====================================================
20-10-18
தஞ்சை மாவட்டச் செயற்குழு
==================================
20-10-18 மாலை 4 மணிக்கு பேராவூரணி தனம் மகாலில்
நமது மாவட்டச் செயற்குழு சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு தோழர். D. கலைச்செல்வன்
அவர்கள் தலைமை வகித்தார்.
NFTE மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன்
செயற்குழுவை துவக்கி வைத்தார்.
அனைத்து கிளைச் செயலர்களும்
அமைப்பு நிலை விவாதத்தில் பங்கேற்று பேசினார்கள்.
செயற்குழுவில் NFTE மாநிலச் செயலர் தோழர். நடராஜன்,
மூத்த தலைவர் மதுரை சேது,
காரைக்குடி மாவட்டச் செயலர் தோழர் மாரி,
கடலூர் மாவட்டச் செயலர் தோழர் ஸ்ரீதர்
ஆகியோர் வாழ்த்தி, சிறப்புரையும் தந்தனர்.
TMTCLU மாநிலச் செயலர் தோழர். செல்வம்,
TMTCLU மாநிலப் பொருளர் தோழர். விஜய்
ஆகியோர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தும்,
தற்போதைய நிலைமைகளை விளக்கியும், எதிர்காலத்தில் திட்டமிட்டிருக்கிற போராட்டம் பற்றியும் பேசினார்கள்.
மாவட்டப் பொருளர் தோழர். ஆர்.கே. ராஜேந்திரன்
நன்றியுரையுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது.
====================================
எடுக்கப்பட்ட முடிவுகள்:
1. இந்த ஆண்டு தோழர்களுக்கு ரூ.7000/- போனஸை
அனைத்துப் பகுதிக்கும் கிடைத்திட முயற்சி
எடுத்துப் போராடுவது.
2. டிசம்பர் 2018 ல் மாவட்ட மாநாட்டை நடத்துவது.
3. உறுப்பினர்களிடம் முறையாகச் சந்தாவைப் பெறுவது,
முடிந்த இடங்களில் ஆண்டுச் சந்தா கேட்டுப் பெறுவது.
=========================================
செயற்குழு காட்சிகள்:
No comments:
Post a Comment