05-11-2017
கழுதைகிட்ட 100 ரூபா நோட்டைக் கொடுத்தா, அப்படியே சாப்பிட்டுடும். அதுக்குத் தெரியாது, அதுல மூணு கொயர் பேப்பர் வாங்கிச் சாப்பிடலாம்னு!
கடிகாரத்தை மட்டும், எந்த நேரத்தில் பழுதானது எனச் சரியாகச் சொல்லிவிடலாம்!
அஞ்சு நிமிஷம் யூஸ் பண்ற ஏடிஎம் மெஷின்ல Select Language-ல English-னு செலெக்ட் பண்ற நாமதான், `எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்’னு சண்டை போடுறோம்!
ஒரு போன்கூடவா உன்னால செய்ய முடியலை’ என என்னிடம் கோபப்பட்டவரிடம் போனும் என் நம்பரும் இருந்தன!
குழந்தையைத் தூங்கவைக்கிறது இருக்கே... கை வலிக்க அரை மணி நேரம் தொட்டிலை ஆட்டி முடிச்ச பிறகு உள்ளே பார்த்தா, `நீ யார்றா கோமாளி?’னு பார்க்கும்!
கணவனை ஒரு சின்ன வேலை செய்யவைக்க எளிய வழி... அந்த வேலையை மகளைச் செய்ய சொல்வதே.
No comments:
Post a Comment