தேசத்தின் முதல் தொழிற்சங்கம்
AITUC யின் 19 வது மாநில மாநாடு
வெற்றிபெற வாழ்த்துகிறோம்!
===========================================================
AITUC மாநில மாநாடு, வேலூர்.
23-01-19 தொழிலாளர் பேரணியில்
ஒலிக்கட்டும்
நம் கோரிக்கை முழக்கங்கள்!
======================================
தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!
தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக!
3 நாட்கள் நடைபெறுகின்ற,
AITUC சங்கத்தின்
தமிழ் மாநில மாநாடு
வெல்லட்டும் வெல்லட்டும்!!
உழைக்கும் மக்களின் எழுச்சியால்
உன்னதமான மாற்றத்தை
உருவாக்கும் பேரணி!
AITUC பேரணி!!
வாழ்க! வாழ்க! வாழ்கவே!
விலைவாசி ஏற்றத்துக்கும்
தொழில்துறை சீரழிவுக்கும்
காரணமாய் விளங்குகின்ற
மத்திய, மாநில அரசுகளே!
உங்களை நாங்கள் எச்சரிக்கின்றோம்!
அரசுத் துறை 3 ஜியோடு
அசிங்கப்பட்டு நிற்கையிலே
அம்பானிக்கு 5 ஜி வழங்க
மோடி அரசு அலைவது ஏன்!
HAL பொதுத்துறையை
புறக்கணித்த மத்திய அரசு
ரபேல் விமான கான்டராக்ட்டை
அம்பானிக்கு வழங்கியது ஏன்!
காவி வேஷம் போட்டுக்கொண்டு
கமிஷனையும் வாங்கிக்கொண்டு
பூர்ஷ்வாக்களுக்கு தேசத்தை
பட்டா போட்டு கொடுப்பதற்கா?
கமிஷன் பார்க்கும் தேசபக்தி
இனியும் நமக்கு தேவைதானா!
லாபம் ஈட்டும் பொதுத் துறையை
காவு கொடுக்கும் மத்திய அரசு
இனி நமக்கு தேவையில்லை.
சாகர்மாலா திட்டம் போட்டு
கடலோர வளங்களையும்,
ஹைட்ரோ கார்பன், மீத்தேனோடு
ஷேல் கேஸ், நிலக்கரியையும்
வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுக்கு
விற்கப் போகும் ஆட்சியாளன்
மோடி என்னும் கொள்ளைக்காரன்.
லட்சம் லட்சம் கோடிகளை
அம்பானிக்கும், அதானிக்கும்
வங்கிக் கடன் என்ற பெயரால்,
வாரி வழங்கி, அவ்வளவையும்
தள்ளுபடியாக்கும் மத்திய அரசு
ஆட்சியில் இனியும் தொடரலாமா!
சொந்த தேச மக்கள் மீது,
அக்கறையில்லா அரசாங்கம்!
தொழிலாளர் விரோத அரசாங்கம்
வாழ்ந்தாலென்ன! வீழ்ந்தாலென்ன!!
தொடர விடாது இனி அதனை
தூக்கி எறிவோம் தோழர்களே!
100 சத முதலீட்டை
அந்நிய நேரடி முதலீட்டை
ராணுவத்தில், ரயில்வேயில்
சில்லரை வணிகம், மருத்துவத் துறையில்
அனுமதிப்பது முறைதானா!
நூற்றாண்டு காலமாக
போராடிப் பெற்ற உரிமைகள்
தொழிலாளர் நலச் சட்டங்கள்
வெட்டிக் குறுக்கி ஒழிக்கப்படுவதை!
அனுமதியோம்! அனுமதியோம்!
ஒருபோதும் அனுமதியோம்!
பாசிசத்தன்மை கொண்ட ஆட்சி
மத்தியில் ஆளும் மோடி ஆட்சி.
லஞ்ச ஊழலில் திளைக்கும் ஆட்சி
மாநிலத்தை ஆளும் EPS ஆட்சி
இரண்டும் நமக்குத் தேவைதானா!
மாநில அரசின் முன்னேற்றத்தை
மண்டியிட்டு மோடியிடம்
காவு கொடுக்கும் தமிழக அரசை
தூக்கி எறிய சபதமேற்போம்!
தமிழகத்தை பொட்டல் காடாய்
மாற்றிட வைக்கும் மீத்தேனை,
ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஷை
தடுத்து நிறுத்தும் போராட்டம்!
வெல்லட்டும்! வெல்லட்டும்!
தேசமெங்கும் பரவட்டும்!
அமைப்பு சாரா தொழிலாளிக்கு
குறைந்த பட்ச ஊதியம் கூட
கொடுப்பதற்கு மனமில்லாத
மத்திய, மாநில அரசுகளை
ஆட்சியில் தொடர அருகதையில்லை!
தொழிலாளிக்கு நலம் பயக்கும்
நூற்றுக் கணக்காண சட்டங்களை
பெற்றுத் தந்த பேரியக்கம்!
100 ஆண்டு பாரம்பரியம்
கொண்ட நமது AITUC
வெல்லட்டும்! வெல்லட்டும்!!
====================
====================
வாழ்த்துக்களுடன், NFTE, தஞ்சை.
No comments:
Post a Comment