எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞானி காலமானார்
1970 களில் சுமார் 6 ஆண்டுகள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் செய்தியாளராக பணி புரிந்தார். அவருடைய தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக எக்ஸ்பிரஸ் நிருவாகத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் போட்ட வழக்கில் வெற்றி பெற்று எக்ஸ்பிரஸில் சேர்ந்தார். ஒரு நாள் மட்டும் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வேலை செய்து விட்டு, ராஜினாமா செய்து விட்டு, இனிமேல் மாதக் கூலிக்காக, முழுநேர ஊழியனாக, எங்கும் வேலை செய்ய மாட்டேன் என்று சபதம் எடுத்து விட்டு, 'சுதந்திர பத்திரிகையாளனாக’ செயற்படத் துவங்கினார்.
தந்தை பெரியாரை பற்றி, தூர்தர்ஷன் சார்பாக ஒரு டாக்குமெண்டரி படம் எடுத்தார். கிட்டத் தட்ட 100 நிமிடங்கள் ஓடக் கூடிய டாக்குமெண்டரி படம் இது. மதச்சார்பின்மை என்ற கொள்கையில் இறுதி வரையில் உறுதியாக இருந்தார் ஞாநி. இயற்கை எவ்வளவு அழகானது என்பதை ஞாநி கடைசியாக அவர் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் எழுதியதில் இருந்து எளிதாக புரிந்து கொள்ளலாம். '’துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பிஜேபி நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக எடுக்க மாட்டார். பிஜேபி யையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி பிஜேபி சங்க பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது.முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும்’’. ஞாநியின் மறைவு நிச்சயம், தமிழ் பத்திரிகை உலகத்துக்கும், சிவில் சமூகத்துக்கும் ஒரு இழப்புதான். தன்னுடைய உடலை தான் மறைந்த பிறகு மருத்துவ ஆராய்சிக்கு கொடுத்து விட வேண்டும் என்று ஏற்கனவே ஞாநி முறைப்படி, சட்டரீதியில் எழுதி வைத்து விட்டார். அதன்படி ஞாநி யின் பூத உடல் சென்னை அரசு பொது மருத்துவனைக்கு கொடுக்கப் பட்டு விட்டது.
No comments:
Post a Comment