வருந்துகிறோம்!
தோழர். மனோஜ்
ஒப்பந்தத் தொழிலாளி, கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு BSNL இணைப்பகத்தில் கேபிள் ஜாயிண்டராக கடந்த 23 வருடங்களாக பணியாற்றி வந்திருக்கிறார்.
கடந்த 3 மாதங்களாக சம்பளம் வராத காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டு விட்டதாக செய்தி அறிகிறோம்.
போலீஸ் விசாரணை செய்து வருகிறது.
காரணம் பின்னார்தான் தெரிய வரும்.
எது எப்படியோ! தற்கொலை என்பது
இந்த காரணத்திற்காகத்தான் என்றால் அது கோழைத்தனம்.
வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் இருக்கும்போது
இம் மாதிரி முடிவுகள் எடுப்பது வேதனையாக இருக்கிறது.
எவ்வளவோ போராட்டங்களை நாம் முன்கையெடுத்து
நடத்தி வரும்போது ஏன் இப்படி ஒரு நம்பிக்கையற்ற தன்மை.
மறைந்த தோழர் மனோஜ் அவர்களின் குடும்பத்தாருக்கு
நமது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நிர்வாகம் 40 சதவீதம் ஆட்குறைப்பு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது. தொழிற்சங்கம் 1 சதவீதம் கூட ஆட்குறைப்பு கூடாதென்று போராடி வருகிறது.
நவம்பர் மாத சம்பளத்திற்கும், டிசம்பர் மாத சம்பளத்திற்கும்
தேவையான நிதியை போராடிப் பெற்றிருக்கிறோம்.
கார்ப்பரேட் கம்பனிகளுக்கு ஆதரவான அரசாக இருப்பதால்
ஒவ்வொன்றுக்கும் நாம் போராடியே தீர வேண்டிய
நிலையில் இருக்கிறோம் என்பதை தோழர்கள்
புரிந்து கொள்ள வேண்டும்.
நவம்பர் மாத சம்பளத்தை பட்டுக்கோட்டை, மன்னார்குடி கோட்டங்கள் ஏஜென்சியிடம் இருந்து முழுமையாக அப்போதே பெற்றுவிட்டோம்.
மற்ற பகுதிகளுக்கு மட்டும் ரூபாய் 2000, 3000 முன்பணமாக பெற்று இருக்கிறோம்.
இன்று வரை சம்பளம் பெறுவதில் சில நாட்கள்தான் தாமதம் என்ற நிலை நமது மாவட்டத்தில்.
ஆனாலும் சென்னையில் நடைபெற்ற இரண்டு நாள்
உண்ணாவிரதத்தில் 46 பேர் சென்று கலந்து கொண்டிருக்கிறோம்.
பல மாவட்டங்களில் மாதக் கணக்கில் சம்பளம் போடப்படுவதில்லை.
தஞ்சை மாவட்டத் தோழர்கள் இருக்கின்ற நிலைமைகளை
சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
வழக்கம்போல் போராட்டத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று
இத் தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
பணியில் இருக்கும் போது மறைந்த தோழர் பி. பழனிவேலு குடும்பத்திற்கு இன்று 50,000 ரூபாய் நிவாரண நிதியளிக்கவிருக்கிறோம்.
அவரது துணைவியாருக்கு வேலை
உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.
நமது PGM திரு. C.V. வினோத் ITS அவர்கள்
பட்டுக்கோட்டையில் நடக்கவிருக்கும் நிதியளிப்புக் கூட்டத்தில் நிதியளித்து உரையாற்றவிருக்கிறார்.
அனைவரும் வாருங்கள். அவரது குடும்பத்தாருக்கு
ஆறுதல் சொல்லுங்கள்.
ஜெகனால் உருவாக்கப்பட்ட சங்கம் உங்களுக்கு
என்றும் துணையிருக்கும்.
நன்றி தோழர்களே!
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர்.
No comments:
Post a Comment