தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, January 10, 2019


நமது மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர் 2018 க்கான
2 மாத சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை
ஏற்கனவே, நாம் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை 
மன்னையில் மையப்படுத்தி நடத்தி இருக்கின்றோம்.
இதற்கிடையில் இன்று மாலை 5000 ரூபாய் சம்பளம் போட்டுள்ளதாகவும், அதிலும் 350 ரூபாய் 
பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம்.
இது என்ன அணுகுமுறை என்று நமக்குத் தெரியவில்லை!

வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மன்னார்குடி,
முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணி 

பகுதிகள் கஜாப் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட 
பகுதிகள் மட்டுமல்ல! கேபிள் பழுதுகள் மீட்புப் 
பணியிலும் சிரமப்படும் பகுதிகள்.

இவற்றையெல்லாம் நிர்வாகமும்ஒப்பந்ததாரரும் 
உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இதை உணர்த்திடத்தான் இந்தப் போராட்டம்.

நமது கோரிக்கைகள்:
• 2 மாத சம்பளத்தையும் முழுமை
யாகத் தர வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் 7 ம்
தேதிக்குள் சம்பளம் 

போடப்பட வேண்டும்.
காரணமில்லாமல்,
அறிவிப்பில்லாமல் 
முன்னதாக பிடித்தம் ஏதும் செய்யக் கூடாது.
போனஸ் நிலுவைத்
தொகையினை உடனடியாக
அளித்திட வேண்டும்.

தோழர்கள் திரளாகப் பங்கேற்றல் அவசியம்
வாருங்கள் தோழர்களேகளத்தில் சந்திப்போம்!!
வெற்றி காண்போம்!!

தோழமை வாழ்த்துக்களுடன்,

கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர், NFTE.


டி. கலைச்செல்வன்,
மாவட்டச் செயலர், TMTCLU.


சி. நாடிமுத்து,
மாவட்டத் தலைவர், TMTCLU.


ஆர்.கே. ராஜேந்திரன்,
மாவட்டப் பொருளர், TMTCLU.

Saturday, January 5, 2019

1968 போராட்ட நாயகன் 
தோழர். D. ஞானையா அவர்களின் 
99 வது பிறந்த தினம்.
07-01-2019

தபால் தந்தி, ரயில்வே, பாதுகாப்பு துறைகள் 
இணைந்து  வேலை நிறுத்தம் 
 நடத்தியநாள் 1968 செப்.19.

2,80,000 பேர் பங்கேற்ற போராட்டம். 
1,40,000 பேர் நமது டெலிகாம் பகுதி. 
கைதானவர்களில் 40 சதவீதம் நாம்தான்.

பிகானிர், பதான்கோட், மரியாணி, பொங்கைகான் 
ஆகியவிடங்களில் காவல் துறையினரின் 
துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான
 ரயில்வே தொழிலாளிகள்   9 பேர்.

 தோழர். ஞானையா 1968 செப்.18 அன்று 
முன்கூட்டியே கைது செய்யப்பட்டு 
சிறையில் அடைக்கப்பட்டார்.

திகார் சிறையிலிருந்து கொண்டே 
விதிப்படி வேலை போராட்டத்தை  
திட்டமிட்டு நடத்தினார்.

தொழிலாளர் சக்தியை 
அரசுக்கு உணர்த்திய போராட்டம்.
தொழிற்சங்கங்களை 
ஒன்றிணைத்து நடத்திய போராட்டம்.

அப்பேர்ப்பட்ட 1968 போராட்ட நாயகன் 
தோழர். ஞானையாவை நினைவு கொண்டு 
அவரது 99 வைத்து பிறந்த நாளை 
கிளைகள் தோறும் கொண்டாடுங்கள்!
இயக்கத்தின் வளர்ச்சிக்கு உதவிய
இணையற்ற தலைவன் ஞானையாவின் 
வரலாற்றை எடுத்துச் சொல்லுங்கள்!

வாழ்த்துக்களுடன்,
கே. கிள்ளிவளவன்,
தஞ்சை மாவட்டச் செயலர், NFTE

06-01-2019
இயக்கத்தை முன்னிறுத்த
குப்தாவை எடுத்துச் செல்வோம்!
ஆறாம் ஆண்டு நினைவு நாள் 
============================
          91  வயதில் மறைந்த தலைவர் குப்தா நமக்காக மட்டுமே
  70 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்!   
     அவரால் நாம் அடைந்த பலன்கள் சொல்லி மாளாது. 
 வாழுகின்ற வாழ்வே அவரால் எனலாம்.
      தொலைத்  தொடர்பு குடும்பத்தில் அவரால்
 பயனடையாத சங்கமோ, நபரோ இருக்க முடியாது. 
===========================================      
அத்தக்கூலி என்று சொல்லி 
அவமானம் செய்தவரை 
ஓரங்கட்டி துரத்தியே
ஒதுக்கிய சங்கம் NFTE ! 

அதிகாரியின் வால்பிடித்து 
அற்பனுக்கெல்லாம் காசு அழுது 
வேலை பெற்ற கொடுமையினை 
வேரறுத்த NFTE !

நிரந்தரங்கள் என்பதெல்லாம் 
நிச்சயமாய் கனவுதான் 
என்று சொன்ன வீணருக்கும் 
 வாழ்வு தந்தது NFTE !

நான்காம் பிரிவு ஊழியரை 
மூன்றாம் பிரிவு ஊழியராக்கி 
அதிகாரியாய் மேலும் உயர்த்தி 
அழகு பார்த்த NFTE !

NFTE என்றாலே 

தொலைத்தொடர்பு என்றாலே 
தெரிவதெல்லாம் எங்கள் தலைவன் 
ஓம் பிரகாஷ் குப்தாவே!

இல்லாத போனஸை 

இருக்கு உனக்கு என்று சொல்லி 
வாங்கித் தந்த குப்தாவை 
வணங்கி நாம் போற்றுவோம்.

ஒன்பது பெரும் சங்கங்களை 

NFPTE என்ற பெயரில் 
ஒன்றாக இணைத்துக்கட்டி 
ஓராயிரம் சலுகைகளை 
பெற்றுத் தந்த பெருந்தலைவன் 
ஓ.பி. குப்தா வாழ்கவே!

ஒய்வு பெற்ற ஊழியரின் 
ஒவ்வொரு பிடி சோற்றுக்குள்ளும் 
உப்புபோல கரைந்திருக்கும் 
O.P. குப்தா பென்சன் திட்டம்.

இன்றும் எங்கள் வாழ்விலே 
இனிமை சேர்த்த தலைவனை 
ஓம் பிரகாஷ் குப்தாவை 
 நன்றியோடு வணங்குவோம்! 
     
           குப்தாவின் சிந்தனையை, எதிர்பார்ப்பை நனவாக்க உறுதியெடுங்கள் தோழர்களே!
அப்போதுதான் அவர்  ஆன்மா சாந்தியடையும். 

தோழமையுடன்,
கே. கிள்ளிவளவன்.

Thursday, January 3, 2019

ஜனவரி 8,9 இரண்டு நாள் 
பொது வேலை நிறுத்தம்
==================================
வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் 
==================================
04-01-2019 மாலை 5 மணி 
தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி இணைப்பகம்.

விளக்கவுரை:
தோழர். S. பழனியப்பன் அவர்கள்.
அகில இந்திய துணைத் தலைவர், NFTE, திருச்சி.

தோழர். K. சக்திவேல் அவர்கள்,
மாநில துணைச் செயலர், BSNLEU, கோவை 

தோழர். ரவி அவர்கள்,
மாநிலச் செயலர், TEPU, சென்னை.

தோழர்கள் தவறாது பங்கேற்கவும்.

பொதுமக்களை, தொழிலை, தொழிலாளர்களை, 
அரசு நிர்வாகத்தை, வஞ்சிக்கின்ற 
மத்திய அரசாங்கத்தை கண்டித்தும் 

பொதுத் துறைகளை, வங்கி, இன்சூரன்ஸ், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் கொள்கையைக் கண்டித்தும் நடத்துகின்ற போராட்டம்.

விளக்கம் கேட்போம்!
வேலை நிறுத்தத்தை 
வெற்றிகரமாக்குவோம்!!

தோழமையுடன்,
கே. கிள்ளிவளவன்,
தஞ்சை மாவட்டச் செயலர்.

Wednesday, January 2, 2019


2019 ஜனவரி 8, 9  2 நாள் 
பொது வேலைநிறுத்தம் 
மற்றும் மறியல் (ஜனவரி 9)

அனைத்து மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் கூட்டறிக்கை!
===========================================
மத்திய அரசின் மக்கள் விரோத, 
தொழிலாளர் விரோத, 
தேச விரோதக் 
கொள்கைகளைக் கண்டித்து ஜனவரி 8, 9 
இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம் செய்ய அகில இந்திய தொழிலார்கள் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் அமர்த்துவதை ஒழித்தல், 
தொழிலாளர் சட்டங்களை முதலாளிகளுக்கு சாதகமாகத்  
திருத்துவதைக் கைவிடுதல், 
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், 
பணிக்கொடையை அதிகரித்தல், 
பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை 
      தனியாருக்கு விற்பதை நிறுத்துதல் 
உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை 
நிறுத்தம் நடைபெறவுள்ளது.

அகில இந்திய அளவில் நடைபெறவுள்ள இந்த இரண்டு நாள் 
பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்பதோடு 
கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து 
கீழ்க்கண்ட ஊழியர் சங்கங்களோடு நாமும் இணைந்து 
வேலை நிறுத்தம் செய்கின்றோம்! 
24-12-18 அன்று கீழ்கண்ட தலைவர்கள் கையொப்பமிட்டு 
வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

கோரிக்கைகள்:
1
விலைவாசி உயர்வுக்கு உடனடித் தீர்வு.
பொது விநியோக முறையை ஒழுங்குபடுத்துதல்.
அபாயகரமான மற்றும் நஷ்டம் ஏற்படுத்தக் கூடிய விவசாய 
விளைபொருட்கள்/மூலப்பொருட்கள் விற்பனையைத் தடுத்தல்.

2
உறுதியான நிலைப்பாட்டின் மூலம் 
வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல்.

3
அடிப்படைத்  தொழிலாளர் சட்டங்களை, எந்தவித தடையும்இல்லாமல்  கடுமையாக அமுல்படுத்துதல்.

4
அனைத்து ஊழியர்களுக்கும் நிலையான சமூகப் பாதுகாப்பு.

5
வரையறுக்கப்பட்ட ஊதிய விதிகளின்படி குறைந்தபட்ச அடிப்படை 
மாத ஊதியம் ரூபாய் 18000 க்கு குறையாமல் வழங்குதல்.

6
அனைத்து உழைக்கும் வர்க்கத்திற்கும் உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், 
மாதம் ரூபாய் 3000 க்கு குறைவில்லாமல் என்பதை உறுதிப்படுத்தல்.

7
மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில், 
நீண்ட கால திட்ட முதலீடுகளை திரும்பப் பெறுதல்.

8
ஒப்பந்த முறை சேவையை நீண்டகால, 
நிலையான வேலைகளுக்கு நிறுத்தி வைத்தல் 
மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கல்.

9
போனஸ், வைப்பு நிதியில்  உச்சவரம்பை நீக்கு.
பணிக்கொடை அளவை உயர்வு.


10
தொழிற்சங்க அங்கீகாரம் பெற அனுமதி கேட்டு 
கடிதம் வழங்கிய  45 நாட்களுக்குள் 
இந்திய தொழிலாளர் சட்ட விதிகளின்படி 
கட்டாயம் பதிவு பண்ணுதல்.

11
தொழிலாளர் நல சட்ட திருத்தங்கள் 
திருத்தப்படுவதை  எதிர்த்தல்.

12
ரெயில்வே, இன்சூரன்ஸ் மற்றும் பாதுகாப்பு துறைகளில் 
அந்நிய முதலீடுகளை தடுத்து நிறுத்துதல்.

                  இவண்,
         C. சிங்             P. அபிமன்யு              சுரேஷ்குமார்             V. சுப்புராமன்
           NFTE                    BSNLEU                          BSNLMS                             TEPU
    அகில இந்திய பொதுச் செயலர்கள் 
                               
                                                            

Tuesday, January 1, 2019

NFTE -  TMTCLU
தஞ்சாவூர் மாவட்டச் சங்கம் 
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! 
==================================================
நாள்: 
02-01-2019 புதன் மாலை 4 மணி
மன்னார்குடி -  தொலைபேசியக வளாகம்.
===================================================
கோரிக்கை:
கடந்த 2 மாதமாக ஒப்பந்தத் தொழிலாளிக்கு சம்பளம் 
வழங்கப்படாததைக் கண்டித்தும்,
ஏஜென்சிகள் தர வேண்டிய போனஸ் 
நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும்,
உடனடியாக அவர்களுக்கு சம்பளம் கிடைத்திட, 
மாவட்ட நிர்வாகம் இதில் தீவிரமாக தலையிடக் கோரியும்  
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மாவட்டச் சங்கப் பொறுப்பாளர்கள், 
கிளைச் சங்கப் பொறுப்பாளர்கள், 
தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம்!

தோண்டித் தோண்டி சரி செய்யப்படும் கேபிள்கள்.
மீண்டும், மீண்டும் வெட்டப்படும் அவலம்.
இந்த மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளான 
வேதாரண்யம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, 
மன்னார்குடி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் 
பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாப்பாநாடு, மதுக்கூர் 
ஆகிய பகுதிகள்கஜாப் புயலின் 
கோர தாண்டவத்திற்கு ஆளானவை.

நிற்க நேரமில்லாமல், கடும் பணிச் சுமைக்கு ஆளாகி,
கஜாப் புயல் பேரழிவால், பலவற்றையும்  இழந்த தொழிலாளி,
2 மாதங்களாக சம்பளம் வாங்காமல் 
எப்படிப் பணியாற்ற முடியும்.

அன்புத் தோழர்களே! 
அணி திரண்டு வாருங்கள்!
பொறுப்பில்லாத நிர்வாகத்திற்கு 
பொறுப்பை உணர்த்துவோம்!
தேவையெனில் தீவிரமான 
போராட்டத்திற்கும் தயாராவோம்!

தோழமையுடன்,
மாவட்டச் செயலர்கள் 
கே. கிள்ளிவளவன்,    D. கலைச்செல்வன். 
                                                                 NFTE - BSNL                          TMTCLU           

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR