2019 ஜனவரி 8, 9 2 நாள்
பொது வேலைநிறுத்தம்
மற்றும் மறியல் (ஜனவரி 9)
அனைத்து மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் கூட்டறிக்கை!
===========================================
மத்திய அரசின் மக்கள் விரோத,
தொழிலாளர் விரோத,
தேச விரோதக்
கொள்கைகளைக் கண்டித்து ஜனவரி 8, 9
இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம் செய்ய அகில இந்திய தொழிலார்கள் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் அமர்த்துவதை ஒழித்தல்,
தொழிலாளர் சட்டங்களை முதலாளிகளுக்கு சாதகமாகத்
திருத்துவதைக் கைவிடுதல்,
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல்,
பணிக்கொடையை அதிகரித்தல்,
பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை
தனியாருக்கு விற்பதை நிறுத்துதல்
உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை
நிறுத்தம் நடைபெறவுள்ளது.
அகில இந்திய அளவில் நடைபெறவுள்ள இந்த இரண்டு நாள்
பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்பதோடு
கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து
கீழ்க்கண்ட ஊழியர் சங்கங்களோடு நாமும் இணைந்து
வேலை நிறுத்தம் செய்கின்றோம்!
24-12-18 அன்று கீழ்கண்ட தலைவர்கள் கையொப்பமிட்டு
வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
கோரிக்கைகள்:
1
விலைவாசி உயர்வுக்கு உடனடித் தீர்வு.
பொது விநியோக முறையை ஒழுங்குபடுத்துதல்.
அபாயகரமான மற்றும் நஷ்டம் ஏற்படுத்தக் கூடிய விவசாய
விளைபொருட்கள்/மூலப்பொருட்கள் விற்பனையைத் தடுத்தல்.
2
உறுதியான நிலைப்பாட்டின் மூலம்
வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல்.
3
அடிப்படைத் தொழிலாளர் சட்டங்களை, எந்தவித தடையும்இல்லாமல் கடுமையாக அமுல்படுத்துதல்.
4
அனைத்து ஊழியர்களுக்கும் நிலையான சமூகப் பாதுகாப்பு.
5
வரையறுக்கப்பட்ட ஊதிய விதிகளின்படி குறைந்தபட்ச அடிப்படை
மாத ஊதியம் ரூபாய் 18000 க்கு குறையாமல் வழங்குதல்.
6
அனைத்து உழைக்கும் வர்க்கத்திற்கும் உயர்த்தப்பட்ட ஓய்வூதியம்,
மாதம் ரூபாய் 3000 க்கு குறைவில்லாமல் என்பதை உறுதிப்படுத்தல்.
7
மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில்,
நீண்ட கால திட்ட முதலீடுகளை திரும்பப் பெறுதல்.
8
ஒப்பந்த முறை சேவையை நீண்டகால,
நிலையான வேலைகளுக்கு நிறுத்தி வைத்தல்
மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கல்.
9
போனஸ், வைப்பு நிதியில் உச்சவரம்பை நீக்கு.
பணிக்கொடை அளவை உயர்வு.
10
தொழிற்சங்க அங்கீகாரம் பெற அனுமதி கேட்டு
கடிதம் வழங்கிய 45 நாட்களுக்குள்
இந்திய தொழிலாளர் சட்ட விதிகளின்படி
கட்டாயம் பதிவு பண்ணுதல்.
11
தொழிலாளர் நல சட்ட திருத்தங்கள்
திருத்தப்படுவதை எதிர்த்தல்.
12
ரெயில்வே, இன்சூரன்ஸ் மற்றும் பாதுகாப்பு துறைகளில்
அந்நிய முதலீடுகளை தடுத்து நிறுத்துதல்.
இவண்,
C. சிங் P. அபிமன்யு சுரேஷ்குமார் V. சுப்புராமன்NFTE BSNLEU BSNLMS TEPU
அகில இந்திய பொதுச் செயலர்கள்
No comments:
Post a Comment