சம்மேளன நாள்
======================================================
ஒன்பது பெரிய சங்கங்கள் ஒன்றுபட்ட நாள் - இன்று
ரெண்டுபட்டவர்கள் ஒன்று கூடியிருக்கிறோம்!
======================================================
தபால் தந்தி தொழிலாளர்கள்
UPTW என்ற பெயரில்
9 சங்கமாய் இயங்கி வந்தோம்.
E 3க்கும் RMS க்கும்
தலைமை தாங்கிய குப்தாவின்
தன்னேரில்லா முயற்சியினாலே
ஒன்பதையும் ஒன்றாக்கி
உருவானதுதான் NFPTE!
ஜெகஜீவன்ராமால் துவங்கப்பட்ட
NFPTE பேரியக்கம்!
தாதாகோஷ் தலைமையில்
ஒற்றுமைச் சின்னமாக
தொலைத் தொடர்பை காத்தது.
ஞானகுரு ஞானையாவால்
60, 68 போராட்டம்
ஆற்றலை நமக்குத் தந்தது.
குப்தாவின் தலைமையிலே
கண்ட வெற்றிகள் ஒன்றா, ரெண்டா
கணக்கிலடங்கா சாதனைகள்!
இல்லாமலிருந்த போனஸை
இருக்கு உனக்கு என்ற சங்கம்.
அதிக போனஸ் பெற்ற துறை
தொலைபேசி என்ற பெயரைப்
பெற்றுத் தந்த பேரியக்கம்,
NFTE ஜிந்தாபாத்.
அடிமட்ட தொழிலாளியை
அதிகாரியாய் மாற்றிய சங்கம்
ஜெகன், சந்திரசேகர், விசாரே போல்
ஆற்றல் பெற்ற தலைவர்களை
உருவாக்கிய சங்கமன்றோ!
68, 72 ல் உடைந்தோம்,
இன்று ஆறாய், பத்தாய் பிரிந்தோம்!
எத்தனை மாற்றங்கள் வந்தபோதும்,
ஏற்றி விட்ட ஏணியை
தாங்கிப் பிடிக்கும் சங்கமாய்
NFTE -யே மிளிர்கிறது.
தொழிற்சங்க வரலாற்றில்
ஒற்றுமைச் சின்னமாய் போற்றப்படும்
NFTE பதாகையினை
உயர்த்திப் பிடிப்போம் தோழர்களே!
இன்றைய NFTE
அன்று உருவான வரலாற்றை.
தியாகத்தை, பெருமையை
கொடியேற்றி கொண்டாடுவோம்!
கொள்கை வழி போராட
சபதமேற்போம் தோழர்களே!
======================================================
இன்று மன்னார்குடி கிளையில் மாவட்டச் செயலர்
தோழர். K. கிள்ளிவளவன் அவர்கள்
சம்மேளன தினச்
சிறப்புரையாற்றுகிறார்.
======================================================
பங்கேற்பீர்!!
======================================================
No comments:
Post a Comment