=======================================================
மாவட்டச் செயற்குழுக் கூட்டம்
தஞ்சை - 09-12-2017
======================================
இன்று மாலை 3 மணிக்கு NFTE மாவட்டச் சங்க அலுவலகத்தில் A.K. தனபாலன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். மாநில அமைப்புச் செயலர் தோழர். C.V. தங்கையன் அவர்களும் பங்கேற்றார்.
கூட்டத்தில் மாவட்டச் செயலர் தோழர் V. சாமிநாதன் அவர்கள் எதிர்கால திட்டங்களையும், செயல்பாடுகளையும் விளக்கி கீழ்க்கண்ட தீர்மானங்களை முன்மொழிந்தார். தீர்மானங்கள் அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. 1-04-17 முதல் 30-11-2017 வரையிலான தோராயமான வரவு செலவுக்கு
கணக்கு வாசிக்கப்பட்டது.
2. அகில உலக மகளிர் தினத்தை சென்ற ஆண்டை விட சிறப்பாக
நடத்துவது. விழாவுக்கு அகில இந்தியத் தலைவர் தோழர். P.S.
ராமன்குட்டி அவர்களை அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
3. மகளிர் தின விழாக்குழு தோழியர் மல்லிகா சுகுமாரன் அவர்கள்
தலைமையில் என்றும் தோழர். க. அய்யனார் அவர்கள் துணை
நிற்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
விழாவிற்கு நமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களை
அழைப்பது என்றும், மாவட்டத்தில் பணியாற்றும் முன்னணி மகளிர்
ஊழியர்களை பங்கேற்க வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
4. அனைவரையும் வரும் மார்ச் 2018 க்குள் ஆயுள் சந்தா உறுப்பினராக
மாற்றுவது என்பதும் முடிவு..
5. ஒரிசா மாநிலம் பூரியில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டு
நிதியாக உறுப்பினர் ஒவ்வொருவரிடமிருந்தும் ரூபாய் 50 வாங்கி
அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டது..
6. பட்டுக்கோட்டை கிளை தனியாக இயங்க வழிகாட்டுதல்
கொடுக்கப்பட்டது. முதல் நான்கு மாதங்கள் கூட்டங்களை முறையாக
நடத்துவது என்றும், கூட்டத்திற்கு மாவட்டச் செயலரை,
பொறுப்பாளர்களை அழைப்பது என்றும், கூட்டச் செலவை மாவட்டமே
ஏற்றுக் கொள்ளும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
7. அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு
வருகிற 12,13 ல் ஊதிய மாற்றம் கோரி நடத்தும் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பது.
நகரின் 3 இடங்களில் நமது சங்கத்தின் சார்பில் ப்ளெக்ஸ் வைப்பது.
வருகிற 12 ம் தேதி காலை 10 மணிக்கு மேரீஸ் கார்னர் இணைப்பக
வாயிலில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும்
தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment