11-01-1966 ல் மறைந்தார்.
ஏழைப் பிரதமர்
லால்பகதூர் சாஸ்திரி நினைவு நாள்
இவரு பிரதமரா ஆன உடனேயே அவர வந்து பத்திரிக்கையாளர்கள் எல்லாம் சூழ்ந்து கொண்டு, உங்க முன்னேற்றத்திற்கு யாரு காரணம் சொல்லுங்க? அப்படின்னு கேட்டாங்க. அதுக்கு லால்பகதூர் சாஸ்திரி அவர்கள், “ஒரு தோட்டக்காரர்தான் நான் இந்த நிலைக்கு வந்ததற்குக் காரணம்” என்றார். பத்திரிக்கையாளர்கள் வியப்புடன், ‘எப்படி?’ என்று கேட்டனர். அதற்கு லால்பகதூர் சாஸ்திரி அவர்கள், “நான் சிறுவயதாக இருக்கும்போது எனது தந்தையார் இறந்துவிட்டார். எனது தாயரே என்னை வறுமைக்கிடையில் வளர்த்தார். நான் சிறுவனாக இருந்தபோது அருகில் உள்ள மாந்தோப்பிற்குச் சென்று எனது நண்பர்களுடன் மாங்காய் பறிக்கச் சென்றேன். எனது நண்பர்கள் என்னை மட்டும் மரத்தில் ஏறி மாங்காய் பறிக்கச் சொன்னவுடன் நான் மரத்தில் ஏறி மாங்காய் பறித்துக் கொண்டிருந்தேன். அப்போது மாந்தோப்பைக் காவல் காக்கும் தோட்டக்கார் வரவே எனது நண்பர்கள் அனைவரும் ஓடிவிட்டனர். நான்மட்டும் மரத்தில் இருந்ததால் அவரிடம் அகப்பட்டுக் கொண்டேன்.
என்னைப் பிடித்த அவர் ஏன்டா இப்படிச் செய்யலாமா? என்று கேட்டார். நான் அழுது கொண்டே எனது தவறுக்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டேன். அவரோ தம்பி உனது அப்பா இறந்துவிட்டதால் உனக்கு நீதான் வழிகாட்டி. நீ நேர்மையா இருந்தா பெரிய ஆளா வந்துவிடலாம். நல்லது எது கெட்டது எதுன்னு நீதான் தெரிஞ்சுக்கணும். மற்றவங்களுக்கு அவங்க அப்பா இருக்காங்க. ஒனக்கு நீதான் எல்லாமே. நல்ல நண்பர்களோட சேரு. நல்லவனா இரு. அதுதான் உன்னை வாழ்க்கையில உயர்த்தும்” என்று கூறி மாங்காய்களையும் கொடுத்து அன்பா அனுப்பி வச்சாரு. அவரு சொன்னது எனது மனதில் ஆழமாப் பதிஞ்சு போயிருச்சு. அவரு சொன்னத அப்போதே கடைபிடிச்சேன். அதனாலதான் இன்றைக்கு இந்த நிலைக்கு வந்தேன். அப்போது அவரு மட்டும் என்னை வழிப்படுத்தவில்லை என்றால் இன்றைக்கு இந்த உயர்ந்த நிலையை என்னால எட்ட முடிஞ்சிருக்காது. என்னோட உயர்வுக்கு அந்தத் தோட்டக்காரர்தான் முக்கிய காரணம்” அப்படின்னு சொன்னாரு.
1965 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பீல்டு மார்ஷல் அயூப்கான், நேருவுக்குப் பின் இந்தியா மிகவும் வலுவிழந்திருக்கிறது என்று எண்ணி, பாகிஸ்தான் படைகளை, குஜராத் எல்லையிலும், காஷ்மீர் எல்லையிலும் இந்தியாவை தாக்குவதற்கு ஆணைப் பிறப்பித்தார். ஆனால் பிரதமர் சாஸ்திரி அதற்கெல்லாம் பயப்படவில்லை. நமது ராணுவம் மிகுந்த பலம் கொண்டு தாக்கியதில் பாகிஸ்தான் படைகள் சிதறி ஓடின. பிரதமர் சாஸ்திரி பார்வைக்கு வலுவில்லாதவர் போல் தோற்றம் கொண்டவராக இருந்தாலும், அந்தப் போர் அவரை எப்பேர்பட்டவர் என்று அடையாளம் காட்டியது. ரஷ்யாவின் தலையீட்டால், அப்போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பின் இரு தரப்பினரையும் சமாதானம் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்திட ரஷ்யா முயற்சி செய்தது. அதற்காக பிரதமர் சாஸ்திரி, 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரஷ்யாவில் உள்ள தாஷ்கண்ட் நகருக்கு விரைந்தார்.
அச்சமயத்தில் விவசாயிகளையும், ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்திட லால்பகதூர் சாஸ்திரி ஏற்படுத்திட்ட கோஷம் தான் ‘ஜெய் கிஸான், ஜெய் ஜவான்’ என்ற கோஷம்.
1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் நாள், இரு நாடுகளுக்கிடையே சமாதான ஒப்பந்தமாகிய “தாஷ்கண்ட் சமாதான ஒப்பந்தம்” நிறைவேறியது. அதில் பிரதமர் சாஸ்திரியும், பீல்டு மார்ஷல் அயூப் கானும் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, டெல்லியில் இருந்த மூத்த அமைச்சர் நந்தாவுக்கு தொலைபேசியின் வழியே செய்தியைக் கூறினார் சாஸ்திரி. இருவரும்மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். பின்னர் டெல்லியில் இருந்த தன் மனைவிலலிதா தேவியுடன் தொலைபேசியில் சாஸ்திரி பேசினார். “பேச்சுவார்த்தைவெற்றிகரமாக முடிந்தது. நாளை டெல்லி திரும்புகிறேன்” என்று தெரிவித்தார். நள்ளிரவு மூன்று மணிக்கு (அப்போது இந்தியாவில் நேரம் இரவு 2 மணி) சாஸ்திரிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவர் வந்து பரிசோதித்தார். சாஸ்திரியின் நாடித்துடிப்புத் தளர்ந்திருந்தது. மருத்துவர் ஊசி போட்டார். மற்றும்பல மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். எனினும் பலன் இல்லை. மரணம் சாஸ்திரியை அள்ளிக் கொண்டது.
உயிர் பிரிவதற்கு முன் சாஸ்திரியின் உதடுகள் “ஹரே ராம்” என்றவார்த்தையை முணுமுணுத்தன. சாஸ்திரி மரணம் அடைந்ததை அறிந்து, பாகிஸ்தான் அதிபர் அயூப்கான், ரஷிய பிரதமர் கோசிஜின் ஆகியோர் அதிர்ச்சிஅடைந்தனர். விரைந்து சென்று சாஸ்திரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது அயூப்கானும், ஜோசி ஜின்னும் கண் கலங்கினார்கள்.
ஜனவரி 11-ஆம் தேதி காலை, தாஷ்கண்டில் இருந்து
சாஸ்திரி உடல் விமானம் மூலமாக டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டது. சாஸ்திரியின் உடல் தாஷ்கண்ட் நகரில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்ட காட்சிஉள்ளத்தை உருக்குவதாக இருந்தது. சாஸ்திரியின் உடல் அவர் தங்கியிருந்தமாளிகையில், மூவர்ணக் கொடியால் போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
சாஸ்திரி உடல் விமானம் மூலமாக டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டது. சாஸ்திரியின் உடல் தாஷ்கண்ட் நகரில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்ட காட்சிஉள்ளத்தை உருக்குவதாக இருந்தது. சாஸ்திரியின் உடல் அவர் தங்கியிருந்தமாளிகையில், மூவர்ணக் கொடியால் போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
ரஷியப் பிரதமர் கோசிஜின் கண்ணீர் ததும்ப இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் சாஸ்திரியின் உடல், ஒரு பீரங்கி வண்டியில் வைக்கப்பட்டு, தாஷ்கண்ட்விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுக சுமார் 10 லட்சம்பேர், சோகத்துடன் நின்று அஞ்சலி செலுத்தினார்கள். 21 பீரங்கி குண்டுகள் முழங்கமரியாதை செலுத்தப்பட்டது. சாஸ்திரி உடல் வைக்கப்பட்டு இருந்த சவப்பெட்டி, விமானத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அயூப்கானும், கோசி ஜின்னும்தோள் கொடுத்து சுமந்தனர். இதுதான் விந்தையிலும் விந்தை! பகைமை பாராட்டிய பாகிஸ்தான் அதிபர் கண்ணீர் மல்க சாஸ்திரியின் உடலைச் சுமந்தது அனைவரது உள்ளத்தையும் உருக்கிவிட்டது. பகைவரின் உள்ளத்தைக் கூட நெகிழ வைத்த நேர்மையாளராகச் சாஸ்திரியார் திகழந்தமை அதன் வாயிலாகப் புலப்பட்டது.
சாஸ்திரியுடன் தாஷ்கண்ட் சென்றிருந்த மந்திரிகள் ஒய்.பி.சவான், சுவரண்சிங்ஆகியோரும் சவப்பெட்டியைச் சுமந்தனர். சாஸ்திரி உடலைப் பெற்றுக் கொள்வதற்காக, டெல்லி விமான நிலையத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் கையில் மலர் வளையத்துடன் காத்திருந்தார். சாஸ்திரியின்மரணச் செய்தியை அறிந்ததும், காங்கிரஸ் தலைவர் காமராஜர் விமானம் மூலம்டெல்லிக்கு விரைந்தார். சாஸ்திரி உடல் வந்து சேருவதற்கு முன்பே டெல்லியைஅடைந்து, விமான நிலையத்தில் காத்திருந்தார் காமராஜர்.
No comments:
Post a Comment