மாநிலச் சங்கத்தின் சுற்றறிக்கை.
தனி டவர் கம்பெனி அமைப்பதை கைவிடு!
நமது நிறுவனத்தின் சொத்துக்கள், நிலங்கள், கோபுரங்கள் மீது தனியார் கபளீகரம் செய்ய துடித்து வருகின்றன. பொதுத்துறை சொத்துக்களை தாரவார்ப்பதை கொள்கை (கொள்ளை) யாக கொண்டுள்ள மத்தியஅரசோ நமது நிறுவனத்தை மீண்டும் வலுவிழக்க வைக்கும் மிகவும் பாதகமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. செல் சேவைக்கு ஆதாரமான, அடித்தளமான, செல் கோபுரங்கள் KPMG குழுமத்தின் ஆலோசனைபடி 2014 முதல் தனியார்மயப்படுத்திட, தனி நிறுவனம் அமைத்திட திட்டம் தீட்டப்பட்டு வருகின்றன. நமது நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் 65,000 செல் டவர்கள் உள்ளன. தற்போது மேலும் 20,000 டவர்களை நிர்மாணிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. ஆக 85000 டவர்களின் மதிப்பு பல ஆயிரம் கோடி.நமது கடும் எதிர்ப்பையும் மீறி இந்த டவர்களை பிரித்து தனி கம்பெனி 04/01/2018 முதல் அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இறுதி கட்ட நிலைக்கு வந்துள்ளது. இந்த முடிவு நமது நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கும் அதன் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் எதிர்காலத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கும். BSNL நிறுவனத்தை நேரிடையாக, நமது எதிர்ப்பு காரணமாக விற்க முடியாததால் பிரித்து விற்று நிறுவனத்தை சீர்குலைவு செய்ய துடிக்கிறது.
பிராண்பாண்ட் பணிக்கென BBNL எனும் நிறுவனம் அமைக்கப்பட்டதும் அதே குறுகிய நோக்கத்துடன்தான்.தொலைத் தொடர்புத் துறையில் புதியதாக தடம் பதித்துள்ள அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு செல் டவர் இல்லாத குறையை போக்கவும், அந்த நிறுவனம் புதியதாக செல் டவர்களை நிர்மாணிக்க ஆகும்செலவை குறைக்கவும்தான் BSNL நிறுவனதிற்கு சொந்தமான செல் டவர்களை பிரித்து புதிய கம்பெனி அமைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இது நடைமுறைக்கு வந்துவிட்டால், இனி அந்த செல் டவர்களை பயன்படுத்த BSNL நிறுவனமும் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டிவரும். இதனால் கூடுதல் செலவு ஆகும், நிதியாதாரமும் பாதிக்கப்படும்.
நமது செல் கோபுரங்களின் புத்தக மதிப்பு ரூ ரூ10000 கோடி என மதிப்பிட்டு பங்குகள் ஒதுக்கப்பட்டு புதிய நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ2600 கோடி மூலதனம் வழங்கி தனியார் நிறுவனம் பங்குதாரர் ஆக்கப்பட்டால் நிர்வாகம் தனியார் வசம் செல்லும். VSNL -டாடா கதை நாம் அறிந்த ஒன்றுதான், ஏர்டெல் வோடொபோன், இண்டஸ் இணைந்து தங்களை ஜியோ நிறுவனத்திடமிருந்து காத்திட டவர் நிறுவனங்களை ஒன்றிணைத்து 1,63,000 கோபுரங்களை கொண்ட நிறுவனமாக மாற்றம் செய்து கொண்டுள்ளது. ஜியோ நிறுவனத்திற்கு தேவையான கட்டுமானத்தை புதிதாக உருவாக்குவதை விட எளிதாக டவர் நிறுவனத்தை கையகப்படுத்திட வழியை அரசு செய்துள்ளது.
நமது சேவை வழங்க இனி கட்டணம் ஆண்டுக்கு ஒரு டவருக்கு ரூ50000 வரை வழங்க வேண்டும். இதனால் மிகுந்த நிதி சுமையை BSNL ஏற்க நேரிடும்.
நம்மை காத்திட, நிறுவனத்தை காத்திட தொடர்ந்த போராட்டம் தவிர்க்கமுடியாத ஒன்று என்பதால் மே7 முதல் மே11 வரை மக்கள் மத்தியில் பிரச்சாரம், பின் மே11 ஆர்ப்பாட்டம், அத்துடன் பிரதமருக்கு ஃபேக்ஸ் செய்தியும் அனுப்பிட வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment