ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL
ஊதிய மாற்றத்தை வென்றடைய உண்ணாவிரதத்தில் பங்கேற்போம்!
அன்பார்ந்த தோழர்களே,
துவக்கத்தில் மிகப்பெரிய் அளவில் லாபம் ஈட்டி வந்த BSNL நிறுவனம், மத்தியில் தொடர்ச்சியாக ஆண்டு வரும் அரசுகள் கடைபிடித்து வரும் தவறான புதிய பொருளாதார கொள்கைகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. சரிந்து கிடந்த BSNL நிறுவனத்தை உயர்த்திப் பிடிக்க BSNLல் உள்ள ஊழியர்களும், அதிகாரிகளும் ‘வாடிக்கையாளர் மகிழ்விப்பு இயக்கம்’, ’புன்முறுவலுடன் சேவை’, ‘நலம்தானா’, ‘ஒரு மணி நேர கூடுதல் பணி’ உள்ளிட்ட பல இயக்கங்களை நடத்தி வருகிறது.
BSNL நிறுவனத்தை புத்தாக்கம் செய்ய ஊழியர்களும் அதிகாரிகளும் உறுதியோடு செயல்பட்டு வரும் இந்த சமயத்தில் அவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு முதல் வரவேண்டிய ஊதிய மாற்றத்தை ‘AFFORDABILITY’ என்ற காரணத்தை கூறி அரசு மறுத்தது. இதனை ஏற்க மறுத்து ஊழியர்களும், அதிகாரிகளும் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இறுதியில், 24.02.2018 அன்று மத்திய தொலை தொடர்பு அமைச்சர் ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL தலைவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஊதிய மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றுத் தருவதாகவும், ஓய்வூதிய பங்கீடு பிரச்சனையில் மத்திய அரசு உத்தரவை அமல்படுத்தப்படும் என்றும், நிர்வாகம் முன்மொழிந்துள்ள திட்டத்தின் அடிப்படையில் BSNLக்கு 4G ஸ்பெக்ட்ரம் வழங்குவதை விரைவு படுத்துவதாகவும் மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.
அவர் உறுதி மொழி கொடுத்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆன பின்பும் அதில் பெரிய முன்னேற்றங்கள் ஏதும் இல்லை. ஊதிய மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறுவதற்கு தேவையான அமைச்சரவைக் குறிப்பை தொலை தொடர்பு துறை தயாரிப்பதில் மிகப்பெரிய சுணக்கம் காட்டி வருகின்றது. எனவே கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 11.07.2018 அன்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அடுத்த கட்டமாக மாவட்ட, மாநில மற்றும அகில இந்திய தலைநகர்களில் 2018, ஜூலை 24 முதல் 26 வரை மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதம் நடத்திட அகில இந்திய ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL அறைகூவல் விடுத்துள்ளது.
கோரிக்கைகள்:
BSNL ஊழியர்களுக்கு 3வது ஊதிய மாற்றத்தை உடனே வழங்கிடு!
BSNL நிறுவனத்திடம் இருந்து ஓய்வூதிய பங்கீடு பெறுவதில் மத்திய
அரசு உத்தரவை அமல்படுத்திடு!
BSNL நிர்வாகம் கோரிய படி BSNLக்கு 4G ஸ்பெக்ட்ரம் உடனே
வழங்கிடு!
BSNL ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை உடனே
அமல்படுத்திடு!
மத்திய சங்கங்களின் அறைகூவலான மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம். நமது உரிமைகளை வென்றெடுப்போம். நமது உயிரினும் மேலான BSNLஐ காத்திடுவோம்.
போராட்ட வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள,மாநில செயலாளர்கள்
ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL.
No comments:
Post a Comment