நாடு முழுவதும் நமது தலையாய கோரிக்கைக்காக தோழர்கள் விதிப்படி வேலை மற்றும் சத்தியாகிரக போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள்.
நமது மாவட்டமும் இதில் விதிவிலக்கல்ல!
இன்னும் 4 நாட்கள் போராட்டம் இருக்கிறது.
இந்தப் போராட்டம் மூலம் நமது ஒற்றுமை மேலும் பலப்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது.
முதல் நாள் போராட்டத்தில் விடுபட்ட அம்சங்கள் ஏதேனும் இருந்தால் அதை வரும் நான்கு நாட்களில் சரி செய்து கொள்வதற்காக
ஒரு சில செய்திகளை நினைவூட்ட விரும்புகிறேன்!
மகாத்மா படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செய்யுங்கள், உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்!
காவல் துறைக்கு போராட்டம் குறித்து தகவல் கொடுங்கள்!
பத்திரிகைக்கும் செய்தி கொடுங்கள்!
போராட்ட நோக்கங்களை அனைவரும் அறியும் வண்ணம் எடுத்துரையுங்கள்!
கோரிக்கையை பொது மக்கள் அறியும் வண்ணம் பிளெக்ஸ் அல்லது தட்டி வையுங்கள்!
கோரிக்கை முழக்கமிடுங்கள்!
கோரிக்கை முழக்கமிடுங்கள்!
சகோதரச் சங்கங்களுடன் நல்லிணைப்பு வைத்திருங்கள்.
பணியாற்றுபவர்கள் விதிப்படி வேலை செய்தால் போதும்.
மேளாக்கள் நடத்திட வேண்டாம்.
பணி நேரம் தாண்டி ஒரு நிமிடம் கூட வேலை செய்ய வேண்டாம்.
ஒய்வு நேரத்திலும், சொந்த விடுப்பிலும்
சத்தியாகிரகத்தில் பங்கு கொள்ளுங்கள்.
சத்தியாகிரக போராட்டம் என்பது போர் ஆயுதங்களை விட வலிமை வாய்ந்தது.
எப்படியெனில்,
அனைவரும் யாதொரு வேறுபாடின்றி ஒன்றுபடுகிறோம்!
கோரிக்கையின் முழு அம்சங்களையும் அறிந்து கொள்கிறோம்!
அரசின் நோக்கம், கொள்கை ஆகியவைகளை விவாதித்து அறிந்து கொள்ள முடிகிறது.
தலைமைக்கு கட்டுப்படுதல் என்பதோடு, விபரங்களை தெளிவாக தெரிந்து
கட்டுப்படுகிறோம் என்பதுதான் வெற்றியின் அம்சம்.
ஆதிக்க சக்திகளின் பிரித்தாளும் முயற்சிகள் தோல்வியடையும்.
என்றுமே நமது போர் வெற்றியை நோக்கியே!
வாழ்த்துக்கள் தோழர்களே!
அன்புடன்,
கே. கிள்ளிவளவன்.
No comments:
Post a Comment