தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, August 14, 2017

இன்டர்நெட் வசதிக்கு இனி மோடம் தேவையில்லை:
பிஎஸ்என்எல் அறிவிப்பு



பிஎஸ்என்எல் இன்டர்நெட் வசதி வைத்திருப்பவர்கள் மோடம், தொலைபேசி என இரண்டு வசதிகளையும் தனித்தனியாகப் பயன்படுத்தி வந்தனர். இனி, தொலைபேசியிலேயே இன்டர்நெட் வசதியையும் பெறலாம் என பிஎஸ்என்எல்அறிவித்துள்ளது.

தனியார் தொலைபேசி நிறுவனங்களின் நெருக்கடிகளைச் சமாளிக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு சலுகைகளை வழங்கிவருகிறது. அதில் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 23 கோடி செலவில் 2.32 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்தப்பட உள்ளன. இதனால், வீடியோ காலிங், கான்ஃபரன்ஸிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறமுடியும்.

இதற்காக இன்டர்நெட் புரோட்டோகால் வசதிகொண்ட தொலைபேசிக் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதனால் லேண்ட்லைனுக்கு வரும் அழைப்புகளைத் செல்போனிலும், செல்போனுக்கு வரும் அழைப்புகளை லேண்ட்லைன் வழியிலும் பேசமுடியும். வாட்ஸ்அப்பில் உள்ளது போல குழுக்களை ஏற்படுத்தி, தகவல்களைப் பறிமாறிக்கொள்ளும் வசதிகளும் இதில் உள்ளன. இந்த வசதிகள் யாவும் ப்ரீ பெய்டு சர்வீஸ் வசதிகளுடன் வழங்கப்பட்டுள்ளது. இது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR