தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, May 16, 2018

தோழர். ஜெகன்
பிறந்த நாள் - 17-05-2018
தொகுப்பு: S. சிவசிதம்பரம்.

தோழர் ஜெகனின் நினைவுகள் 
நமக்கு மாறாத உற்சாகத்தையும் 
தெம்பையும் அளித்த காலம் நிழலாடுகிறது.   
பொறுமையும், சகிப்புத் தன்மையும், போர்க்குணமும், 
சக தோழரிடம், தொழிற்சங்கத்திடம்,   பழகும் பாங்கும், 
நேர்மையான அரசியலும் நாம் இன்னும் கற்றுத் தேற வேண்டியிருக்கிறது  என்பதை உணர்வோம், ஒப்புக் கொள்வோம்.   

தோழர் ஜெகனைப் பற்றி 
திருச்சி தோழர். S. பால்சாமி  அவர்கள் 
எழுதி இசையமைத்த பாடலும், 
அவருடன் அவர் எடுத்த பேட்டியும்  இத்துடன் உள்ளது. 
காணத் தவறாதீர்கள்.


     நமது மாநிலச் சங்கத்தின் வழிகாட்டல் அடிப்படையில் தோழர் ஜெகனின் பிறந்த நாளை இளைஞர் தினமாக நாம்   கொண்டாடுகிறோம்.  ஜெகன் என்று சொல்லும்போது அந்த சொல் ஒரு மந்திரச் சொல்லாக கடந்த 2000 ஆம்  ஆண்டு   வரை   பெரும்பான்மைத் தோழர்களின்  உணர்வில் கலந்திருந்தது.  இன்றைக்கு அதை மீட்டு நமது இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதை  தலையாய கடமையாக உணர்கிறோம். 03-01-1992 அன்று கோவை பிரசிடென்சி ஹாலில் E 3 சங்கத்தின் 22 வது மாநில மாநாடு நடைபெற்றது.  அது தோழர் குப்தா, மோனிபோஸ், ஞானையா பங்கேற்ற மாநாடு.   அதில் தோழர் ஜெகன் பங்கேற்று  துவக்க உரையாற்றியதை தொகுத்து உங்களுக்கு 
தருகிறோம்.

கேளுங்கள் தோழர் ஜெகனின் உரையை:

     1971 ல் இதே இடத்தில் மாநில மாநாடு நடந்தது. 130 சார்பாளர்கள், 7 கோட்டம் பங்கேற்றது. தகராறு, பதட்ட நிலை எல்லாம் இருந்தது. போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.   இன்று அவைகளில் எல்லாம் பெரும் மாற்றம்.   1960 போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில்   2 பேர் தோழியர்கள். பொள்ளாச்சியில் ஒரு தோழர். தொலைபேசி நிலையத்திலிருந்து ஒரு மைல் தூரத்திற்கு போலிஸ் கெடுபிடி. அந்தச் சூழ்நிலையில் நின்றவர்கள் இவர்கள்.  1957 -ல் வந்த எஸ்மா சட்டத்தை 1960 -ல் பயன்படுத்தினார்கள்.  அன்று அவர்கள் செய்த தியாகம்,  இன்று இந்த இயக்கம் இவ்வளவு வளர்வதற்கு ஒரு காரணம்.  இன்றைக்கு பல தலைவர்களின் ஏக்கம் இளைஞர்களை நம்மால் ஈர்க்க முடியவில்லையே என்பது.   ஆனால் நம்மால் ஈர்க்க முடிந்தது. கல்லூரி ஆசிரியர் போராட்டத்துக்கு ஆதரவான போராட்டம், சென்னையில் சரிவராது என்றபோது அதை வெற்றிகரமாக நாம் நடத்தினோம்.   கைதான 57 பேரில் 48 பேர் தொலை தொடர்பினர்.  அதில் 7 பேர் பெண்கள்.   ஒரு பகுதி போராடுகின்றபோது அதற்கு ஆதரவாக மற்ற பகுதியினர் போராடாது இருக்கக் கூடாது,  இருக்க முடியாது என்று காட்டினோம்.   சோவியத்தில் ஏற்பட்ட மாற்றங்களிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டால் நாம் நிச்சயம் மேலும் வளர முடியும்.    பகத்சிங் எப்படி வாழ்ந்தான்?   அவனுக்கு ஆதர்ஷம் தந்தது எது?   நெல்சன் மண்டேலாவுக்கு எப்படி 26  வருஷம் சிறையில் இருக்க முடிந்தது.   அவனுக்கு எது ஆதர்ஷமாக இருந்தது?   இப்படிப்பட்ட லட்சியங்கள்தான் நம்மை வழி நடத்தும்.      

     என்னிடம்தான் நியாயம் இருக்கும் என்று இறுமாப்போடு கூறாமல், மற்றவரிடம் இருக்கும் நியாயத்தையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.     பஞ்ச பூதங்களையும் ஆளுகின்ற மேதாவித்தனம் நம்மிடம் உள்ளது.     Co-axial வந்து பரவுவதற்குள்      Microwave  வந்துவிட்டது.   மாற்றங்கள் வரும்போது நமக்கு வேலை போய் விடுமா? இது முதல் பயம்.   இந்த இலாக்காவில் மட்டும்தான் ஒரு    Non-Technical Cadre, Technical Cadre க்கு   Promotion -ல் போகலாம்.   
     காவிரி நீர் பந்த் 2 -1 -92 நேற்று நடந்தது.  அதில் எத்தனை TMC என்பது பிரச்னை அல்ல.   இந்த நாடு ஒன்றா இல்லையா!  ஒரு மனிதன், தோழன், இந்தியன் என்று பார்க்க வேண்டும்.   1800 கோடி இருந்தால், கோதாவரி, காவிரி, துங்கபத்ரா, பம்பை, மணிமுத்தாறு போன்ற தென்னக நதிகளை இணைத்தாலே பெருமளவில் நன்மை கிடைக்கும்.   அர்த்தமற்ற கொலைகளுக்கு என்ன காரணம்?   ஜாதிக் கலவரங்கள், இதில் இளைஞர்கள் முன்னால் நிற்கிறார்களே ஏன்?  இதைப் பற்றிய  கேள்வியெல்லாம் நம் முன்னே நிற்கிறது.      இந்த நாடே அமுங்கிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.  இதைப் பற்றிய சிந்தனை நமக்கு அதிகம் வந்தாக வேண்டும்.  அப்பேர்ப்பட்ட ஊழியரை உருவாக்க நாம் சபதம் மேற்கொள்வோம். 

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR