NFTE - BSNL
கொடியேற்றத்துடன் துவங்கிய செயற்குழுவில்
தோழர். குப்தாவுக்கு மலரஞ்சலி
செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.
செயற்குழுவை தலைவர் T. பன்னீர்செல்வம் அவர்கள் சிறப்பாக நடத்திச் சென்றார். மாவட்டச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்று, ஒருமித்த கருத்துடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
தோழர். குப்தாவுக்கு மலரஞ்சலி
செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.
மாநிலச் செயலர் தோழர். K. நடராஜன், மாநில துணைச் செயலர் மேகநாதன், JCM தலைவர் பிரின்ஸ், தலைவர் ஆகியோர் வருகை தந்து செயற்குழுவை சிறப்பித்தார்கள்.
செயற்குழுவில் பொருளாளர் A. சேகர்
மாவட்ட மாநாட்டு வரவு செலவு கணக்கை
தாக்கல் செய்து பேசினார்.
செயலர் கிள்ளிவளவன் மாநிலச் செயற்குழு
வரவு செலவு கணக்கை தாக்கல் செய்து விளக்கமளித்தார்.
இரு வரவு செலவு கணக்கும் அனைவராலும்
ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மாநிலச் செயலரின் சிறப்பானதொரு உரை
அனைவரையும் நிமிர்ந்து உட்கார வைத்தது.
உண்ணாவிரதப் போராட்டத்தை சிறப்பாக நடத்தித் தந்த அனைவரையும் பாராட்டு முகமாக, தலைமை வகித்த தோழர். நடராஜன் அவர்களை கிளை செயலர்கள், ஒப்பந்தத் தொழிலாளிகள் சாரை, சாரையாய் வந்து சால்வை அணிவித்து நன்றி கூறினார்கள்.
செயற்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப் பட்டது.
1. தஞ்சை மாவட்டச் செயற்குழுவை திறம்பட நடத்தித் தந்த மன்னார்குடி கிளைச் சங்கத்தை பெரிதும் பாராட்டி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
2. ஒப்பந்தத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்காக ஜனவரி 2018, 3, 4 தேதிகளில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று வெற்றிகண்ட செயலர்கள், நடராஜன், செல்வம் தலைவர்கள் காமராஜ், RK உள்ளிட்ட தலைவர்கள், தோழர்கள் அனைவருக்கும் இச் செயற்குழு நன்றி தெரிவித்து பாராட்டுகிறது.
3. நமது மாவட்டத்தில் நவம்பர் மாத சம்பளம் மூன்று பிரிவிற்கு முழுமையாகப் பெற்று, ஒரு பகுதிக்கு மட்டும் அட்வான்ஸ் ரூபாய் 2000 பெற்றுத் தந்திருந்த போதிலும் சென்னையில் நடைபெற்ற
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, போராட்டவெற்றிக்கு
உறுதுணையாக இருந்த செயலர் கலைச்செல்வன், தலைவர் நாடிமுத்து ஆகியோருக்கும், வேன் மூலம் மன்னை மோகன் தலைமையில் பயணித்த தோழர்களுக்கும், பட்டுக்கோட்டை செல்வகுமார், குணசேகரன் தலைமையில் பேருந்தில் பயணித்துச் சென்ற தோழர்கள் 46 பேருக்கும் செயற்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
4. துணை டவர் நிறுவனம் தனியாக உருவாக்க முயற்சி செய்யும் மத்திய அரசைக் கண்டித்து வருகிற 08-01-18 அன்று அனைத்து ஊழியர், அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பு தஞ்சையில் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்பது என்றும் தீர்மானிக்கிறது.
5. மார்ச் மாதத்தில், பஞ்சாப் அமிர்தசரஸில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டில் தோழர்கள் கூடுதலாக பங்கேற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
6. மாவட்டத் துணைத் தலைவராக இதுவரை சிறப்பாகப் பணியாற்றிய தோழர். T. தனபால் அவர்கள் பணி ஒய்வு பெற்றுவிட்டதால் அவருக்குப் பதிலாக மன்னை தோழர். தர்மராஜ் அவர்களை தஞ்சை மாவட்ட துணைத் தலைவராக இச் செயற்குழு தேர்ந்தெடுக்கிறது.
7. மாவட்டச் சங்க நிர்வாகிகள் கூட்டம் முடியும் வரை செயற்குழுவில் இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக தீர்மானம் நிறைவேற்றும் வரை இருக்க வேண்டும் என்றும் இச் செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
மேலும் படங்கள் கீழே:

No comments:
Post a Comment