தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, November 27, 2017

 ==============================================
ஊதியப்பேச்சு வார்த்தையும் 
DPE ஒப்புதலும்…

பொதுத்துறை ஊழியர்களுக்கான 8வது ஊதியப்பேச்சுவார்த்தையை அந்தந்த பொதுத்துறை நிறுவனங்கள் ஊழியர் சங்கங்களுடன் பேசி முடித்திட மத்திய அமைச்சரவை 22/11/2017 அன்று ஒப்புதல் அளித்திருந்தது. 
அதனையொட்டி 24/11/2017 அன்று DPE இலாக்கா 
அதற்கான நிர்வாக உத்திரவைப் பிறப்பித்துள்ளது.

அந்த உத்திரவின்படி…
01/01/2017 முதல் 5 ஆண்டுகள்/10 ஆண்டுகள்  கால இடைவெளியில் ஊதிய மாற்றம் பெற்றவர்கள் ஊதியப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் துவங்கலாம்.

ஊதியப்பேச்சுவார்த்தையைத் துவங்குமுன் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஊதியமாற்றத்திற்கான 
செலவிடும் திறன் AFFORDABILITY.. 
ஊதிய மாற்றச்செலவுகளைத் 
தாங்கிடும் திறன் SUSTAINABILITY கொண்டதாக இருக்கவேண்டும்.

அரசு எந்தவித நிதி உதவியும் செய்யாது. 
சம்பந்தப்பட்ட நிறுவனமே முழு நிதிச்செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் 
அதிகாரிகளின் சம்பள விகிதங்களை 
ஒருக்காலும் மிஞ்சி விடக்கூடாது.

ஊதிய மாற்றத்தால் தங்களது துறையின் 
உற்பத்திப்பொருளின் விலையையோ.. சேவைக்கட்டணத்தையோ உயர்த்துதல் கூடாது.

இதுபோன்ற வழக்கமான பல்லவி நிபந்தனைகளுடன்...
DPE இலாக்கா தனது நிர்வாக உத்திரவை வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட உத்திரவு நமது நிறுவனத்திற்குப் பொருந்துமா?
ஊதியப்பேச்சுவார்த்தை உடனடியாகத் துவங்குமா?
என்பது ஊழியர்களின் எதிர்பார்ப்பாகும்.

ஆனாலும் வரிக்கு முந்தைய இலாபம்… PBT… 
AFFORDABILITY… SUSTAINABILITY என்ற நிபந்தனைகள்
நமக்குத் தடைக்கற்களாக இருக்கின்றன.

அரசு எந்த நிதி உதவியும் செய்யாது. சம்பந்தப்பட்ட நிறுவனமே 
முழு ஊதியச்செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் 
என்ற நிபந்தனை விதிக்கப்பட்ட பின் 
ஊதிய மாற்றத்திற்கு இலாப நட்டம் பார்ப்பதேன்? 
இதுவே சாதாரண ஊழியனின் நியாயமான கேள்வியாகும்.

ஊதிய மாற்ற முழுச்செலவையும் 
தானே ஏற்றுக்கொள்ளும் நமது நிறுவனம் 
உடனடியாகப் பேச்சுவார்த்தையைத் துவங்க வேண்டும்.
இதுவே சாதாரண ஊழியனின் எதிர்பார்ப்பாகும். 
============================================================

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR