29-08-2017
மாவட்டச் செயற்குழு தீர்மானங்கள்
1.
25-11-2016 அன்று திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டு வரவு செலவு கணக்கு, தாக்கல் செய்யப்பட விபரங்களை, அன்றைய வரவேற்புக்குழு, எல்லா கிளைகளுக்கும் மாவட்டச்சங்கம் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும் என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
2.
தமிழ் மாநிலச் செயற்குழுவினை தஞ்சாவூரில் செப்டம்பர் 30 க்குள் நடத்துவது என்றும், அதற்கு அனைத்து கிளைகளும் குறைந்தபட்சம் ரூ. 5000/- வழங்கிட வேண்டுமென்றும் பணிவுடன் இச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
3.
மாவட்டச் சங்க நிர்வாகிகள் தோழர். C. சுந்தர்ராஜூ PTK, S. இராஜேஷ் CTMX / TNJ ஆகியோர் பணி ஒய்வு பெற்று விட்டதால் புதிய மாவட்டச் சங்க நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழியர்களை இச் செயற்குழு தேர்ந்தெடுக்கிறது.
1. V. விஜயலட்சுமி, STS (O)/PTK மாவட்ட அமைப்பு செயலர்.
2. R . மீனாட்சி, TT / CTMX
/ TNJ மாவட்ட அமைப்பு செயலர்.
4.
தஞ்சை மாவட்ட புதிய வலைத்தளத்திற்கு மாநிலச் சங்கம் லிங்க்கை மாற்றித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறது.
5.
கிளை மாநாடுகளை நடத்தாத கிளைகள் உடனடியாக மாநாட்டை நடத்திட இச் செயற்குழு பணிக்கிறது.
6. ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சினைகளில் நமது தமிழ் மாநிலச் சங்கம் எப்படி TMTCLUவுடன் பயணிக்கின்றதோ அவ்வாறே தஞ்சைமாவட்டச்சங்கமும் பயணிக்கும் என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
7.
அடுத்த தஞ்சை மாவட்டச் செயற்குழுவினை டிசம்பர் 2017க்குள் மன்னார்குடி கிளை நடத்திட இச் செயற்குழு வேண்டுகிறது.
8.
நமது தஞ்சை மாவட்ட நிர்வாகம் பரிவோடு பரிசீலித்து 25 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மாற்றல் உத்தரவினை தந்து உதவியது. அதேபோல் நெருக்கடியான சூழ்நிலைமையில் மருத்துவ செலவுக்கு திருவாரூர் தோழர். பாஸ்கரனுக்கு WELFARE FUND டிலிருந்து ரூபாய் 50,000 நிதியுதவி செய்தது.காலத்தே இப் பேருதவியை மனிதாபிமானத்தோடு செய்து தந்த நமது முதன்மைப் பொது மேலாளரை இச்செயற்குழு நன்றியறிதலோடு பாராட்டி மகிழ்கிறது.
9.
இச் செயற்குழுவினை சிறப்பான முறையில் நடத்தித்தந்ததற்கும், செழுமையான விவாதம் மூலம் ஒருமித்த முடிவுகளை எடுக்க உதவியதற்கும் பட்டுக்கோட்டைக் கிளையினை மாவட்டச்செயற்குழு பாராட்டுகிறது.
10.
மாநிலச் சங்க செயல்பாட்டுக்கு உதவிடும் வகையில், பணி ஒய்வு பெரும் தோழர்களிடம் ஒலிக்கதிர் நிதி பெற்றுத் தந்திடுமாறும், அதற்கான செயல்களில் ஈடுபடுமாறும் அனைத்துக் கிளைகளையும் இச்செயற்குழு வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.
தோழமை வாழ்த்துக்களுடன்,
தோழர். T. பன்னீர்செல்வம்,
மாவட்டத் தலைவர், தஞ்சாவூர்.
தோழர். கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர், மன்னார்குடி.
தோழர். A. சேகர்,
மாவட்டப் பொருளர், திருவாரூர்.
No comments:
Post a Comment