அனைத்து ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகள் கூட்டமைப்பு
தஞ்சை மாவட்டம்.
மனித சங்கிலிப் போராட்டம் - 23-11-2017
தொலைதொடர்பில் பணியாற்றும்
இரண்டரை லட்சம் ஊழியர்களின்
மூன்றாம் கட்டப் போராட்டம்
மனித சங்கிலிப் போராட்டம்!
1-1-17 முதல்
அமலாகவேண்டிய ஊதிய மாற்றம்
ஓராண்டை நெருங்கிய பின்னும்
ஓய்வெடுப்பது நியாயமா!
மத்திய அரசில் பணியாற்றும்
தொழிலாளர்கள் அனைவரையும்
ஒரே தட்டில் வைத்துப் பார்க்க
மனமில்லாத மத்திய அரசை
வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
பல்வேறு துறைகளுக்கு
ஊதிய மாற்றம் அறிவித்த
நரேந்திர மோடி அரசாங்கமே!
ஊதிய மாற்றம் அறிவித்த
நரேந்திர மோடி அரசாங்கமே!
தொலைத்தொடர்பு துறைக்கு மட்டும்
பாரபட்சம் காட்டுவதேன்?
ஏழரை லட்சம் கோடி ரூபாய்
வாராக்கடன் கொடுமையிலே
தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு
தாராளமாய் வழங்கிய கடன்
நாலரை லட்சம் கோடியினை
வசூல் செய்ய எண்ணமுண்டா!
வளர்ச்சிக்கான திட்டமுண்டா!!
மத்திய அரசே பதில் சொல்லு.
கடனே வாங்காமல்
சவால்களையெல்லாம் எதிர்த்து நின்று
BSNL பொதுத்துறையை
பாதுகாக்கும் ஊழியரை
காவு கொடுப்பது நியாயமா!!
சம்பளக்குழுவை அமைத்திட வேண்டும்.
2வது ஊதியக்குழு
பாதிப்புக்களை அகற்றிட வேண்டும்.
65000 டவர்களைக் கொண்ட
BSNL நிறுவனத்தை
இரண்டாக உடைக்காதே!
இதுவே எங்கள் கோரிக்கை
நியாயமான கோரிக்கைக்காக
பல கட்ட போராட்டங்களை
அமைதி வழியில் நடத்திவரும்
BSNL தொழிலாளரை
கடுமையான போராட்டத்திற்கு
தூண்டாதே! தூண்டாதே!
எங்களது கோரிக்கையை
அலட்சியப்படுத்த எண்ணினால்
டிசம்பர் 12, 13 ல்
தேசம் தழுவிய அளவிலே
நாங்கள் நடத்தும் வேலை நிறுத்தம்
சேவையை சீரழிக்கும்.
அரசுக்கும் ஆபத்தென்று
கடுமையாக எச்சரிக்கின்றோம்!!
இதைவிட பொறுமையாக
போராட்டங்கள் நடந்திடுமா!
தூண்டாதே! தூண்டாதே!!
காலவரையற்ற வேலைநிறுத்தப்
போராட்டத்தை தூண்டாதே!
அதிகாரிகள், ஊழியர்கள்
அனைத்துப் பிரிவு சங்கங்கள்
ஒன்றிணைந்து நடத்துகின்ற
ஒப்பற்ற போராட்டத்தை
அலட்சியப் படுத்திட வேண்டாம்.
தேசமெங்கும் வேர் பிடித்து
எரிகின்ற போராட்டமாய்
மாறிடும் என்று எச்சரிக்கின்றோம்.
வாழ்த்துக்களுடன்:
NFTE - BSNL, தஞ்சை மாவட்டம்
No comments:
Post a Comment