நவம்பர் 9,10,11
நாடாளுமன்றம் நமதாகும்.
ஓரணியில் திரண்டிருக்கும்
ஒப்பற்ற சங்கங்களை
வாழ்த்துகின்றோம்! வணங்குகின்றோம்!!
தேசத்தின் ஆலயங்கள்
பொதுத் துறை நிறுவனங்கள்.
கனரக தொழில்கள் யாவும்
இந்தியாவின் கட்டுமானங்கள்.
பண்டித நேருவால் போற்றப்பட்ட
பொதுத் துறை நிறுவனங்களை,
பற்றாக்குறை பட்ஜெட்டை
ஈடுகட்டும் தொழில்களை,
தேசத்தின் கஜானாவை
நிரம்பச் செய்த துறைகளை,
தனியாருக்குத் தாரை வார்க்கும்
மத்திய அரசின் முயற்சிதனை
முறியடிக்க முற்றுகையிடுவோம்!
உலகத்துச் செல்வமெல்லாம்
உருவாக்கும் தொழிலாளியை
அத்தக் கூலியாய் அடிமையாய்
ஆண்டாண்டாய் வைத்திருக்கும்
மோடி அரசை முற்றுகையிடுவோம்.
ஒப்பந்தத் தொழிலாளிக்கு
குறைந்த பட்ச கூலியோடு
குறைந்தபட்ச உரிமை கூட
கொடுப்பதற்கு மனமில்லாத
மோடி அரசை எதிர்த்திடுவோம்.
பன்முகக் தன்மை கொண்ட
பாரத தேசத்தை
இந்துத்துவா என்ற பெயரால்
இன ஒழிப்பு செய்யத் துணியும்
பி.ஜே.பி யின் முகத்திரையை
கிழித்தெறியப் புறப்படுவோம்!
கண்ணின் மணியாய் வளர்த்தெடுத்த
தேசத்தின் சுதந்திரம்
பறிபோக விடலாமா!
தேசம் காக்க வாருங்கள்!
தியாகப் படையாய் வாருங்கள்!
No comments:
Post a Comment