தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, January 9, 2018

அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத் கூட்டமைப்பு - புது டெல்லி 
====================================
நேற்று 08-01-2018 காலை அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆளும் மத்திய அரசாங்கத்தின் அலட்சியப் போக்கு குறித்து அனைத்துத் தலைவர்களும் விவாதித்து கீழ்க்கண்ட முடிவுக்கு வந்துள்ளனர். அதன் அடிப்படையில் காந்தி நினைவு நாளான 30-01-2018 முதல் சாத்வீக முறையில் தொடர் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. 

30-01-2018 காந்தி சமாதியில் 5 நாட்கள் தொடர் சத்தியாக்கிரகம். 

                                        தேசம் முழுக்க அனைவரும் காந்திய வழியில் 
                                        விதிப்படி வேலை மற்றும் ஒத்துழையாமை இயக்கம்                                              நடத்துதல்.



28-02-2018  டெல்லி சஞ்சார் பவன் முற்றுகைப் போராட்டம்.

                                         அதன் பின் மந்திரியைச் சந்தித்து ஒரு வாரத்திற்குள்                                             மனு கொடுத்தல்.

                                         அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும்     
                                         சந்தித்து நமது போராட்டத்திற்கு ஆதரவு கேட்டல்.
                                         துணை டவர் நிறுவன உருவாக்கத்தை எதிர்த்து               
                                         சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
==================================================================

கோரிக்கைகள்
(அதே கோரிக்கையோடு இன்னும் 
2 கோரிக்கைகள் இணைகிறது.)

15 சதவீத ஊதிய மாற்றத்தை 01-01-2017 முதல் BSNL ஊழியர்களுக்கு அமுல்படுத்து.

2 வது ஊதிய மாற்ற முரண்பாடுகளை கலைந்திடு.

01-01-2017 முதல் ஓய்வூதியத்தில் மாற்றம் செய்.

செல் டவர் துணை நிறுவன உருவாக்கத்தைக் கைவிடு.

ஓய்வு பெரும் வயதை 60 லிருந்து 58 ஆகக் குறைக்காதே!

VRS திட்டத்தைக் கட்டாயமாக்காதே!
============================================================


காந்தி சமாதியில் துவங்கும் போர் 
அரசின் அலட்சியத்திற்கு சமாதி கட்டட்டும். 

நமது ஒற்றுமைக்கு விடப்பட்ட சவாலாய் 
எது வரினும் எதிர்கொள்வோம்!

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR