தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, January 16, 2019


BSNL நிறுவன புத்தாக்கம் மற்றும் மறுகட்டமைப்பு 
                                குறித்த IIM- அகமதாபாத் இடைக்கால அறிக்கை
===================================================

அறிக்கை பின்வரும் நான்கு கேள்விகளுக்கு விடை காண முற்படுகிறது.
தொலைத் தொடர்புத் துறையில் BSNLன் பாத்திரம் என்ன?
• BSNL
க்கு 4G அலைக்கற்றை ஒதுக்கப்பட வேண்டுமா?
புத்தாக்கம் மற்றும் மறுகட்டமைப்பு தேவைப்படும் அளவிற்கு BSNL க்கு      முன் நிற்கும் சவால்கள் என்ன?
புத்தாக்கம் மற்றும் மறுகட்டமைப்பிற்கு என்ன மாதிரியான    முன்னெடுப்புகள் தேவை மற்றும் மறுகட்டமைப்பிற்கான      நிதியாதாரத்திற்கு என்ன வழி ?
ஆய்விற்கு தேவையான தகவல்களைத் திரட்டுவதற்காக IIM நிறுவனத்தின் சார்பாக குழு ஒன்று நமது நிறுவனத்தின் CMD , Director (HR & Finanace) and Marketing ஆகியோரைச் சந்தித்துள்ளது. குஜராத், கேரளா, வடகிழக்கு-1, கல்கத்தா போன்ஸ், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை ஆய்விற்கான களங்களாக, அதன் செயல் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுத்துள்ளது.
அறிக்கையில் தொலைத் தொடர்புத் துறையில் BSNL வகிக்கும் பங்கு, இத்துறையில் நிகழும் போட்டிக்கான தேவை, ஆரோக்கியமான போட்டிக்கான காரணிகள், போட்டியை தீர்மானிக்க தேவையான போட்டியாளர்களின் எண்ணிக்கை மற்றும் போட்டிச் சூழ்நிலையில் BSNL வகிக்கப்போகும் இடத்திற்கான சாதகமான சூழ்நிலை ஆகியவை ஆராயப்பட்டுள்ளன.
BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கப்பட வேண்டுமா? என்ற கேள்வி முக்கியமானது. ஏனெனில் மற்ற போட்டியாளர்கள் இச்சேவையை தந்து வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தியுள்ள சூழ்நிலையில் வாழ்வா? சாவா? என்ற நிலையில் BSNL க்கு 4G அலைக்கற்றை முக்கியமாகிறது. அதற்காக அரசு சற்று கனிவு காட்டலாம் என்கிறது அறிக்கை.
துள்ளிக் குதிக்கும் தொழில் நுட்ப மாற்றம், தன்னிச்சையான முடிவு எடுக்க அதிகாரமற்ற சூழ்நிலை மற்றும் அமைப்புச் சிக்கல்கள் ஆகியவை BSNL சந்தித்து வரும் மிகப்பெரும் சவால்களாக அறிக்கை முன்னிறுத்துகிறது.
DOT பெயரிலுள்ள சொத்துக்களை BSNL பெயருக்கு மாற்றுதல், டவர் நிறுவனத்தை செயல்படுத்துதல், கண்ணாடி இழை கேபிள் உட்கட்டமைப்பை நிர்வகிக்க தனிப் பிரிவை உருவாக்குதல், 4G அலைக்கற்றை பெறுவதில் துரித செயல்பாடு ஆகியவை புத்தாக்கத்திற்கான வழிகளாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைப்பது, VRS திட்டத்தை அமுல்படுத்துவது ஆகியவை நிறுவனத்தின் அமைப்புரீதியான மறுகட்டமைப்பிற்கு உதவும் என அறிக்கை குறிப்பிடுகிறது. இவற்றை அமுல்படுத்துவதன் மூலம் அடுத்த 6வருடங்களில் 13895.44 கோடி ரூபாயை BSNL மிச்சப்படுத்த முடியும் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அறிக்கையை படிக்கும் போது அறிக்கையில் சொல்லப்பட்டவையெல்லாம் நமக்கு முன்பே தெரிந்த விசயங்களாக இருப்பதால் அறிக்கை வெட்டி ஒட்டப்பட்டவையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR