குழுவிற்கு அணி, அணியாய் என்பதைவிட அலைகடலென திரண்டு வாரீர் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பதறிவு.

                                                                                         தோழமையுடன்,
                                                                                       கே. கிள்ளிவளவன்.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR