தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, January 1, 2018


முயற்சித்துப் பார்ப்போம்!
எளிதான சில நடைமுறைகள் 
----------------------------------------
புதிய ஆண்டு
இனிதாய்த்தான் பிறக்கும்.
இப்படி கொள்வதுதான்
இனிமையைச் சேர்க்கும்.

ஒவ்வொரு ஆண்டும்
கழியும், பிறக்கும்.
கழிந்த ஆண்டின்
கணக்கைப் பார்.
அது வரும் ஆண்டின்
வகை தொகையாகும்.

வரவா, செலவா
முக்கியமல்ல.
வந்தது, போனதும்
முக்கியமல்ல!
கணக்கு என்றும் முக்கியமே!

சிக்கலும், சறுக்கலும்
எவர்க்கும் வரும்.
சீரிய சிந்தனை
சிறந்தோர்க்கே வரும்.


ஆண்டு துவக்கத்திலேயே 
அடுத்தடுத்த பணிகளை 
அழகாய் ஒருங்கிணைப்பீர்.

அன்றாட நிகழ்ச்சிகள் 
டைரியை நிறைக்கட்டும்.
பின்னாட்களில் அது 
பெரிதும் கைகொடுக்கும்.


எவரையும் பார்த்தவுடன் 
வணங்கி, வாழ்த்து சொல்!
வணங்காமுடியையும் நீ 
வாழ்த்த மறவாதே!


எங்கு நடக்கும் கூட்டமென்றாலும் 
எவர் நடத்தும் கூட்டமென்றாலும் 
அங்கே போய் அருகமர் 
அதிலும் உனக்கு செய்தியிருக்கும்.

பத்திரிகை படித்திடு, 
பாடல்களும் கேட்டிடு.
ஏற்ற செய்திகளை 
எடுத்து இயம்பிடு.

   ஆத்திகம், நாத்திகம் 
இடம் மாற்றி இருத்தாதே!
இல்லாததைச் சொல்லாதே!

அடுத்தவர் செயல்களில் 
ஆற்றலைப் பாராட்டு. 
இருக்கும் இயக்கத்தில் 
இயங்கிக் கொண்டேயிரு.

சேவையில் செம்மை 
செயல்பாட்டில் இனிமை 
உன்னை உயர்த்தும்.
உலகளாவிய பார்வை பெறும். 

அருகில் இல்லையென்றாலும் 
அவன், இவன் ஏக வசனம் 
இனி அரிதாய் போகட்டும்.

சுய புராணம் தூக்கியெறி!
தற்பெருமை தாழ்வெனக் கொள்.
சொந்த புத்தி பெருகும் பார்!

கண நேரமென்றாலும் 
கவிதையாய் வாழ்ந்திடு. 
கச்சிதமாய் செயல்படு.

நல்ல அரசியல் 
நாட்டை நிறைத்திட 
உன்னால் முடிந்ததை 
உவந்து செய்திடு.

நல்ல செயல்களை, 
நமக்கு வாய்த்த தலைவர்களை 
நாளும் நினைத்திடு.
நன்றியோடு வணங்கிடு.

ஒற்றுமைக்கு வழிவகுக்கும் 
ஒவ்வொரு செயலிலும் 
உனது பங்களிப்பை 
 உறுதி செய்து கொள்.

வேற்றுமைகள், பிரிவினைகள் 
எத்தகு வடிவிலும் 
எந்த ஒரு செயலிலும் 
இடம் கொடுக்கலாகாது.

எப்படி வரினும்
துவங்கும் புத்தாண்டை 
துணிச்சலாய் எதிர்கொள்வோம்.

வாழ்த்துக்கள் தோழர்களே!
எஸ். சிவசிதம்பரம்.
பட்டுக்கோட்டை.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR