தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, April 11, 2013

தேர்தல் திருவிழா 
நிறைவுக் கூட்டம் 

12-04-2013 வெள்ளி காலை 10 மணிக்கு 

தஞ்சை பொது மேலாளர் 
அலுவலக வளாகத்தில் 
எழுச்சிப் பேருரையாற்ற வருகிறார் 

நமது முன்னாள் அகில இந்திய செயலர் 

தோழர். R . K அவர்கள் 

திரளாய் வருக தோழர்களே!
நிறைவுரை 

தோழர்ஆர்.கே.,

தோழர்களே!  வருக!


 9 ஆண்டு தொல்லை தொலைந்திட 
                    வரிசை எண்  15 ல் வாக்களிப்போம்!
                                                          ஏப்ரல் 16 நமக்கு  என்றும் 16!

பட்டுக்கோட்டை தேர்தல் பிரசார 
சிறப்புக் கூட்டம் 

       வெகு சிறப்பாக நடைபெற்ற தேர்தல் பிரசார சிறப்புக் கோட்டத்தில் 100 க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.  
   
       அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலர் தோழர். கெஜராஜநிதி  அவர்கள்  சிறப்புரையாற்றினார்.   அண்ணா தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் தோழர். சுந்தரராஜ் , தோழர் கிருஷ்ணாஜி, கே. நடராஜன்,  நமது மாவட்டச் செயலர் தோழர் T. பன்னீர்செல்வம், கிள்ளிவளவன், தஞ்சை LCP, தஞ்சை கலைச்செல்வன், கூத்தாநல்லூர் பன்னீர்செல்வம், விஷ்ணுகுமார் TTA மற்றும் பல தோழர்கள் பங்கேற்று விளக்கவுரையாற்றினார்கள்.   

கூட்ட நிகழ்வு படக் காட்சிகள் கீழே:

Monday, April 8, 2013


NFTE - BSNL பட்டுக்கோட்டை கோட்டம் 
தேர்தல் பிரச்சார சிறப்புக் கூட்டம் 


நாள்: 10-04-2013 புதன்கிழமை  மாலை 5 மணி  
   
இடம்: அஞ்சலகச் சாலை தொலைபேசியகம், பட்டுக்கோட்டை. 

தலைமை: 
தோழர். S. சிவசிதம்பரம்

முன்னிலை:தோழர்கள் 

R. கிருஷ்ணாஜி, அண்ணா தொழிற்சங்கம், திருச்சிற்றம்பலம்
  
S. கிருஷ்ணமூர்த்தி, கிளைச் செயலர், அதிராம்பட்டினம். 

A. சுப்பையன், கிளை செயலர், பேராவூரணி 

R. செல்வகுமார், பட்டுக்கோட்டை.

வரவேற்புரை: 
தோழர் C. சுந்தரராஜன் கிளைச் செயலர், பட்டுக்கோட்டை 

துவக்கவுரை:
  தோழர். K. நடராஜன் மாநில துணைச்  செயலர்  

சிறப்புரை: 

தோழர். S. கெஜராஜநிதி அவர்கள் 
 தஞ்சை மாவட்டச் செயலர் அண்ணா தொழிற்சங்கம் 

தோழர். S.C. ராஜேஸ்வரன் அவர்கள்  
தஞ்சை மாவட்டச் செயலர் SNATTA  

தோழர். தங்க. ஜெயராஜ் அவர்கள் 
 தஞ்சை மாவட்டச் செயலர், AIBCTES  

வாழ்த்துரை:  

S. பிரின்ஸ் மாவட்டத் தலைவர் 
T. பன்னீர்செல்வம் மாவட்டச் செயலர் 
T. பக்கிரிசாமி மாவட்டப் பொருளர் 
K. கிள்ளிவளவன் மாவட்டச் செயலர், TMTCLU 

பிரசாரக் குழுத் தலைவர்கள்
D. கலைச்செல்வன் மாவட்டத் தலைவர், TMTCLU 
 S. சீனிவாசன் TTA            M. ஜெயராமன் TM    
G. சுந்தரமூர்த்தி Sr.TOA  P. மதனகோபால் TM
     V. கௌரிசங்கர் TM    ஆகியோர்.
மற்றும் 
அனைத்து மாவட்ட, கிளைச் சங்க பொறுப்பாளர்கள். 
நன்றியுரை: V. தனராஜ் கிளைத் தலைவர், பட்டுக்கோட்டை.
அனைவரும் வருக! 

      








Saturday, March 30, 2013


DA  உயர்வு 
 DA 3.4 % உயர்ந்துள்ளது.  
71.5 லிருந்து 74.9 ஆக உயர்ந்துள்ளது.

Friday, March 29, 2013



 எல்லாம் வல்ல NFTE 
 அருமைத் தோழர்களே தோழியர்களே

அனைவருக்கும் வணக்கம்.    வருகிற 16-04-13 அன்று 6 வது சரிபார்ப்புத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.  15 ஆம் எண்ணில் நமது வாக்கைச் செலுத்த வேண்டும். கடந்த தேர்தலுக்கும் இத் தேர்தலுக்கும் நிறைய மாற்றங்கள் உள்ளது என்பதை இத் தருணத்தில் கூற விரும்புகிறோம்.   புதிய அங்கீகார விதிகள் நமக்கு அத்தகைய வாய்ப்பைத் தந்திருக்கிறது.  

1.     50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற சங்கம்தான் ஒரே அங்கீகரிக்கப்பட்ட சங்கம்.  (சென்ற தேர்தலில் BSNLEU  வே 50 சதவீதம் பெறவில்லை என்பதை நினைவில் கொள்க.)

2. அடுத்து 35 சதவீதத்துக்கு மேற்பட்ட சங்கம் முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கம், 15 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகள் பெற்றவர்கள் 2 வது முதன்மைச் சங்கம்.  இந்த 2 சங்கமும் பேச்சு வார்த்தை, உடன்பாடு போன்றவைகளில் சம உரிமை உள்ளவையே.

3. 2 சதவீதம் வாக்குகளைப் பெற்றவர்களுக்கு சந்தா பிடித்தம் செய்து தருவது போன்ற குறைந்தபட்ச சலுகைகள் கிடைக்கும்.

4. அதிக வாக்குகளைப் பெற்ற சங்கத்திலிருந்து செயலரும், அதற்கு அடுத்த சங்கத்திலிருந்து தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுவர்.


இப்பொழுது உங்களுக்குத் தெரிந்திருக்கும் இத் தேர்தலில் போட்டி என்பது எதில் என்று
அதாவது வெற்றி பெற்ற NFTE மற்றும் BSNLEU இவைகளில் யார் செயலர்? யார் தலைவர்? என்பதை தேர்வு செய்வதற்கான தேர்தலே அது.
செயலர் என்ற பொறுப்புதான் முக்கியமான பொறுப்பு.   அதாவது எதனையும் தீர்மானிக்கும் பொறுப்பு.    
இந்த பொறுப்புக்கு பொறுப்பானவரை தேர்ந்தெடுப்பதுதான் நமது கடமை.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட BSNLEU சங்கம் நமது துறைக்கு, தொழிலாளிக்கு ஏமாற்றத்தை, துரோகத்தை செய்திருக்கிறது என்பதை நாமறிவோம்.  ஏன்? அவர்கள் இத் துரோகத்தை நமக்கு மட்டுமல்ல அவர்களுக்கு வாக்களித்த தோழர்களுக்கும் செய்ய வேண்டும்?  காரணம் வேறு ஒன்றுமல்ல!  
பதவி ஆசையும், பணம் சம்பாதிக்கும் ஆசையும்தான்! இதோடு திறமையின்மையும், குப்தா, ஜெகன், சந்திரசேகர் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க தலைமையின்மையும் ஒரு காரணம். நமக்கு 40 % சம்பள உயர்வு பெற்றுத் தந்த இந்திரஜித்குப்தா போன்ற உயர்தர அரசியல் தலைவர்களும் அவர்களிடம் இல்லை!  எல்லாவற்றிற்கும் மேல் தவற்றை ஒப்புக்கொண்டு முன்னேறும் தன்மையும் இல்லை!
    இன்றைக்கு நம்மிடம் இருப்பது CL - EL -  GPF - சம்பளம் போன்றவைதான்.  இதில் GPF தாமதமாக்கப்பட்டுவிட்டது. சம்பளம் வருவது கேள்விக்குறி என்ற பய உணர்வையும் உருவாக்கிவிட்டார்கள். 
     நாம் பெற்றவைகள் எல்லாம் (போராடி) இன்று இல்லாமல் போனது யார் காலத்தில்? லேசாக அசைபோடுவோம்.
- 2004 வரை இத் துறை பெற்று வந்த லாபம் ஆண்டுக்கு 10000 கோடி  என்பது BSNLEU காலத்தில் இல்லாமல் போனது என்பது மட்டுமல்ல 9000 கோடி நட்டத்தில் வந்து விட்டது. (குதிரை குப்புற தள்ளியது மட்டுமல்ல குழியையும் பறித்த கதைதான்.) அதேபோல் நமது துறை கையிருப்பில் வைத்திருந்த 45000 கோடி ரூபாய் BSNLEU காலத்தில் காணாமலேயே  போய்விட்டதே! (இன்று கையிருப்பை கரைத்து வங்கியில் கடன் வாங்கும் அவல நிலை)
- 25 ஆண்டு காலம் அனுபவித்த போனஸ் போயே    
  போச்சு.
- SC-ST பதவி உயர்வுச் சலுகை அதுவும் அம்போ!
-ஆறு மாதத்தில் கிடைத்துவந்த கருணைப்பணி இன்று  
 எட்டாக்கனி!
- MRS என்னாச்சு?
- அதுவும் LTC  மாதிரி ஓடிப் போச்சு.
- 01-01-2007 முதல் நமது தொழிலாளிக்கு கிடைக்க வேண்டிய 78.2% DA  இணைப்பு கிடைத்ததா? இதனால் இதுநாள் வரை இழந்தது எவ்வளவு?  சொன்னால் வேதனை அதிகமாகும்!  வேறு வழியில்லை. சொல்லித்தான் ஆக வேண்டும்.   
ஒரு Gr. D ஊழியர் ஒரு மாதத்திற்கு ரூபாய் 2128 இழக்கிறார். 01-03-2013 வரை கிடைக்க வேண்டிய நிலுவை Rs. 1,59,600
ஒரு Gr. C ஊழியர் ஒரு மாதத்திற்கு ரூபாய் 2876 இழக்கிறார்.  01-03-2013 வரை கிடைக்க வேண்டிய நிலுவை Rs. 2,15,700.
சரி BSNLEU 2004 ல் கொடுத்த வாக்குறுதிகள்  நமக்கு மறந்து போய்விடுமா? 
    வாரம் 5 நாள் வேலை.
    பரீட்சை இல்லாமல் பதவி உயர்வு.
    5 பதவி உயர்வுகள் இவைகள் எல்லாம்  என்னாச்சு?  
இந்த சின்ன வாக்குறுதி பற்றி இப்போது பேச்சு மூச்சே இல்லை.  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 
NFTE யின் துணையோடு இவைகளை சாதிக்க முடியும் என்பதால்தான் இன்றைக்கு SNATTA சங்கமும், அண்ணா தொழிற்சங்கமும் நமக்கு ஆதரவளித்திருக்கிறார்கள்!
எனவேதான் தோழர்களே!   NFTE முதன்மைச் சங்கமாக வரவேண்டுமென்று உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்
BSNLEU, FNTO, TEPU உள்ளிட்ட அனைத்து சங்கத் தோழர்களும் மேற்கண்டவைகள் உண்மைதானா என்பதை உளமார சிந்தித்து NFTE யை ஆதரிக்க வேண்டுகிறோம். 
வாழ்வளித்த துறைக்கும்,  வாய்ப்பளித்த தொழிலாளிக்கும் நன்றி செலுத்த, இழந்ததை எல்லாம் மீட்க, இருக்கின்ற அனைத்தையும் காத்திட நீங்கள்  NFTE க்கு ஆதரவளிக்க  அன்புடன் வேண்டுகிறோம்!
நன்றி தோழர்களே!
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை கிளை.   

Wednesday, March 27, 2013

JAO  PART 2 
தேர்வு முடிவுகள்.

 1. S. மாயகிருஷ்ணன், TMO / PTK 
 2. S. கதிரவன்                   TSO / MNG 
 3. T.L. லதா                         SSO / TNJ 
 4. R. மங்களம்                   SSO / TNJ 
 5. K. நளினி                        SSO / TNJ 
 6. G. சாந்தி                          SSO / TNJ 
 7. R. விஜயா                       SSO / TNJ 
 8. V. கிருஷ்ணசாமி         STSO / TNJ  
 9. R. துரைராஜ்                   SSSO / TNJ  
10. R. சுந்தரமூர்த்தி           TSO / TNJ   
11. S. அரங்கராஜன்           TSO / TNJ     
12. P.S. மூர்த்தி                     STSO / TNJ   

தேர்வில் வென்ற 
தோழர்கள் மற்றும் தோழியர்களை 
அன்போடு வாழ்த்துகிறது 
தஞ்சை மாவட்டச் சங்கம்.

Friday, March 22, 2013


தேர்தல் பிரச்சார சிறப்புக் கூட்டம்
20-03-2013  - தஞ்சை 

    தஞ்சை CTMX வளாகத்தில் தேர்தல் பிரச்சார சிறப்புக் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.   250 க்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாக பங்கேற்றது அனைவருக்கும் உற்சாகத்தை தந்தது.   மகளிரும் அதிகளவில் பங்கேற்றனர் 
     கோரிக்கைகள்  முழங்க நமது மாநிலச் செயலரால்  சங்கக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு கூட்டம் துவங்கியது. 
     கூட்டத்திற்கு தோழர் பிரின்ஸ் தலைமையேற்றார்.    மாவட்டச் செயலர் தோழர் பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார்.  TMTCLU  மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன் அஞ்சலி உரையாற்றினார். மாநில துணைச் செயலர் தோழர். K. நடராஜன் துவக்கவுரையாற்றினார்.   மாநில துணைத் தலைவர் தோழர் திருச்சி மனோகரன் சிறப்புரையாற்றினார்.   மாநில மகளிர் அணி அமைப்பாளர்  லைலா பானுவும் உரையாற்றினார்.
    குடந்தை ஜெயபால் அவர்கள் எழுச்சியாக உரையாற்றி அனைவரையும் முருக்கேற்றினார்.   DOT காலத்திலிருந்து இன்றைய நிலைமை வரை செய்திகளை கோர்வையாக வழங்கினார்.   நமது வெற்றி ஒன்றுதான இழந்ததைப் பெறுவது மட்டுமல்ல, துறையையும் தொழிலாளியையும் காத்திடும் என்றார்.
          மாநிலச் செயலரின் சிறப்புரையும் முன்னெப்போதையும் விட வெகு சிறப்பாக அமைந்திருந்தது.  50ஆண்டுகால NFTE செயல்பாட்டில் ஏறுமுகம் தானே தவிர ஒரு சின்ன சறுக்கல் கூட இல்லாமல் செயல்பட்டதை விளக்கிப் பேசினார்.    BSNLEU வின் திறமையின்மையும், ஒன்றுபட்ட செயல்பாட்டில் அக்கரையின்மையும்தான் இன்றைக்கு இவ்வளவு நெருக்கடியை நம்மீது திணித்திருக்கிறது.   இவைகளை சரி செய்வது மட்டுமல்ல, பென்சனைக் காத்திடவும், நமது ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தில் மாற்றமும் கொண்டு வர வேண்டும் என்றார். 
      இலங்கை அரசுக்கு    ஆதரவாக செயல்படும் மத்திய அரசுக்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நமது மாவட்டம் சார்பாக 7500 ரூபாய் தேர்தல் நிதி வழங்கப்பட்டது. 
         இறுதியாக நமது மாவட்டப் பொருளர் தோழர் T. பக்கிரிசாமி அவர்களின் நன்றியுரையோடு கூட்டம் நிறைவுற்றது.      
படங்கள் கீழே:

Thursday, March 21, 2013

ஈழத் தமிழர் ஆதரவு  இயக்கம் 
     20-03-13 அன்று திருவாரூர் கிளையில் ஈழத் தமிழரை ஆதரித்து கூட்டம் நடைபெற்றது.   தோழர் சிங்காரம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு தோழர் R. குணசேகரன் முன்னிலை வகித்தார்.   100 க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.   மாவட்டச் சங்க பொறுப்பாளர்களும், கிளைச் சங்க பொறுப்பாளர்களும் கண்டன உரை நிகழ்த்தினர் தோழர் R. நாகராஜ் நன்றியுரை கூறினார்.  
 தகவல்: 
தோழர் A. சேகர், 
கிளைச்செயலர், திருவாரூர். 

Wednesday, March 20, 2013

SNATTA தோழர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.



NFTE-BSNL , SNATTA சங்கங்களுக்கிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று டெல்லியில் நடைபெற்ற  SNATTA மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வரும் 6வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் NFTE-BSNLக்கு வாக்களிப்பது என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டதின் அடிப்படையில் இரு சங்கங்களின் பொதுச்செயலர்களும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.


வாருங்கள் தோழர்களே!
கடந்த 8 ஆண்டுகால வேதனைகளை
துடைத்தெறிவோம்!
BSNLஐ வளமாக்குவோம்!!

Sunday, March 17, 2013

 தேர்தல் பிரசார சிறப்புக் கூட்டம் 

இடம்: 
தஞ்சை மேரிஸ் கார்னர் CTMX வளாகம் 
நாள்: 
21-03-2013 வியாழன் மாலை 4 மணி 

தோழர்கள் 
 பட்டாபிராமன்
தமிழ் மாநிலச் செயலர். 
 குடந்தை ஜெயபால் 
அசோகராஜன் மாநிலப் பொருளர்  ஆகியோர் 
சிறப்புரையாற்றுகிறார்கள். 

அனைவரும் வருக! 

Saturday, March 16, 2013

Add caption

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR