தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, November 3, 2017

மன்னார்குடி கிளை ஆண்டுவிழா 
மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா!

மகிழ்வாய்த் துவங்கியது மன்னை கிளை ஆண்டு விழா 
பணி நிறைவு பெற்ற 11 பேருக்கும் பாங்காய் அமைந்த விழா.
சுழன்றடித்த காற்று மழையை பொருட்படுத்தாது 
சுற்றுப்புற கிளைகள் எல்லாம் வந்து வாழ்த்திய விழா!

மாநிலத்தின் வருகை மறுநாளென்றாலும் மண்டபம் நிறைந்த விழா!
மாவட்டச் செயலரை, மதித்து,மகிழ்ந்து மகுடம் சூட்டிய விழா!
பொறுப்பை உணர்ந்து செயலாற்றிய பொறுப்புச் செயலர்கள் 
காளிதாஸ், மோகன் போற்றப்பட்டனர்.
பதவியைப் பட்டா போட்டு, வருகைக்குத் துப்பட்டா போட்ட   
பொறுப்பாளர்கள் போற்றப்படவுமில்லை, தூற்றப்படவுமில்லை.

நிமிர்ந்தெழச் செய்த மாநிலச்செயலர் உரையும் 
மாவட்டச் செயலரின்  காட்டமான உரையும் 
பணிகளைப் பட்டியலிட்ட 
மகளிரணி தலைவியின்  மகத்தான உரையும் 
AITUC செயலர் கலைச்செல்வனின் கவித்துவமிக்க உரையும்
தோழர்களின் உணர்வு மிக்க பாராட்டும் 
விழாவுக்கு வீரியம் தந்தது.

செல்லையன், மோகன், ராஜா தலைமையில்
மன்னை கிளைச் சங்கம் மகுடமாய்திகழட்டும்!
நேயம் போற்றும் மன்னைத் தோழர்கள்
வந்தவர் அனைவருக்கும் வடையும், டீயும் தந்து
 வாகாய் விருந்தளித்து விழாவை நிறைத்தனர்.
==========================================











மேலும் படங்கள் கீழே:




























































No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR