தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, October 12, 2018

தமிழ் மாநில கவுன்சில் கூட்டம் 
==============================
தமிழ் மாநில கவுன்சில் கூட்டம் 09 .10 .2018 அன்று புதிய தலைமை பொது மேலாளர் திரு ராஜு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கவுன்சில் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் GM HR திரு மோகன் அவர்கள் வரவேற்று பேசினார்.கவுன்சில் கூட்டத்தின் துவக்கத்தில் ஊழியர் தரப்பு தலைவர் தோழர் நடராஜன் மாநில நிர்வாகத்தின் முனைப்பான ,சேவை மேம்பாட்டை முன்னெடுக்கும் பல்வேறு செயல்களை சுட்டிக்காட்டி பாராட்டினார். 14 .08 .2018 CGM  நடத்திய கூட்டத்தின் முடிவை சுட்டிக்காட்டி சேவை மேம்பாடு ,வருவாய் பெருக்கம் ஆகியவற்றில் எப்போதும் ஊழியர் தரப்பு முன்னிற்கும் என உறுதி கூறினார்.
ஊழியர் தரப்பு செயலர் தோழர் செல்லப்பா அவர்கள் மாநில நிர்வாகத்தின் சேவை மேம்பாடு குறித்த ஆலோசனைகளை வரவேற்று ,கருணை அடிப்படை பணிநியமனத்தில் நிலவுகிற காலதாமதம் ,மருத்துவ பில் தேக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை பட்டியலிட்டார். நிர்வாகத்துடன் கரம் கோர்த்து சேவை மேம்பாட்டில் ஊழியர் தரப்பு முன்னிற்கும்,துணை நிற்கும் என்றுரைத்தார் .
தலைமை பொது மேலாளர் தனது உரையில் பரிவு அடிப்படையில் வேலை நியமனத்தில் உள்ள காலதாமதம் தீர்க்கப்படும். ஊழியர்கள் ,நிர்வாக தரப்பு உறவு வலுப்பட நம்பிக்கை உருவாக்குவது அவசியம் என்றும் பிரச்சனை விரைந்து தீர்க்கப்படும் என்றும் உறுதியளித்தார். இன்றைய நிலையில் நிதி பற்றாக்குறை என்பது மிக பெரிய சவாலாக உள்ளது என்றும், டெல்லியில் நடைபெற்ற மாநில தலைமை பொது மேலாளர்கள் கூட்டத்தில் (HOCC meeting) நிதி பற்றாக்குறையை சமாளிக்க முன்னுரிமை EB bill  கட்டுவதற்கு கொடுப்பது  அதன்பிறகு ஊழியர்கள் சம்பளத்திற்கு கொடுக்கலாம் என்ற யோசனையை, Dir HR  அவர்கள் நிராகரித்தார்கள் என்று பதிவு செய்தார்.
1.BSNL டவர்களில் 3G   விரிவாக்கம் செய்து வருவாய் ஈட்டிட வேண்டுமென கோரினோம் . தமிழ் நாட்டில் 5873  டவர்கள் உள்ளன .இதில் 2973 3G  டவர்கள், மேலும் 1428  3G  ஆகா மாற்றப்பட உள்ளது . 1652 4G டவர்கள் கட்டுமானத்தில் உள்ளன. WIFI HOT SPOT அதிகமாக செயல் படுத்தப்பட்டு வருகிறது என்றுரைத்தார்.
நமது அலுவலகம் மற்றும் குடியிருப்புக்களில் காலியாக உள்ள இடங்களை வாடகைக்கு விட்டு அதன்மூலம் வருவாய் ஈட்டிட கோரப்பட்டது .சிவில் பகுதி நிர்வாகம் 5மாவட்டங்களில் ( கோவை ,குன்னுர், ஈரோடு ,சேலம் ,தர்மபுரி ஆகிய SSA  க்களில்) காலி இடங்களை கண்டறிந்து வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. காலியாகஉள்ள குடியிருப்புகளை ஓய்வூதியர் /ஓய்வூதியர்கள் குடும்பம்  மற்றும் நிரந்தர ஊழியர்களிடம் செக்யூரிட்டி பெற்றுக்கொண்டு CONTRACT  ஊழியர்களுக்கு வழங்கலாம் என வலியுறுத்தப்பட்டது .
  1. மின்சார செலவினங்கள் குறைப்பு சம்மந்தமாக எடுக்ககப்பட்டு வரும் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டது. 29 கோடி செலவை குறைக்க இலக்கு நிர்ணயக்கப்பட்டிருக்கிறது . 431 தொலைபேசி நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டு செலவுகள் குறைக்கப்பட்டுள்ளது . தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . கார்ப்பரேட் அலுவலகம் இதனை OJAS திட்டத்தின் மூலம் கண்காணித்து வருகிறது ..
  2. பணி ஓய்வு பெற்றவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்ய படிவம் 16 , 26 AS , part A  வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ..
  3. ப்ராஜெக்ட் விஜய் ,udaan பகுதியில் பணியாற்றும் தோழர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாமல் உள்ளதை சுட்டிக்காட்டினோம் . மாவட்டங்களிலிருந்து விபரங்களை பெற்று ஒரு வார காலத்திற்குள் முடிவு எடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது ..
       6.தமிழ்நாடு முழுவதும் IQ பராமரிப்பு போதுமானதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டினோம்.                            பராமரிக்கவும், தங்குவதற்கு ஏற்றதாக செய்திடவும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திடவும்                                         ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  1. CSC பகுதிக்கு போதுமான ஊழியர்கள் நியமனம் செய்திட வலியுறுத்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளைவிட CSC க்கு முன்னுரிமை வழங்கிட கேட்டுக்கொள்ளப்பட்டது .
  2. SrTOA (G ) கன்பர்மேஷன் தேர்வில் 2 தோழர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  SrTOA தேர்வு வருகிற 25/11/2018 அன்று நடைபெறும்.
     9 வங்கி கடனுக்கு இன்சூரன்ஸ் அவசியம் என்பதை வலியுறுத்தி கூறினோம்.மாநில நிர்வாகம் corporate       அலுவலகத்திற்கு DO லெட்டர் அனுப்பியுள்ளது .
  1. டவர்களை தனியாருடன் பகிரும்போது மின் கட்டணம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டினோம் . நிர்வாகம் மின் கட்டணத்தை முழுமையாக வசூலிப்பதாக தெரிவித்தது ..
  2. 20 தொலைப்பேசிக்கு குறைவாக உள்ள 84 தொலைப்பேசி நிலையங்களில் 19 ஐ மூடிவிடவும் அதனை அருகாமையில் உள்ள exchange  உடன் இணைத்திடவும் மற்றவற்றில் வருவாயை பரிசீலித்து முடிவு எடுக்கவும் , ஊழியர் பற்றாக்குறையை கணக்கில் கொண்டு சிறிய exchanges இணைத்திடவும் முயற்சி மேற்கொள்ளப்படும் ..
  3. மருத்துவ பில்கள் தேக்கம் மற்றும் பில்களின் மீது விளக்கம் கேட்டு திரும்ப அனுப்புவது என                 ஊழியர்கள் அலைக்கழிக்கப்படுவதை சுட்டிக்காட்டி தீர்வுக்கு வழி கோரினோம். மருத்துவ கமிட்டி கூட்டம் 3 மாதத்திற்கு ஒரு முறை கூட்ட முடிவு செய்யப்பட்டது ..
  4. கார்ப்பரேட் அலுவலக உத்தரவு அடிப்படையில் வெளி வழக்கு காரணமாக ஓய்வுக்கால சலுகைகளை நிறுத்தக்கூடாது என கோரப்பட்டது .மாவட்டங்களில் இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் தீர்வுக்கு வழிகாட்டப்படும் .
  5.  லைன்மேன் ஊதியம் பெற்று பின்னர் TM ஆன தோழர்களுக்கு பணி ஓய்வு நேரத்தில் ஊதிய பிடித்தம் செய்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது .403  தோழர்களின் ஊதிய பிடித்தம் திரும்ப பட்டுவாடா செய்திட CGM அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது ..
  6. பரிவு அடிப்படையில் வேலை நியமனம் 2016 -2017 ல் 14 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2017 -2018 க்கு 56 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 20 விண்ணப்பங்கள் போதுமான சான்றிதழ்கள் இணைக்கப்படவில்லை. சான்றிதழ்கள் பெற்றுதர விரைந்து முடித்திட ஊழியர் தரப்பு உறுதி அளித்துள்ளது .
  7. அலுவலகங்களில் படிப்படியாக வெஸ்டர்ன் டாய்லட் அமைக்கப்படும் .
  8. மகளிருக்கு ஓய்வறை வழங்கிடவும் , மேம்படுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ..
  9. தமிழகம் முழுவதும் 56 மருத்துவமனைகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் ஒரு மருத்துவமனை கூட அங்கீகரிக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளில் payment basis ல் பயன்படுத்திட பரிசீலிக்கப்படும் ..
பழைய பிரச்சனைகள் :–
 பல மாவட்டங்களில் ஊழியருக்கு BAG வழங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினோம் .விரைவாக வழங்கிட வேண்டுமென்பதை நிர்வாகம்  ஏற்றுக்கொண்டது..
ஊழியர் தரப்பு மற்றும் நிர்வாகத்தரப்பு பரஸ்பரம் நன்றி தெரிவித்துக்கொண்டது. நிர்வாகத்தின் நேர்மறையான மற்றும் பிரச்சனை தீர்வில் வெளிப்படையான அணுகுமுறை திருப்திகரமானதாக இருந்ததை ஊழியர் தரப்பு பாராட்டியது.
நிர்வாகத்தின் சார்பில் DGM Admin திரு ரவிக்குமார் அவர்கள் பதில்களை வழங்கினார்கள் .
முடிவில் AGM SR திருமதி கிருஷ்ணப்ரியா அவர்கள் நன்றி கூறி முடித்து வைத்தார்கள் .. 
  கூட்டத்தில் கவுன்சில் உறுப்பினர்களான தோழர்கள் மாநிலத்தலைவரும் அகிலஇந்திய செயலருமாகிய காமராஜ், மாநில உதவிச்செயலர் தோழர் முரளிதரன் மற்றும் பார்வையாளராக கடலூர் மாவட்ட செயலர் தோழர் ஸ்ரீதரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR