போராடும் சங்கத்திற்கு
போட்டிச் சங்கம் எதற்காக!
==========================
(தஞ்சையில் NFTCL துவங்கியபின் எழுதியது)
AITUC யில் இணைந்த சங்கம்
போராட்டப் பேரணியில்
போர்ப்பரணி ஒலித்த சங்கம்.
100 க்கும் மேற்பட்டோர்
பங்கேற்ற பெரும் சங்கம்.
பங்கேற்காத சங்கங்களே!
உங்களுக்கு பட்டா எதற்கு
எங்களுடன் போட்டி எதற்கு!
ஆர்ப்பாட்டம் மட்டுமின்றி
அனுதினமும் வெற்றி காணும்
பேரியக்கம் TM TCLU.
நவம்பர் மாத சம்பளத்திற்கு
நடைபெற்ற போராட்டத்தில்
பங்கேற்றவரும் நாம்தான்
அதே மாதத்தில் சம்பளம்
பெற்றவரும் நாம்தான்.
ஆர்ப்பாட்டமும் கோரிக்கையும்
ஆணையாளர் சந்திப்பு மட்டும்
வாழ்க்கையாகிடக் கூடாது.
போராட்டமும் வாழ்க்கைதான்.
ரீ கேட்டகரைசேஷன் கொண்டுவந்து
தகுதியாய் ஆட்களைப் போட்டு
தமிழகத்தில், தஞ்சையில்
தடம் பதித்தவர் நாம்தானே!
தவிர்க்கவியலா தன்மையிலே
ஆட்குறைப்பு வந்தபோது
அதையும் முறையாய்ச் சந்தித்து
முடிவெடுத்தவரும் நாம்தானே!
பெரிய, பெரிய அமைப்புகள்
உருவாவது முக்கியமில்லை.
அவ்வப்போது சாதிப்பது
அதனினும் முக்கியம்.
எதனையும் எதிர்கொண்டு
சாதிக்கும் பெரும் சங்கம்
NFTE துணை கொண்டு
எளிதில் வெல்வோம் தோழர்களே!
No comments:
Post a Comment