தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, February 13, 2015

சீர்குலைக்க முயன்ற நபரின் முயற்சி தோல்வி

சீர்குலைக்க முயன்ற நபரின் முயற்சி தோல்வி !
தோழர்களே !
இன்று சென்னையில் நடைபெற்ற மாநில செயற்குழு சிறப்பாகதுவங்கியது.  அதன் பின் , தோழர் பட்டாபி தன் அறிமுக உரையினை ஆற்றமுற்பட்ட போது, செயற்குழு உறுப்பினர்களில் சிலர் STRமாவட்டச்சங்கத்தினை செயற்குழுவில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது எனவாதிட்டனர். STR பகுதி பங்கேற்கும் நான்காவது மாநில செயற்குழு இதுஎன்பதை சுட்டிக்காட்டி  பிரச்சனைகள் இருப்பின் பின்னர் அதைப்பற்றிவிவாதிக்கலாம் என்று கூறி, தனது அறிமுக உரையில்,  இம் மாநிலசெயற்குழுவின் நோக்கத்தினை விளக்கினார்.
பணி ஓய்வு மற்றும் உடல்நிலையின் காரணமாக தனதுமாநிலத்தலைவர் பதவியினை ராஜினாமா செய்துள்ள தோழர் நூருல்லாமற்றும் விருப்பப்பணி ஓய்வு பெற்று தனது பதவியை ராஜினாமாசெய்துவிட்ட அமைப்புச்செயலர் தோழர் சங்கர் ஆகியோர்களின் பதவியைநிரப்புதல் மற்றும்  மார்ச்சு 17 வேலை நிறுத்தத்தின் முக்கியத்துவத்தினைவிளக்கிப் பேசினார்.
அப்போது சென்னை தொலைபேசியை சேர்ந்த சுமார் 30 குண்டர்கள், முனை மடிக்கப்படாத  நீண்ட ஆணிகளால் ரீப்பர் கட்டைகளில்அடிக்கப்பட்ட  தினக்காலண்டர் அட்டைகளில் பேருக்கு சிலகோரிக்கைகளை எழுதி கையில் எடுத்துக்கொண்டு, அரங்கினுள் நுழைந்துகோஷமிடத்துவங்கினர்.  சங்கத்தை சீர்குலைவு செய்யாதே (?!) என்றுகோஷமிட்டு செயற்குழுவை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டனர்.மாநிலச்செயலரும், தலைமைப்பொறுப்பேற்று நடத்திய தோழர் லட்சமும்எத்துணை முறை வேண்டியும், அமைதிகாக்க மறுத்தது மட்டுமின்றிஅரங்கினுள் இருந்த தோழர்களை மிரட்டத்துவங்கினர்.வெளியேறாவிட்டால் நடக்கும் அசம்பாவிதத்திற்கு தாங்கள் பொறுப்பல்லஎன்று கூறி கையில் வைத்திருந்த ரீப்பர் கட்டைகளை காட்டி பின் பகுதியில்அமர்ந்திருந்த தோழர்களை மிரட்டினர்.  
அந்த நேரத்தில்,  செயற்குழுவில் உரையாற்ற நமது தலைமைப்பொதுமேலாளர் அரங்கினுள் நுழைந்தார். எந்த பிரச்சினை இருந்தாலும்அதை தலைமைப் பொதுமேலாளரின் உரைக்குப்பின் பேசலாம் என்றுதலைவர்கள் கூறிய போதும் அதற்கு செவிமடுக்கசென்னைத்தொலைபேசியின் குண்டர்கள் மறுத்துவிட்டனர். கூச்சலும்அச்சுறுத்தலும் தொடர்ந்த வண்ணம் இருக்க பேசும் சூழல் இல்லாததை நம்தலைவர்களிடம் சுட்டிக்காட்டிவிட்டு நமது தலைமைப் பொது மேலாளர்சென்றுவிட்டார்.  அவர் வெளியில் செல்ல முற்பட்டபோது கடலூரில் இருந்துவந்த ஒரு குடிகாரன் அவரை உந்தித்தள்ள முற்பட்ட அநாகரீகமும் நடந்தது.தமிழ் மாநில சங்க பாரம்பரியத்தின் காவலாளிகள் என்று சென்ற மாதம்கூறிக்கொண்ட கும்பலின் வழிவந்தவர்கள் தான் CGM-ஐ பேச விடாமல்திருப்பிச்செல்லவைத்த அநாகரிக செயலுக்குச்சொந்தக்காரர்கள் !
செயற்குழு நடந்த அரங்கிற்கு எதிரே இருக்கும் மியூசியத்தின் உள்ளேமறைந்துகொண்டிருந்த ஒரு நபரே இந்த மொத்த அராஜகத்தையும் வழிநடத்தியதாக சென்னைத்தோழர்கள் சிலர் கூறினர். இத்தனைகளேபரத்திற்கும் அஞ்சாமல் தமிழ் மாநில AITUC செயலர் தோழர் மூர்த்திஉரையாற்றினார். அவர் உரையையும் குறுக்கீடு செய்ய தமிழ்மாநிலத்தைச்சேர்ந்த சிலர் முற்பட்டு, அவரிடமே தோற்று அரங்கை விட்டுவெளியேறினர்.
செயற்குழு நடந்த கட்டிடத்தின் மாடியில் ஒரு பள்ளி இயங்கி வருகிறதுஎன்றும் அதில் இன்று கெமிஸ்ட்ரி தேர்வு நடைபெறுகிறது என்பதால்மாணவர்களுக்கு சென்னைத்தொலைபேசி குண்டர்கள் எழுப்பிய கூச்சல்தொல்லையாய் இருக்கிறது என்றும் அப்பள்ளியின் தலைமையாசிரியைகூறியும் கூச்சலை நிறுத்த மறுத்துவிட்டனர் அந்த கற்பூர வாசனைஅறியாதவர்கள். 



பின்னர், குண்டர்கள் அரங்கின் மின் இணைப்பையும் துண்டித்தனர்.சேர்கள் வீசி உடைக்கப்பட்டன. ரீப்பர் கட்டைகளால் தாக்கப்பட்டதில்கும்பகோணம் தோழர் விஜய் உட்பட பலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.
செயற்குழு மேடையில் அமர்ந்திருந்த அந்த கும்பலின் ஏஜென்ட்,இத்தனை களேபரத்தையும் வாயில் எப்போதும் எதையோ மென்றபடிவேடிக்கை  பார்த்தது மட்டுமின்றி,  நான் அகில உலக நிர்வாகி என்னால்இந்த கிளை , மாவட்ட பிரச்சினைகளில் எல்லாம் தலையிட முடியாது என்றுமுத்துதிர்த்தது தான் பெரிய வேடிக்கை.
தேர்வெழுதும் மாணவர்களின் மீதுள்ள அக்கறையால்,தீர்மானங்களை அமைதியாக நிறைவேற்றி, புதிய மாநிலத்தலைவராகதோழர் லட்சத்தினையும், துணைத்தலைவராக தூத்துகுடி தோழர்பாலுவையும், அமைப்புச்செயலராக சேலம் தோழர் வெங்கட்ராமனையும்தேர்வு செய்து  முடிந்த உடன் செயற்குழு மதியம் 2 மணியுடன்முடித்துக்கொள்ளப்பட்டது.
சென்னைத்தொலைபேசி  குண்டர்கள் இன்று மாநில செயற்குழுவில்நடத்திய அத்துணை அராஜகங்களையும் வேலூர் மாவட்டச்சங்கம்வன்மையாக கண்டிக்கிறது. அடுத்த மாநில சங்கத்தின் செயற்குழுவைசீர்குலைக்கும் இந்த அநாகரீக செயலை செய்தவர்களையும் மாவட்டச்சங்கம்வன்மையாக கண்டிக்கிறது.


பின்னர்  தொடர்ந்த கூட்டத்தில்  மாவட்ட  செயலர்கள் , ,மாநில சங்க நிர்வாகிகள், தலைவர்கள்  ஆர்  கே , சேது , ஜெயபால் ,முத்தியாலு ,பட்டாபி  என் அனைவரும் மாலை  6 மணி  வரை  வேலை நிறுத்தம் ,மீத்தேன் எதிர்ப்பு  போராட்டம்,   பிரச்சனைகள்  என அனைத்தும்  விவாதிக்கப்பட்டது.

சாம்பல்களும்  ... 
பீனிக்ஸ் பறவையும் !



தேசிய கொடியையும் ... சங்ககொடியினையும் .. தோழியர்கள் உயர்த்திட 
தொடங்கியது செயற்குழு ...சிறப்பான ஏற்பாடுகளுடன் !
வரவேற்புரை , அஞ்சலியுரை முடிந்த நிமிடம் 
கோவை சுப்பராயன் ... சூப்பர் சுப்பரயனாய் 
தொடக்கி வைத்தார்  ...வித்திட்டார்... கலவர  காட்சிக்கு! 
உடன் துணை புரிந்தார் கோவை ராமகிருஷ்ணன். 
பண்பாய் ...பக்குவமாய் .. பதில் தந்தார்... மாநில செயலர் 
எதிர் வினையாளர்க்கு !
ஏற்க மறுத்தனர் முடுக்கிவிடபட்ட எந்திரன்கள் !

மீண்டும் ... கோரிக்கை விடுத்தார் ... பட்டியலிட்டார்  மாநில செயலர் !
நம் முன் உள்ள  கடமைகளை ...
டெல்லி  பேரணி - மார்ச் 17 வேலை நிறுத்தம் குறித்து 
 செயற்குழு திட்டமிட்டு முடித்ததும் ...
தொடுத்திடுங்கள் கேள்வி கணைகளையென !
உருக்கமாய்  கேட்டு ...உறுதியும் அளித்தார் !
ஏற்க மறுத்தனர் அந்த 3 பேர் !

அமைப்பு விதி குறித்த சவடாலுக்கு 
தலைவர் லட்சம் ... கோடி ரூபாய் தகுதி  கேள்வியொன்றை 
தொடுத்தார் ...

விவாதம் ... தொடர்ந்த தருணம் 
திடுமென ...கோஷத்தோடு .. உள் நுழைந்தனர் 
சென்னை தொலைபேசி தோழர்கள் !
தமிழ் மாநில செயற்குழுவில் ... சென்னை தொலைபேசி 
தோழர்கள் அத்துமீறிய நுழைவு 
நியாயமாவென ? நயமாய் கேட்டார் மாநில செயலர் !
பதிலேதுமில்லை ...
மியூசியத்து  மந்திரத்தால் கட்டுண்டவர்களிடம் !!!

அப்பொழுது  .. தான் அந்த செய்தி வந்தது 
CGM  செயற்குழுவை வாழ்த்திட 
செயற்குழு அரங்கு  நெருங்கிவிட்டாரென !
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராது ...
 கோரிக்கை வைத்தார் ...மாநில செயலர் 
" அப்படியே ... அமருங்கள் ... தோழர்களே 
CGM  உரை நிகழ்த்தி சென்றவுடன் ... தொடர்ந்திடுங்கள் 
உங்கள் முழக்கத்தையென !
சென்னை தோழர்கள் ...செவிமடுக்கவில்லை ... கடுகளவும் !

கூச்சல் ... தவிருங்கள் ..தோழர்களே !
மேற்புறம் மாற்றுதிறனாளி  கல்வி கூடம் ... +2 தேர்வு தயாரிப்பு  வேறு 
அமைதியான கத்தோலிக்க  பாரம்பரிய சேவை மையம் 
சூழல் உணர்ந்து அமைதி காத்திடுகவென  ...மன்றாடினார்  முரளி 
உதாசீனபடுத்தி ... தொடர்ந்தார்கள் 
மியூசியத்து ... மியூசிக்கை  !
அத்துமீறல் தொடர்ந்தது பாஞ்சாலி சேலையென !

CGM  வந்தார் .. பேசிட அனுமதிக்கவில்லை மு(ட)ழக்கவாதிகள் !
மண்டபத்து பொறுப்பாளர் ...மன்றாடினார் அமைதி காக்க 
அவர்களே ...வேறு வழியின்றி  அழைத்தனர்  காவல்துறையை !
நமது தோழர்களும் ... சேர்ந்து கூட்டத்தை வெளி தள்ளினோம் 
வெளியேற்றபட்டனர் ... சென்னை தொலைபேசி தோழர்கள் !
அரங்கின் வாசலில் தொடர்ந்தனர் ...
செத்து போன கல்லூரியின் ... இத்துப் போன ... கட்டளையை  
சென்னை தொலைபேசி தோழர்கள் !
மாற்றுதிறனாளி மாணவசெல்வங்களின் 
தேர்வு கண் முன் நிற்க ...மனம் மரித்து போனவர் அல்ல நாமென !
தீர்மானம் இயற்றி ... முடித்து கொண்டோம் செயற்குழுவை !

இத்தனையும் ... அரங்கேறிய பொழுது 
செயற்குழு மேடையில் ...வலது ஓரத்தில் ... ஓர் உருவம் 
அமைதியாய் ...சலனமில்லாது ...வேடிக்கை பார்த்தது ???

ஊர் வந்து சொன்னோம் ... ஓர் தோழனிடம் 
அவரை ... அந்த மௌனம்  காத்த   தோழனை பற்றி ...
நெஞ்சில் சுருக்கென தைக்க சொன்னான் அந்த தோழன் ...
" ஜபல்பூர்  மாநாட்டில் பனியன் விற்று கொண்டிருந்தவருக்கு 
சம்மேளன செயலர் பதவி தந்த ... உங்களுக்கு 
இதுவும் வேண்டும் ... இன்னமும் வேண்டுமென !!!
மொத்தத்தில் ...
செயற்குழுவை முடக்க நினைத்தவர்கள் ... முடங்கி போனார்கள் 
முடக்கி விட்டோம் என கொக்கரிக்கும் 
அருங்காட்சியக செயல்வீரர்களுக்கு 
தமிழ் மாநிலம் வீறுகொண்ட லட்சிய பயணத்தின் 
வரலாறுக்கு சொந்தமானது ...
நண்டுகளின் நாட்டியமும் ..ஊளைகளும் ...
எங்கள்  கவனம் சிதைக்காது !
சிறிய நூல்கண்டா .. சிறைபடுத்துமென ?
எடுத்துரைத்த செயற்குழு .
வாழ்க !வெல்க !தொடர்க !

Thursday, December 25, 2014

சாதி தீண்டாமையை சுட்டுப் பொசுக்குவோம் !
உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம் !

  • விடிந்த பின்னர் தான் ஏர் கட்ட வேண்டும் !
  • சூரிய உதயத்திற்கு பின்னர் தான் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் !
  • கரை ஏறித்தான் பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டும்!
  • வேலைக்கேற்ற கூலி வேண்டும் !
  • அனைவரும் விவசாய சங்கத்தில் சேரவேண்டும் !

1968-ம் வருடம், டிசம்பர் 25! தமிழக வரலாற்றில் கருப்பு நாள் !

கீழத்தஞ்சையில் (இன்றைய நாகை மாவட்டம்) கீழ்வெண்மணி என்கிற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட (தலித்) சாதியைச் சேர்ந்த 44 அப்பாவி கூலி ஏழை விவசாயிகளை ஒரே குடிசையில் பூட்டி வைத்து கதறக்கதறத் தீயிட்டுப் பொசுக்கினர், இரிஞ்சூர் பண்ணையார் கோபால கிருஷ்ண (நாயுடு) தலைமையிலான நிலப்பிரபுத்துவ கொடுங்கோலர்கள்.
20 பெண்கள், 19 சிறுவர்கள், 5 ஆண்கள் எரித்து கரிக்கட்டைகளாக்கப்பட்டனர். சாதி-தீண்டாமையோடு, பண்ணையடிமைகள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற ஆதிக்கத் திமிரும் இந்த படுகொலையில் அடங்கியிருந்தது.
இதைச் செய்த கொலைகாரர்கள் அனைவரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்தது , சென்னை உயர் (அ)நீதிமன்றம். ‘காரோட்டுகின்ற கைகள் கொலைசெய்யாது; பணக்காரர்கள் குற்றம் செய்யமாட்டார்கள்’ என வியாக்கியானம் சொன்னது, நீதிமன்றம்.
நோக்கியா
நோக்கியா செல்போன் கம்பெனி மூடப்பட்ட போது வேலை பறிக்கப்பட்ட 45,000 தொழிலாளர்களில் யார் எந்த சாதி என்பது தெரியாது.
பொசுக்கப்பட்ட அந்த ஏழை மக்கள் செய்த ‘குற்றம்’ என்ன?
  • தலித்துகளாக் பிறந்தது முதல் குற்றம்.
  • கூலி உயர்வு கேட்டும், பண்ணைக் கொடுமைகளுக்கெதிராகவும் போராடத் துணிந்தது இரண்டாவது குற்றம்.
  • சாதி பேதங்களைக் கடந்து வர்க்கக் கண்ணோட்டத்தை ஊட்டி வளர்த்த செங்கொடி இயக்கத்தில் பிணைத்துக் கொண்டது எல்லாவற்றையும் விட பெருங்குற்றம். செங்கொடி இயக்கத்தில் இணைத்துக் கொண்டதால் சுயமரியாதையும், உரிமை உணர்வும் பெற்றார்கள். அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கவும் செய்தார்கள்.
வெண்மணியிலிருந்து இந்தப் படுகொலைகள் துவங்கவில்லை. வெண்மணிக்குப் பின்னர் இவை முடிந்துவிடவும் இல்லை. விழுப்புரம், ஊஞ்சானை, மேலவளவு என்று சமகாலம் வரை தொடர்ந்து நடக்கிறது. சாதி வெறியர்களுக்கு ஆதரவாக அரசு எந்திரம் செயல்பட்டு வருவதை மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை, பரமக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
பெரியார் பிறந்த பூமி என்றெல்லாம் பெருமை பேசுகின்ற தமிழகம் மட்டுமின்றி, நாடுமுழுவதிலும் சாதி-தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது.
“என்ன தோழரே! இப்பொழுதெல்லாம் சாதி – தீண்டாமையை யார் பார்க்கின்றனர்?” என்று ‘உலகறிந்த’ பலரும் நம்மை பார்த்து கேட்கின்றனர். ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய மனித வளம் குறித்த ஆய்வானது , கிராமப்புறங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பதை அம்பலப்படுத்துகிறது. ஒத்துக்கொள்வதாக தெரிவிக்கிறது. நகர்ப்புறத்திலோ ஐந்தில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிப்பதாக மேற்படி ஆய்வு தெரிவிக்கிறது. சாதி- தீண்டாமையானது பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது.
எத்தனை இழிவுகள்! எத்தனைக் கொடுமைகள் !
அருந்ததி ராய்
அருந்ததி ராய் : தேசிய குற்றப்பதிவுத் துறையில் குறிப்புகளினப்டி, ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் தலித் ஒருவருக்கு எதிராக தலித்தல்லாதவரால் குற்றமிழைக்கப்படுகிறது;
புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் இந்திய இழிவு என்ற கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார்.
தேசிய குற்றப்பதிவுத் துறையில் குறிப்புகளினப்டி, ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் தலித் ஒருவருக்கு எதிராக தலித்தல்லாதவரால் குற்றமிழைக்கப்படுகிறது;
ஒவ்வொரு நாளும், நான்கு தீண்டப்படாத பெண்கள் தீண்டப்படுவோரால் கற்பழிக்கப்படுகிறார்கள்;
ஒவ்வொரு வாரமும் 13 தலித்துகள் கொல்லப்படுகிறாரக்ள், 6 தலித்துகள் கடத்தப்படுகிறார்கள்.
2012-இல் மட்டும் அதாவது தில்லியில் 23 அகவை நிரம்பிய பெண் கூட்டமாக பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்த ஆண்டில் மட்டும், 1574 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். (தலித்துகளுக்கு எதிரான கற்பழிப்புகளில் அல்லது ஏனைய குற்றங்களில் 10 விழுக்காடு மட்டுமே பதிவு செய்யப்படுகிறது என்பது பட்டறிவு), 651 தலித்துகள் கொல்லப்பட்டனர்.
இந்தக் கணக்கில் அடங்குபவை கற்பழிப்புகளும், சித்திரவதைகளும் மட்டுமே.  உடையவிழ்த்து அம்மண ஊர்வலம் நடத்துதல், மலந்தின்னச் செய்தல், நில அபகரிப்பு, சமூக ஒதுக்கல், குடிநீர் கிடைக்கவிடாது தடுத்தல் ஆகிய்வை அடங்குவதில்லை.
மசாபி தலித் சீக்கியர் ஒருவர் தன் மகளைக் கூட்டாக கற்பழித்தோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யத் துணிந்ததற்காக 2005ல் அவரது இரு கைகளும் ஒரு காலும் துண்டிக்கப்ப்ட்ட செய்தி இந்த புள்ளிவிவரங்களில் அடங்கவில்லை என்கிறார் பஞ்சாபை சேர்ந்த பந்த் சிங்.
வெண்மணி தியாகிகள் தினம்

Saturday, December 20, 2014

ERP செயலாக்கம் 
ERP GO - LIVE 

தமிழகத்தில் 19/12/2014 நண்பகல் 12.00 முதல் ERP  திட்டம் செயலாக்கத்திற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக CGM காணொளி மூலம் ERP திட்டசெயலாக்கத்தைத் துவக்கி வைத்தார். ERP திட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் DELOITTEE  குழு அறிக்கை அமலாக்கம் நடைமுறைப்படுத்தப்படலாம். 
எனவே காணொளிகள் மார்கழி மாத பஜனை போல் 
தொடர்ந்து  தமிழகத்தில்  நடைபெறும். 

ERP செயலாக்கத்தை தொடர்ந்து பல நாட்கள் தூக்கம் மறந்த 
நமது அதிகாரிகள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். 

ஆனால் GPF,விழாக்காலப்பணம்,டிசம்பர் மாத சம்பளம்,
ஒப்பந்த ஊழியரின் நவம்பர் மாத சம்பளம்,
ஓய்வு பெற்ற தோழர்களின் விடுப்புச்சம்பளம்
 ஆகியவற்றை நினைத்து நமது தோழர்கள் 
தூக்கம் இழக்க ஆரம்பித்துள்ளனர்.

 ERP திட்டம் GO-LIVE ஆனதற்கு நமது வாழ்த்துக்கள்.
அதே நேரம்  LIFE - GOING  ஊழியர்களின் பட்டுவாடாக்களும் விரைவில் 
GO-LIVE ஆக வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்

First Published : 20 December 2014 12:51 AM IST
அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி, தஞ்சாவூர் அருகேயுள்ள குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள 19 கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம், அகவிலைப்படி வழங்க வேண்டும். சர்க்கரை ஆலைகளில் ஒரே மாதிரியான பணி செய்வோருக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும்.
ராஜீவ் ரஞ்சன் குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் டிச. 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கூட்டுறவு, பொதுத் துறை சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு 25 சத ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனத் தமிழக அரசு வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், தமிழக அரசின் இந்தத அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட வலியுறுத்தியும் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இதில் வெள்ளிக்கிழமை குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன் கஞ்சித் தொட்டியைத் திறந்து வைத்து, தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். பலத்த மழை பெய்த நிலையிலும் இப்போராட்டத்தில் ஏராளமானோர் குடை பிடித்தபடி கலந்து கொண்டனர்.

Friday, December 19, 2014

யூனியன் வங்கி 
புரிந்துணர்வு நீட்டிப்பு 
UNION BANK OF INDIA MOU RENEWAL 

BSNL ஊழியர்கள்  கடன் பெறுவதற்காக  
யூனியன் வங்கியுடன் போடப்பட்ட 
புரிந்துணர்வு ஒப்பந்தம் 
03/11/2014 தேதியுடன் முடிவடைந்திருந்தது. 
தற்போது மீண்டும் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிலவரிச் செய்திகள்...

தற்போது BSNL ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடாக LIC நிறுவனம் மூலம் GSLI எனப்படும் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கான ஆயுள் காப்பீட்டு முறை அமுலில் உள்ளது. தற்போது இந்த திட்டம் 31/07/2014 வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அமுல்படுத்தப்படும் எனவும்,  
01/08/2014 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பொருந்தாது எனவும் 
LIC கூறியுள்ளது.  IRDA எனப்படும்   ஆயுள் காப்பீட்டு
 ஒழுங்கு முறை ஆணையத்தின் முடிவிற்கிணங்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

01/08/2014க்குப்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு 
புதிய திட்டம் அமுல்படுத்தப்படும்.
===============================================================
BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் பதவிகளை நிரப்ப வேண்டும் என்பது ஊழியர்கள் கூட்டமைப்பின் கோரிக்கை. அதன் அடிப்படையில் DIRECTOR (EB) பதவிக்கு திரு.N.K.மேத்தா அவர்களும், DIRECTOR(FINANACE ) பதவிக்கு திருமதி.யோஜனாதாஸ் அவர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 
==============================================================
சென்ற 2013-14 நிதியாண்டில் BSNLக்கு 7000 கோடி நட்டம் ஏற்பட்டாலும் மூன்று மாநிலங்கள் மட்டும் லாபம் ஈட்டியுள்ளன. 
கேரளா 397 கோடியும், 
ஜம்முகாஷ்மீர் 9.37 கோடியும், 
ஒரிசா 5.16 கோடியும் 
லாபம் காட்டியுள்ளதாக இலாக்கா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
==============================================================
10/12/2014 அன்று நடைபெற்ற பதவி பெயர் மாற்றக்குழுக் கூட்டத்தில் முழுமையான முடிவுகள் எடுக்கப்படவில்லை. 
TTA பதவியை JUNIOR ENGINEER என அழைப்பது பற்றியும் 
SR.TOA பதவியை TELECOM ASSOCIATE/ SUERINTENDENT 
என அழைப்பது பற்றியும் 
தங்களுக்குள் பேசி பின் முடிவு சொல்வதாக
 நிர்வாகத்தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

போனஸ் குழுக்கூட்டத்திலும் சாதகமான முடிவு எட்டப்படவில்லை. CDMA சேவை போனசிற்கு  கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது 
என்பது மட்டுமே சாதகமான அம்சம். 

JTO புதிய ஆளெடுப்பு விதிகளுக்கான ஒப்புதல் 
வழக்கம்போல கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

மொத்தத்தில் ஊழியர்கள் பிரச்சினை தீர்வில்..
BSNL நிர்வாகத்தின் வழக்கமான 
கழுவுதலில் நழுவுதல் என்னும் நிலை தொடருகின்றது. 
செய்திகள் 

 மார்ச் 2015க்குள் மாநில அலுவலகத்திற்கு அனுப்பிடுமாறு 
மாநிலச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 
மார்ச் 2015க்குப்பின் வரும் விண்ணப்பங்கள் மார்ச் 2016ல்தான் பரிசீலிக்கப்படும் என கூறப்படுகின்றது.
 எனவே தோழர்கள் கூடுதல் கவனம் செலுத்தவும்.

பரிவு அடிப்படை பணிக்கு விண்ணப்பம் அனுப்புவது சம்பந்தமாக 
டெல்லி தலைமையகம் 15/12/2014 அன்று 
கீழ்வரும் விளக்கங்களை அளித்துள்ளது. 
  • ஏற்கனவே டெல்லி தலைமையகத்தால் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
  • 30/09/2014 தேதி வரை 55ம் அதற்கு மேலும் மதிப்பெண் பெபரிவு  அடிப்படை வேலைக்கான விண்ணப்பங்களை
    ற்றிருந்த விண்ணப்பங்கள் மாநில மட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
  • நீதிமன்றம்  மூலம் உத்திரவு பெறப்பட்ட விண்ணப்பங்களும், நிர்வாக கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரப்பட்ட,  பரிதாபமான   குடும்ப சூழல் உள்ள விண்ணப்பங்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
  •  ஊழியர் இறந்தபோது உள்ள குடும்ப சூழல் கணக்கில் கொள்ளப்பட்டு மறு பரிசீலனை என்பது மேற்கொள்ளப்படும்.
மாற்றலுக்கு உள்ளான பல அதிகாரிகளும் ஊழியர்களும் டெல்லி தலைமையகத்திற்கு படையெடுத்து அரசியல் செல்வாக்கு மூலம் மாற்றலை ரத்து செய்ய முயற்சி செய்கின்றனர். 

இனிமேல் யாரும் அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் மீது 
BSNL நன்னடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லித்தலைமையகம் 16/12/2014 அன்று எச்சரித்துள்ளது. 
ஆனால் அதே தேதியில் பல அதிகாரிகளுக்கு மாற்றலை 
மறு பரிசீலனை செய்தும் நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 
BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு CMD இன்னும் நியமிக்கப்படவில்லை. இம்மாத இறுதிக்குள் தனது பரிந்துரையை DOT அரசிற்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 
இந்நிலையில் தற்போதுள்ள தற்காலிக CMDகளுக்கு இரண்டு மாதம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
22/12/2014 அன்று 30 அம்சக்கோரிக்கைகள் மீது நிர்வாகத்துடன் JAC ஊழியர் கூட்டமைப்பு பேச்சு வார்த்தை நடத்துகின்றது.

23/12/2014 அன்று  டெல்லியில்   அனைத்து சங்கத்தலைவர்களுக்கும் 
ERP பற்றி விரிவான விளக்கவுரை நிர்வாகத்தால் வழங்கப்படுகின்றது. மாவட்ட மட்டங்களிலும்  ஊழியர்களுக்கும், தொழிற்சங்க தலைவர்களுக்கும் ERP பற்றிய உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும்

Sunday, November 30, 2014

நன்றிகள்


நமது JAC அறை கூவலை ஏற்று 27-11- 2014 அன்று 

நடைபெற்ற ஒருநாள்வேலை நிறுத்தபோராட்டத்தில்

தஞ்சை மாவட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற செய்த 

அனைத்துதோழர்கள் மற்றும் தோழியர்களுக்கும் நமது 

நெஞ்சார்ந்த நன்றியும்... பாராட்டும்... வாழ்த்துக்களும்...

நமது மாவட்டத்தில் 285 பேர் strike ,247 பேர் leave 

181 பேர் duty தமிழகத்தில் 75% ஊழியர்களும்... 

வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். அனைத்து 

தோழர்களுக்கும் போராட்டக்குழுசார்பாக வாழ்த்துக்களை 

தெரிவித்துக்கொள்கிறோம்,,,,,,,,

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR